Tag: பஸ்
விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை
விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை: 1205 பஸ்கள் பரிசோதனை
மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 369 பயணிகள் போக்குவரத்து
பஸ்களின் சாரதிகள் மற்றும் 67 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்களின் சாரதிகளுக்கும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் 581 கடைகளின் உரிமையாளர்களுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் நேற்று பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பதை கண்டறியவே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தேடுதல் நடவடிக்கையில் 437 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மற்றும் 998 பயணிகள் பஸ்கள்
207 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் மற்றும் 1290 சில்லறை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் சிறிய கடைகள் ஆகியன பரிசோதனை செய்யப்பட்டன
மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்
மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்
மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஆகஸ்ட் மாதம்
முதலாம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.
இன்று(16) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இதனடிப்படையில், நாளை (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும்.
இருப்பினும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட வகையில் பஸ் மற்றும்
ரயில் களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கi மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம மேலும் தெரிவித்தார்
27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில் , பஸ்கள் சேவைகள் இரத்து – போக்குவரத்து முடக்கம்
27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில் , பஸ்கள் சேவைகள் இரத்து – போக்குவரத்து முடக்கம்
நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பயணிகள் ரயில்கள்; எதுவும் சேவைகளில் ஈடுபடாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
சரக்கு மற்றும் எரிபொருட்களை எடுத்துச்செல்லும் ரயில்கள் மாத்திரம் இக்காலப்பகுதயில்
சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் டப்ளியு.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ,பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் இடம்பெறாது.கடந்த காலத்தில் இடம் பெற்றது போன்று அத்தியாசிய
சேவைகளுக்காக செல்லும் பொது மக்களுக்காக மாத்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான
பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் யு.ர்.பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்தார்
யாழ் தீவுகளுக்கு புதிய பஸ் சேவைகள்
வடக்கிலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த
பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தீவகங்களில் தற்போது மிகப்பழைய பஸ்களே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.
புதிய பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை கிடைத்தவுடன் அவற்றைத் தீவுகளில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கில் போக்குவரத்துக்கான குழுவை விரைவில் ஸ்தாபித்து, அதற்குத் தேவையான வசதிகளையும்
ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து சேவையில் பற்றாக்குறை நிலவுவதாகவும் கஷ்டப்
பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்..
பஸ்ஸில் பிட்பொக்கட் திருடனை மடக்கி பிடித்த மக்கள்
பஸ்ஸில் பிட்பொக்கட் திருடனை மடக்கி பிடித்த மக்கள்
திருகோணமலையிலிருந்து கண்டிக்குச் சென்ற பயணிகள் பஸ்ஸில் பிட்பொக்கட் அடித்த ஒருவரை பொது மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூதூர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரேயே பயணிகள் பிடித்து கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:
திருகோணமலையிலிருந்து நேற்று (21) மாலை 4.00 மணிக்குச் கண்டிக்குச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ்ஸில் நான்காம் கட்டையிலிருந்து ஏறிய
சந்தேக நபர் பஸ்ஸில் தூங்கிய பிரயாணி ஒருவரின் பணப்பொதியை திருடிய வேளை மற்றொருவர் கண்டு கூக்குரலிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பயணிகள் சந்தேக நபரை பிடித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தொடர்பாக திருகோணமலை, கந்தளாய் மற்றும் தம்பலாகாமம் போன்ற பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுகாதார விதிமுறைகளை மீறிய 30 தனியார் பஸ்களின் போக்குவரத்து அனுமதி இரத்து
சுகாதார விதிமுறைகளை மீறிய 30 தனியார் பஸ்களின் போக்குவரத்து அனுமதி இரத்து
சுகாதார விதிமுறைகளை மீறிய 30க்கும் மேற்பட்ட தனியார் பஸ்
வண்டிகளின் போக்குவரத்து அனுமதி அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்துகளில் பயணிகள் இருக்கையில் அமராமல் நின்று பயணம்
செய்வதற்கும் சுகாதாரத்துறை அனுமதியளித்ததுடன் பஸ் கட்டணங்களை மீண்டும் முந்திய நிலைக்கு கொண்டு வர
நடவடிக்கை எடுப்பதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பஸ்ஸில் பாலியல் சில்மிஷம்: 24 வயது இளைஞன் கைது
பஸ்ஸில் பாலியல் சில்மிஷம்: 24 வயது இளைஞன் கைது
களுத்துறையில் இருந்து அளுத்கம பகுதிக்கு, பொதுப் போக்குவரத்து
பஸ்ஸில் பயணம் செய்த, அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 49 வயதுடைய
பெண் ஒருவரிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞனை, அளுத்கம பொலிஸார் இன்று (30) கைதுசெய்துள்ளனர்.
பஸ்லில் பயணம் செய்யவாறே, பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்துக்கு
அறிவித்துள்ளார். இதனையடுத்து, அளுத்கம பொலிஸார் பஸ்ஸை இடைநிறுத்தி,
பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கித்துல்கல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்,
சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் அவர் பணியாற்றி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இடிந்து விழும் நிலையில் பஸ் நிலையம்
இலங்கையில் =-இடிந்து விழும் நிலையில் பஸ் நிலையம்
துண்டாடப்படும் பயணிகளின் பஸ் நிலையம்
கண்டி நுவரெலியா பிரதான பாதையில் தவலந்தன்ன நகரத்தில் காணப்படும் பஸ் நிலையமே இது.
இந்த பஸ் நிலையமானது பல நூறு வருடங்களாக மக்களின் போக்குவரத்துக்காக பாவிக்கபட்டு வருகின்றது.
இந்த பஸ் நிலையத்தை வீதி போக்கவரத்து அதிகாரபை நிர்வகித்து வந்த போதும் தற்போது பஸ் நிலையம் உடைந்த நிலையில் மக்களின் தேவைக்கு ஏற்ப செயற்படாமல் காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த பஸ் நிலையத்தில் நுவரெலியா வெளிமடை கதிர்காமம் பண்டாரவலை பதுளை போன்ற நகரங்களுக்கு
செல்லும் அனைத்து பிரதான பஸ்களும் மேலும் அருகில் உள்ள சிரிய நகரங்களுக்கும் பல கிராமங்களுக்கும் செல்லும் பஸ்களும் நிருத்தப்படுகின்றன.
இந்த நகரத்திற்கும் அருகில் உள்ள பதிய நகரமான கொத்மலை நகரத்திற்கும் நாளாந்தம் பிரதேச மக்கள்
தங்கள் தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கும் ஆயிரம் கணக்கில் வந்து செல்கின்றனர்.
இந்த நகரத்தில் பிரதேச செயலகம்¸ பொலிஸ் நிலையம்¸ தபால் காரியாலயம்¸ கமத்தொழில் காரியாலயம்¸ போன்ற அரச மற்றும் தனியார் காரியாலயங்களும் அரச மற்றும் இடிந்து விழும்
வங்கியும் பலதரப்பட்ட வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றன. இவற்றின் தேவைகளுக்காக வருபவர்கள் தங்களின் ஊர்களுக்கு பஸ்சிற்காக இந்த பஸ்
நிலையத்திலேயே காத்து நிக்கின்றனர். மழை காலங்களில் நிற்க கூட முடியாது. இந் நிலையில் இதனை திருத்தி அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..







