நேபாளத்தில் நீதிபதி பிரதமராகிறார்
Posted in உலக செய்திகள்

நேபாளத்தில் நீதிபதி பிரதமராகிறார்

நேபாளத்தில் நீதிபதி பிரதமராகிறார்

நேபாளத்தில் நீதிபதி பிரதமராகிறார் .ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை Judge becomes Prime Minister in Nepal

முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதி​ராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது.

நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது.

அவருடன் சேர்ந்​து, நாட்​டின் அதிப​ராக இருந்த ராம்​சந்​திர பவுடேலும் ராஜி​னாமா செய்​தார். இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்​தில் நிலவி வரும் அரசி​யல் பதற்​ற​மான சூழ்​நிலை காரண​மாக சட்​டம்​ – ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது.

மேலும், நாட்​டின் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்​வேறு பகு​தி​களில் வன்​முறைச் சம்​பவங்​கள் தொடர்​கின்​றன. ஊழல் அரசியல்வாதிகளின் வசிப்பிடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

நேபாளத்​தில் அமைதி திரும்​பாத நிலை​யில், பல்​வேறு நகரங்களில் ஊரடங்கு உத்​தரவு அமலில் உள்​ளது.

காத்​மாண்டு முழு​வதும் போலீ​ஸாரும், ராணுவத்​தினரும் குவிக்​கப்​பட்​டு, கண்​காணிப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்​.

இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி? – நேபாளத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பிரதிநிதியினரை, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

4 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, சுசீலா கார்கியை, இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்ததாக பார் அசோசியேஷன் செயலர் தெரிவித்தார்.

எனவே, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக விரைவில் நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் பின்புலம் ஏதுமில்லாதவர், நடுநிலையாகவும் நம்பகத்தன்மையுடன் செயல்படக் கூடியவர் என்ற அடிப்படையில் அவரை ‘டிக்’ செய்ததாக ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டக்காரர்களில் விருப்பப்படி, இடைக்கால பிரதமர் பொறுப்பை ஏற்க முன்வந்துள்ள சுசீலா கார்கி, நேபாளத்திலுள்ள பிராட் நகரில் 1952-ல் பிறந்தார்.

இவர் தனது முதுநிலை படிப்பை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார்.

அதன் பின்னர் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017 வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சுசீலா கார்கி, தேர்தல் விவகாரம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர்.

நீதித் துறை மூலம் ஜனநாயகத்தைக் காப்பவர் என்று போற்றப்பட்டவர். இவருக்கு எதிராக நேபாள பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம்

கொண்டுவரப்பட்டு, மக்களின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்ட வரலாறும் உண்டு.

நேபாளத்தில் அரசுஅதிகாரிகளை விரட்டிய மக்கள்
Posted in விசேட செய்திகள்

நேபாளத்தில் அரசுஅதிகாரிகளை விரட்டிய மக்கள்

நேபாளத்தில் அரசுஅதிகாரிகளை விரட்டிய மக்கள்

நேபாளத்தில் அரசுஅதிகாரிகளை விரட்டிய மக்கள்,இவர்களை அரச கட்டடங்களிலிருந்து மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது .People who drove out government officials in Nepal

கயிற்றில் அந்தரத்தில் தொடங்கியபடி உலங்குவானூர்தி Helicopter launched from a gap in the rope

இவர்கள் கயிற்றில் அந்தரத்தில் தொடங்கியபடி உலங்குவானூர்தி மீட்டுச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.

போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு இவர்களை கடுமையாக தாக்கின.

உயிர் தப்பித்துக் கொள்வதற்காக To save your life

அதிலிருந்து உயிர் தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் கட்டிடங்களிலிருந்து தப்பிக்க முடியாதவாறு தத்தளித்து கொண்டிருந்தார்கள்.

அங்கு விரைந்து வந்த உலங்குவானூர்தி கயிற்றை கட்டி அதனூடாக அவர்களை காப்பாற்றி சென்றது.

இது போன்ற நிலை இலங்கையிலும் வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.

இந்தப் போராட்டங்கள் மிகப்பெரும் எச்சரிக்கையாக இலங்கை போன்ற நாடுகளுக்கும் உள்ளதை காண முடிகிறது.

நேபாளத்தில் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் நிலநடுக்கம் ,நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள பைரவ்குண்டா பகுதியில் இன்று அதிகாலை 2.51 அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலஅதிர்வு இந்தியா, திபெத் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது