யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் வீட்டினை சேதப்படுத்தி தீவைத்து ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தது.

இது தொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸராரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 5 சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ. மேனன் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றி பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது.

சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு பகுதிகளைச் சேர்ந்த 24 தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்டப்டனர்.

மேலும் மூன்று சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

இலங்கையில் வாடகைக்கு வாகனத்தை கொள்வனவு செய்து அந்த வாகனங்களை திருப்பி கொடுக்காது கொள்ளையடித்து வந்த திருட்டு கும்பல் ஒன்று கைது செய்ய பட்டுள்ளது

இவ்வாறு வாடகைக்கு பெற படும் வானங்களை கொள்ளையடித்து அதனை பல்வேறு பகுதியில் விற்பனை புரிந்து வந்துள்ளனர்

இவர்களினால் வாடகைக்கு பெறப்பட்ட ஐந்து மகிழுந்துகள் ,இரண்டு சிற்றூர்திகள் ,ஜீப் ஒன்றும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து நடத்திய தேடுதலின் பொழுது வாடகை வானங்களை கொள்ளையடித்த குழு சிக்கியது

இலங்கையில் இவ்வாறு வாடகைக்கு பெறப்படும் வானங்களை கொள்ளையடித்து வந்த குழுக்கள் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டனர்

இலங்கையில் பெருகிவரும் குற்ற செயல்களில் இந்த வகையான வாடகை வாகனங்கள் கொள்ளையடித்தல் முதன்மை பெறுகிறது

தற்காலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காலத்திலும் வாடகை வாகனங்கள் கொள்ளையடிக்க பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கைதான வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

கைது செய்ய பட்ட நபர்கள் வாயிலாகவே மேலும் பல திடுக்கிக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

வாடகை வாகனங்களை கொள்ளையடித்த நபர்கள் கைது

போலீசாரின் நீண்ட நாள் தேடுதல் வலைக்குள் கொண்துவரப்பட்ட பின்னர் இந்த நபர்கள் கைது இடம்பெற்றுள்ளது

தற்போது வீதியெங்கும் இராணுவம் போலீசார் குவிக்க பட்டு தேடுதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இவ் வ்வேளை குற்றவாளிகள் கைது வேட்டையும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வாடகை வாகனங்களை கொள்ளையடித்து அதன் மூலம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக இவர்கள் பெற்று வந்துள்ளனர்

வாடகை வானங்களை கொள்ளையடித்து விற்பனை புரிந்த இவர்களோடு கூட்டு வைத்து செயல் பட்ட வாகன திருத்தும் நபர்கள் சிலரும் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

வாடகைக்கு ஆடம்பர வாகனங்களை கொள்வனவு செய்து அதன் ஊடக தம்மை செல்வந்தர்களாக காண்பிக்கும் சிலர் இவ்வாறான நூன த முறை கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்

விடயம் அறியாத மக்கள் சிலரும் இவ்வாறான வடக்கை வாகனங்களை பெற்று திருட்டு குற்றத்தில் அவர்களும் சிக்கி விடுகின்ற சம்பவங்களும் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

  • வன்னி மைந்தன் –