Tag: பாராளுமன்றில்
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்வி
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றில் இன்று எழுப்பிய கேள்வி ,நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் இன்று (05) எழுப்பிய கேள்வி.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இலக்கம் 2-11/25/01 மூலம், 2025 மே 23 க்கு முன்பு தாபிக்கப்பட்ட சகல இளைஞர் கழகங்களின் சட்டப்பூர்வத்தன்மையையும் இரத்துச் செய்து,
புதிய இளைஞர் கழகங்களை தாபித்தல்
புதிய இளைஞர் கழகங்களை தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சகல இளைஞர் கழகங்களும் அரசியல்மயமாக்கலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, அரசியல் நலன்களின் அடிப்படையில் இளைஞர் கழகங்களுக்கு நிறைவேற்று தர உத்தியோகத்தர்களை நியமிக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இளைஞர் கழக அமைப்பினது இறையாண்மை மற்றும் ஜனநாயக செயல்பாட்டை ஆபத்தில் ஆழ்த்தி, புதிய கட்டளைகள் மூலம் தமது அரசியல் கூட்டாளிகளுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியாக இது
தெரிகிறது. எனவே, இது தொடர்பாக அரசாங்கம் இந்த சபையில் விளக்கத்தை வழங்க வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்துகிறேன்.
இதன்பிரகாரம், பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.
- தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் இலக்கம் 2-11/25/01 இன் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் கீழ், புதிய இளைஞர் கழகங்களை தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் நடவடிக்கைகளின் போது இளைஞர் கழகங்கள் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?
- அவ்வாறில்லையெனில், நாட்டில் காணப்படும் பல இளைஞர் கழகங்களில் (களுத்துறை, பொலன்னறுவை, பதுளை, கேகாலை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா, கொழும்பு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில்) நிறைவேற்று தர உத்தியோகத்தர் பதவிகளுக்கு தனது அரசியல் கூட்டாளிகளை மட்டுமே நியமிக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருவதானது அரசாங்கம் இளைஞர் கழகங்களை அரசியல்மயமாக்குவதைக் குறிக்காதா?
- அல்லது, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் 2025.05.16 திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட கடிதத்தின் மூலம் 2025.05.23 க்கு முன்னர் தாபிக்கப்பட்ட சகல இளைஞர் கழகங்களின் சட்டபூர்வமான தன்மையையும் இரத்துச் செய்து, புதிய இளைஞர் கழங்களைத் தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் நடவடிக்கையில் அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் யாது?
- சகல இளைஞர் கழகங்களுக்கும் பொருந்தக்கூடிய நிலையியற் கட்டளைத் தொகுப்பை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்வைத்துள்ளதா? அந்த நிலையியற் கட்டளைகள் இந்தச் சபையில் சமர்ப்பிக்கப்படுமா?
- தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் முன்வைக்கப்பட்டுள்எ புதிய நிலையியற் கட்டளைகள் மூலம் இளைஞர் கழகத்தில் நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர் பதவியை வகிப்பதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் செயற்பாட்டு உறுப்பினராக
- இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதா? இது வெறுமனே தமது அரசியல் கூட்டாளிகளை இளைஞர் கழகங்களின் நிறைவேற்று தர பதவிகளுக்கு நியமிப்பதற்கு எடுத்த செயல்முறையல்லவா? இளைஞர் கழக யாப்பை மீறும் செயலாக இதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?
கிராம சேவைப் பிரிவுகளிலிருந்து மேல் நோக்கி மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் கால் பதிக்க இளைஞர்களுக்கு களமமைத்த இந்த இளைஞர் கழங்கள் கட்சி சார்பின்றி செயல்பட்டன. எந்த இளைஞரும் இதில் இணைந்து
கொள்ளும் நிலை காணப்பட்டது. கட்சி பேதங்கள் இல்லாமல் செயல்பட சிறந்த தீர்வு இளைஞர் சம்மேளனங்களும் இளைஞர் பாராளுமன்றத்தையும் ஒன்றிணைத்து அரசாங்கம் 150 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கினாலும், 450
மில்லியன் ரூபா மதிப்பு
மில்லியன் ரூபா மதிப்புள்ள திட்டமாக இது மாற்றப்பட்டது. கிராமத்துக்கு ஒரு கோடி திட்டத்தின் கீழ் 4500 இலட்சம் ஒதுக்கப்பட்டாலும், 9000 இலட்சம்
மதிப்புள்ள சேவைகள் இதன் மூலம் ஆற்றப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றில் சண்டை அரிசி தட்டுப்பாடு
பாராளுமன்றில் சண்டை அரிசி தட்டுப்பாடு
பாராளுமன்றில் சண்டை அரிசி தட்டுப்பாடு,இலங்கையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு காரணமாக விளங்கியது கடந்தகால ஜனாதிபதி என பாராளுமன்ற இடம் பெற்றுள்ளது.
ஜனாதிபதியாக விளங்கிய ரணில் விக்ரமசிங்க அவருடைய ஆட்சிக் காலத்திலேயே இலங்கை நாடெங்கும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட காரணம் என எம்பி ஒருவர் ஒருவர் முள்ளங்கி தள்ளினார்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சிவப்பு அரிசி தட்டுப்பாடு காரணமாக விளங்கியது இவரது அரசு அது என்ன ஒரு குற்றம் சாட்டினார்.
இலங்கை ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியாக விளங்கிய ரணில் விக்ரமசிங்க அவருடைய ஆட்சிக் காலத்திலேயே இந்த சிவப்பு அரிசி தட்டுப்பாடு ஏற்பட காரணமாக அமைந்ததாக எம்பி முழங்கினார்.
பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை அதிலிருந்து மீள முடியாத நிலையையும் அவரை உருவாக்கியவர் என்பது இவரது கூற்று.
இதனை அடுத்து எந்த தாக்குதல் சம்பவம் பாராளுமன்றில் இடம்பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள காணொளிகளை பார்க்கும் நோக்குகின்ற பொழுது காணப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில்
முள்ளிவாய்க்கால் நினைவுதினம் பிரிட்டன் பாராளுமன்றில் இன்று இடம்பெறுகிறது .
பிரிட்டன் எதிர்கட்சியாக விளங்கும் தொழில் கட்சியின் மிக முக்கிய அமைச்சர்கள் எம்பிக்கள் கலந்து கொள்ளும் இந்த கூட்ட தொடரில் முக்கிய முடிவுகள் எட்ட படும் என எதிர் பார்க்க படுகிறது .
தமிழ் இனஅழிப்பு
தமிழ் இனஅழிப்பு இடம்பெற்று 14 வருடங்கள் கழிந்துள்ள பொழுதும் , இதுவரை பாதிக்க பட்ட தமிழருக்கான தீர்வு எட்டப்படவில்லை .
அதனை அடுத்து பிரிட்டன் பாரா ளுமன்றில் இடம்பெறும் இந்த நினைவு கூறல் கூட்ட தொடர்பில் ,பாதிக்க பட்ட தமிழருக்கான முள்ளிவாய்க்கால் நினைவுதினமாக இது அமைய பெறும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரும் அதனால் ஏற்படுத்த பட்ட இன நிலை நிலையில் ,தற்பொழுது அது போன்று தமிழருக்கான அரசியல் விடுதலை பெற்று தர வேண்டும் என எதிர் பார்க்க படுகிறது .
ஒன்று பட்டு தமிழ் அரசியல் கட்சிகள் செயல் படுகின்ற பொழுது தான் ,தமிழருக்கான தீர்வும் ,விடுதலையும் கிட்டும் என உலக மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர் .
பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை மிக கொடூரமாக கொன்று குவித்து வருகிறது .கொலையை கண்டித்து பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரையாற்றினார் .
பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற நக்பா படுகொலை
வரலாற்றியல் தொட்டு நிகழ்கால நிலவரங்கள்வரை மிக பேசியுள்ளார் .செல்வராசா கஜேந்திரன் ஆற்றிய உரையில் ,பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற நக்பா படுகொலை எவ்வாறான கொடூர செயல் என எடுத்துரைத்தார் .
மிகவும் உணர்ச்சி பூர்வாமாக செல்வராசா கஜேந்திரன் ஆற்றிய பேச்சு வலி தோய்ந்த பாலஸ்தீன மக்களின் குரலாக காணப்பட்டது .
முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுகக்கீம் இலங்கை பாராளுமன்றில் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து செல்வராசா கஜேந்திரன் தனது பேச்சை ஆற்றினார் .
இலங்கை புரிந்த படுகொலை
300 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தமிழர் தாயாக பகுதியில் இலங்கை புரிந்த படுகொலைக்கு ஏன் நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினார் .
தமிழர் மனங்களில் எழுகின்ற கேள்வியை பாரளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் எழுப்பியுள்ளது உலக தமிழர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
அந்த உரையையினை கேட்பதற்கு கீழே இணைப்பு வழங்க பட்டுள்ளது .
வெடுக்குநாறிமலை சம்பவம் – பாராளுமன்றில் அமைதியின்மை
வெடுக்குநாறிமலை சம்பவம் – பாராளுமன்றில் அமைதியின்மை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பாராளுமன்றில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவிலில் பொலிஸாரினால் 8 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சபையின் பணிகள் சில நிமிடங்கள் தடைபட்டதுடன், சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்ததையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் போராட்டத்தை கைவிட தீர்மானித்தனர்.
பாராளுமன்றில் கட்சி தாவல் அறிகுறி
பாராளுமன்றில் கட்சி தாவல் அறிகுறி
புதிய வருடத்தில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் நாளில் பாராளுமன்றத்தில் காட்சி தாவல்கள் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் ஆளும் கட்சிக்கு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தனர்.
இதன் அடிப்படையில் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கட்சி தாவல் தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றில் கட்சி தாவல் அறிகுறி
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள அந்த குழு தயாராக இருப்பதாகவும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கிடையில், அரசாங்கம் கலைக்கப்படும் என பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனமும் அதன் மீது திரும்பியுள்ளது.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு கட்சி தாவல்கள் துரித கதியில் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
18 அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதிய கூட்டணிக்கு முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரனோ நிலவரம் பாராளுமன்றில் விவாதம்
கொரனோ நிலவரம் பாராளுமன்றில் விவாதம்
ஓகஸ்ட் 30ஆம் திகதி முதல் நாடு பூராவும் அமுல்படுத்தப்பட்டுள்ள
அவசரகால நிலைமை குறித்து, பாராளுமன்றத்தில் இன்று (06)
விவாதிக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்வதற்காக அவசர கால
நிலைமை நாடளாவிய
ரீதியில் அச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
என்பதுடன் அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இன்றையதினம் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டிருந்த
வாய்மூல விடைக்கான
வினாக்களுக்கு பிரிதொரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது
என பாராளுமன்ற தொடர்பாடல் அலுவலகம் அறிவித்துள்ளது.

























