Tag: பிரியா பவானி சங்கர்
ஆபாச கேள்வி… பதிலடி கொடுத்த பிரியா பவானி
ஆபாச கேள்வி… பதிலடி கொடுத்த பிரியா பவானி
பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி சங்கர், நெட்டிசன் ஒருவர் கேட்ட ஆபாச கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
ஆபாச கேள்வி… பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர்
. இவர் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கிறார்.
வழக்கமா இதுமாதிரியான சூழல்களில் நடிகைகளை கடுப்பேற்றும் படியான கேள்விகளை சிலர் கேட்பதுண்டு.
அந்த வகையில் நெட்டிசன் ஒருவன், உங்களது உள்ளாடை சைஸ் என்ன என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
பிரியா பவானி சங்கர்
இதற்கு பதிலளித்த பிரியா, “மார்பகங்களை நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கு அது உள்ளது” எனக்கூறி
தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருது.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?
பிரியா பவானி சங்கர்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து மற்றும் நதியா சங் வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் படத்தின் புரமோஷனுக்காக அங்கு செல்ல உள்ளதாக
கூறப்படுகிறது. பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் வருகிற அக்டோபர் 22-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அப்படத்தின் புரமோஷனுக்காகத் தான் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாராம். அவருடன் நடிகர் ஹரீஷ் கல்யாணும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பை வாங்கிக்கோங்க… பிரியா பவானி
அன்பை வாங்கிக்கோங்க… பிரியா பவானி
யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. ஒரு முடிவெட்டும் தொழிலாளியை அசிங்கமாக நடத்தும் கிராமம். ஆனால், அவனுக்கு ஓட்டு இருக்கிறது என
தெரிந்தவுடன், அந்த ஒரு ஓட்டுக்காக அவனை என்னவெல்லாம் செய்கிறார்கள் என இந்திய அரசியலையே ஒரு திரைப்படத்தில் காட்டியிருந்தனர்.
இப்படத்தை மடோனா அஸ்வின் எனும் இளம் இயக்குனர் இயக்கியிருந்தார். இப்படம் திரை
விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. யோகிபாபுவின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.
பிரியா பவானி சங்கர் – யோகி பாபு
இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பக்கத்தில் ‘யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம்
‘மண்டேலா’. மடோனா அஸ்வின், யோகிபாபு அண்ணா.. என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம்’ என பதிவிட்டுள்ளார்.






