Tag: கைது
விமானத்தில் அமர்ந்திருந்தவர் கைது
விமானத்தில் அமர்ந்திருந்தவர் கைது
புறப்படுவதற்கு தயாரா இருந்த விமானத்தில் அமர்ந்திருந்த வத்தளை-ஹெந்தல பிரதேசத்தைச் சே்ந்த எச்.பீ.சுதாகர் இந்திரஜித் என்பவர் கைது
செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் துரிதமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா கட்டளையிட்டுள்ளார்.
விமானத்தில் அமர்ந்திருந்தவர் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குள் இரகசியமாக உள்நுழைந்த நபர், ஜப்பானை நோக்கி பயணிக்க விருந்த விமானத்துக்குள் ஏறியே இவ்வாறு பயணிக்க விருந்தார் என்பது விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது.
சந்தேகநபர் ஜப்பானில் தொழில்புரிந்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்வதற்காக இலங்கைக்குத் திரும்பியுள்ளார். ஜப்பானுக்கு மீண்டும் செல்வதாக தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு, செப்டெம்பர் 30ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
எனினும், ஜப்பானுக்குச் செல்வதற்கான எந்தவோர் ஆவணமும் சந்தேகநபரிடம் இல்லையென நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
இலங்கை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக விளங்கிய சரவணராஜா,
நாட்டை விட்டு தப்பி சென்றார் .இவ்வாறு சென்றவரை இண்டர்போல் பிடியாணை மூலம் ,கைது செய்ய நடவடிக்கை .மேற்கொள்ள படுகிறது .
நீதி வழங்கிய நீதிபதி ஒருவரை கேவல படுத்தும் முகமாக ,இலங்கை நீதித்துறையின் கருத்துக்கள் காணப்படுகின்றன .
குற்றாவளி போன்று சித்தரிக்க பட்டு ,நீதிக்கு புறம்பாக ,துரோகம் செய்தார் ,
என்ற வகையில் ,சிங்கள பெரும்பான்மை இனம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறது .
சமாதான நாயகனாக தன்னை காண்பித்து வந்த,
குள்ள நரி ரணில் தந்திரம் இப்பொழுது அம்பலமாகியுள்ளது .
ராஜபக்ஸ குடும்பத்தின் வாரிசாக மற்றம் பெற்றுள்ள ரணில் ,
தமிழர்களினால் துரத்தியடிக்க படவேண்டியவர் தான் என்பதை ,
நீதிபதியின் நாடு விட்டு வெளிறிய செயல் எடுத்து காட்டுகிறது .
இண்டர்போல் உதவியுடன் நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை
மக்கள் ஆதரவை பெற்றுக்கொள்ள ரணில் நடத்த போகும் நாடகங்கள் ,
வரும் நாட்களில் அரங்கேறும்
அவை வாக்கு அரசியலாக மாற்றுவதற்கு ரணில் முயல்வார் என்பதை ,
இப்பொழுதே அடித்து கூறலாம் .
தமிழ் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதும் ,அவர்கள் எமது அடிமைகள் தான் என்பதை ,சிங்கள தேசம் சொல்லி கொள்கிறது என்பதே ,நீதிபதி சராவணராஜா ,உயிர் அச்சுறுத்தல் ,விரட்டியடிப்பு கற்பிக்கிறது எனலாம் .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது
மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது
மலேசியாவில் மூன்று தமிழர்களை மிக கோரமாக கொலை செய்து நிர்வாணமாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்க பட்டிருந்தமனித சடலங்கள் மீட்பு கொலையாளிகள் கைது .
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிக கோரமாக படுகொலை செய்ய பட காரணம் என்ன என்பது தொடர்பாக போலீசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .
இதில் இலங்கை தம்பதிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் .
வீட்டில் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து பொலிசாருக்கு தெரிவிக்க பட்டது அடுத்து , விரைந்து வந்த போலீசார் வீட்டை சோதனை செய்த பொழுது,மூன்று சடலங்கள் கண்டுபிடிக்க பட்டன .
மேலும் கொலையை புரிந்து விட்டு அருகில் உள்ள காட்டுக்குள் மறைந்திருந்த நபர்களும் கைது செய்ய பட்டனர் .
மலேசியாவில் நிர்வாணமாக தமிழர் சடலங்கள் கொலையாளிகள் கைது
குறித்த கொலை குற்ற செயல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
கொலை செய்யப்பட்ட நபர்களில் ஒருவர், அவர்களது மகன் என தெரிவிக்க படுகிறது .
நிர்வாணமாக மீட்கப் பட்ட சடலம் ஒன்று தொடர்பாக, பல சந்தேகங்கள் எழுப்ப பட்டுள்ளதால் ,விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளன .
இதுவரை இந்த கொலைக்கான கரணம் என்ன என்பது தொடர்பில், குற்ற புலனாய்வு துறையினர் தெரிவிக்கவில்லை .
நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் ,பல திடுக்கிடும் விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி
- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை
- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்
- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா
- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை
வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது
வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (26) தெரிவித்தனர்.
மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேரூந்தில் முருங்கன் பகுதியில் இருந்து ஆசிரியரான பெண் ஒருவரும் பயணித்துள்ளார்.
குறித்த பேரூந்து வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாக பயணித்த போது குறித்த பெண் பேரூந்தில் இருந்து இறங்கியுள்ளார்.
இதன்போது குறித்த பெண்ணின் கைப் பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் காணாமல் போனமையை அவதானித்துள்ளார். உடனடியாக பேரூந்தை நிறுத்தி பேரூந்தில் தேடிய போதும் நகை கிடைக்கவில்லை.
இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார்.
வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது
முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிலக வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரத்நாயக்கா தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திஸாநாயக்கா (37348), திலீப் (61461), பொலிஸ் கான்டபிள்களான உபாலி (60945), தயாளன் ( 91792), இரேசா (11643) உள்ளிட்ட குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதனை போது குறித்த சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களும் ஆக 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்டதாக கூறப்பட்ட 20 பவுண் நகை, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பறப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணையின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவிby நிருபர் காவலன்
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிby நிருபர் காவலன்
பெண் ஒருவரை கடத்திய இருவர் கைது
பெண் ஒருவரை கடத்திய இருவர் கைது
பெண்ணொருவரை கடத்திச் சென்று கப்பம் பெற முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, 9 மில்லிமீற்றர் துப்பாக்கியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
கட்டுனேரிய – லான்சிகம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 24ஆம் திகதி சிலரால் கடத்தப்பட்டார்.
குறித்த பெண்ணின் கணவர், தனது மனைவியை சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை விடுவிக்க பணம் வழங்க வேண்டும் என கடத்தல்காரர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும் மாரவில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பெண் ஒருவரை கடத்திய இருவர் கைது
கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட மாரவில பொலிஸார், கொச்சிக்கடை – தலுவாகொடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த பெண்ணைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (25) மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கடத்தப்பட்ட குறித்த பெண், 08 பேரிடம் தலா 10 இலட்சம் ரூபா வீதம் பணம் பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இதுவே அந்த பெண் கடத்தப்பட்டமைக்கான காரணமாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
by நிருபர் காவலன் - பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
by நிருபர் காவலன் - பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
by நிருபர் காவலன் - மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
by நிருபர் காவலன்
யாழில் வாளுடன் வாலிபன் கைது
யாழில் வாளுடன் வாலிபன் கைது
யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பிரதேசத்தில் வாளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்
குடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது உடைய இளைஞரையே நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
- கணவரை கத்தியால் குத்திய மனைவிby நிருபர் காவலன்
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிby நிருபர் காவலன்
சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு கைது
சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு கைது
13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் போகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள ரஜமஹா விகாரை ஒன்றில் வாழ்ந்து வரும் பிக்கு எனத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரான பிக்கு விகாரையில் வசிக்கும் சிறுவன் ஒருவரை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு கைது
குறித்த தகவல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எஹெட்டுவெவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி, எஹெட்டுவெவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
by நிருபர் காவலன் - பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
by நிருபர் காவலன் - பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
by நிருபர் காவலன் - மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
by நிருபர் காவலன்
கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய சிறை அதிகாரி கைது
கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய சிறை அதிகாரி கைது
பொரளை மற்றும் கலபிடமடை ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களுக்கு
அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படும் கொழும்பு விளக்கமறியலின் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டில் பயணப் பை, ஒரு ஜோடி கறுப்பு காலணிகள், நீல துண்டு, வெள்ளை நிற அரை காற்சட்டை, தொப்பி, கையடக்கத் தொலைபேசி, மோட்டார் சைக்கிளின் சாவி மற்றும் அடையாள அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி கலபிடமடை துனுமலை பகுதியில் வாகனத்தில் பயணித்த வேரகொட ஆராச்சிலாகே சரத் வேரகொடவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளை
செலுத்தியமை தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி வரகாபொல நியந்துருபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சிறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
கொலையாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய சிறை அதிகாரி கைது
இதற்கு மேலதிகமாக, இந்த வருடம் மே மாதம் 20 ஆம் திகதி துப்பாக்கியால் சுட்டு மனித கொலையை செய்த “வானத்தே சுட்டாங்” என்ற சந்தேகநபருக்கும் இன்னுமொரு அடையாளம் தெரியாத சந்தேகநபருக்கும் தங்கியிருப்பதற்காக
குறித்த சிறை அதிகாரிக்கு சொந்தமான இராஜகிரிய நாவல அவென்யூவில் உள்ள தனது மூன்று மாடி வீட்டின் மூன்றாவது மாடியை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா, நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அன்ஸ்லம் டி சில்வா ஆகியோரின் பணிப்புரையின் பேரில்,
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
- கணவரை கத்தியால் குத்திய மனைவிby நிருபர் காவலன்
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிby நிருபர் காவலன்
திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல் அறுவர் கைது
திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல் அறுவர் கைது
திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும்
திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான பின்னர் வாகனத் தொடரணி தம்பலகமுவவை நோக்கி திரும்பிச் சென்றதுடன் செல்வராசா கஜேந்திரன் எம்.பி, தொலைபேசி ஊடாக, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்தார்.
திலீபனின் ஊர்தி மீது கொலை வெறித் தாக்குதல் அறுவர் கைது
அதன் பின்னர் திருகோணமலை பொலிஸ் குழுவொன்று தம்பலகாமுக்கு வந்து செல்வராசா கஜேந்திரன் எம்.பியிடம் முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் விசாரணையை சீனன்குடா பொலிஸாரிடம் ஒப்படைத்தது.
இவ்வாறு சீனன்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் திருகோணமலை விஜேசேகரவை வசிப்பிடமாகவும் மற்றையவர் சர்தாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.
திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் மணயவெளி மற்றும் சுமேதங்கரபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவிby நிருபர் காவலன்
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிby நிருபர் காவலன்
நீதவானுக்கு லேசர் பாய்ச்சிய ஆசிரியர் கைது
நீதவானுக்கு லேசர் பாய்ச்சிய ஆசிரியர் கைது
நீதிமன்ற அமர்வின் போது கடுவலை நீதவான் மீது லேசர் ஒளி பாய்ச்சிய குற்றச்சாட்டின் பேரில், தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு , செப்டெம்பர் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
நீதிமன்ற பதிவாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான ஜனித் டயஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சந்தேக நபரை பரிசோதித்த போது அவரிடமிருந்து லேசர் கருவியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
நீதவானுக்கு லேசர் பாய்ச்சிய ஆசிரியர் கைது
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்தேக நபர் மனநலம் குன்றியவர் என அவரின் பெற்றோர் தெரிவித்ததாகவும் அதுபற்றிய வைத்திய அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கமுடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபரின் மனநிலை குறித்து மனநல வைத்தியசாலையிலிருந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
by நிருபர் காவலன் - பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
by நிருபர் காவலன் - பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
by நிருபர் காவலன் - மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
by நிருபர் காவலன் - இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
by நிருபர் காவலன்
மனைவிக்கு ஆண் குழந்தை தந்தை கைது
மனைவிக்கு ஆண் குழந்தை தந்தை கைது
தன்னுடைய மனைவி, ஆண் குழந்தையை பிரசவித்ததை அடுத்து, அக்குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.
மொனராகலை, கலபெத்த, அம்பலாந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஒருவர் மொனராகலை பொது வைத்தியசாலையில் கடந்த (31) ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சிறுமி மொனராகலை அலியாவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரம் வரை கல்வி கற்று பின்னர் தனது தாயுடன் கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.
மனைவிக்கு ஆண் குழந்தை தந்தை கைது
இவர் அம்பலாந்த பிரதேசத்தில் கரும்பு வெட்டச் சென்ற போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
பெரியவர்களின் சம்மதத்தின் பேரில், மொனராகலை பிரதேசத்தில் உள்ள திருமணப் பதிவாளர் ஒருவரால், சிறுமிக்கு 19 வயது எனக் கூறி சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
பின்னர் இருவரும் அம்பலாந்த பகுதியில் உள்ள இளைஞரின் வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி மொனராகலை பொது வைத்தியசாலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
திருமணமானபோது அவளுக்கு 14 வயது 07 நாட்கள் என அறியமுடிகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய கணவரை கைது செய்து விசாரணைகளை மொனராகலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
1 1/2 கோடி ரூபாய் பணத்துடன் 5 பேர் கைது
1 1/2 கோடி ரூபாய் பணத்துடன் 5 பேர் கைது
போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும், 1 1/2 கோடி ரூபாய் பணத்துடனும் 5 சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் நேற்று முன்தினம் புதன்கிழமை ஆகிய இரு தினங்களும், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
1 1/2 கோடி ரூபாய் பணத்துடன் 5 பேர் கைது
அதன் போது, சந்தேகத்திற்கு இடமான கெப் ரக வாகனம் ஒன்றினை சோதனையிட்ட போது, அந்த வாகனத்தின் பெட்டியின் கீழ் மேலுமொரு பெட்டி அடிக்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தலுக்கு ஏதுவாக வாகனத்தை மாற்றி அமைக்கப்பட்டு இருந்தமையை கண்டறிந்துள்ளனர்.
அதனை அடுத்து வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் உரும்பிராய், மாதகல்ம் மற்றும் ஊவா மாகாணம், குடா ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து கெப் ரக வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் 15 மில்லியன் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களும், மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி
இஸ்ரேல் உளவாளிகள் கைது தாக்குதல் முறியடிப்பு
இஸ்ரேல் உளவாளிகள் கைது தாக்குதல் முறியடிப்பு
ஈரான் மாகாணங்கள் மீது நடத்தப்படவிருந்த ,
பெரும் தாக்குதல் முறியடிப்பு 14 இஸ்ரேல் உளவாளிகள் கைது ,
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்
by நிருபர் காவலன் - ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்
by நிருபர் காவலன் - இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்
by நிருபர் காவலன் - ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்
by நிருபர் காவலன் - தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்
by நிருபர் காவலன்
அச்சுறுத்திய மாணவன் கத்தியுடன் கைது
அச்சுறுத்திய மாணவன் கத்தியுடன் கைது
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவன் கத்தியுடன் திங்கட்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலையம் ஒன்றுக்கு கத்தியுடன் சென்று வர்த்தக நிலையத்தில் வேலை செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வர்த்தக நிலைய உரிமையாளரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவனை கைது செய்துள்ளனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவனை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவிby நிருபர் காவலன்
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிby நிருபர் காவலன்
மது போதையில் இருந்த 6 புலம்பெயர் தமிழர்கள் கைது
மது போதையில் இருந்த 6 புலம்பெயர் தமிழர்கள் கைது
மது போதையில் குழப்பம் விளைவித்த 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று 24 ஆம் திகதி பொழுதை கழித்துள்ளனர்.
அதன் போது, அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என, கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.
மது போதையில் இருந்த 6 புலம்பெயர் தமிழர்கள் கைது
அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 6 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, 6 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடியன் பிரஜைகள் எனவும், ஒருவர் இலண்டன் பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவிby நிருபர் காவலன்
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிby நிருபர் காவலன்
இரத்மலானை கொலை சந்தேக நபர் கைது
இரத்மலானை கொலை சந்தேக நபர் கைது
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ரத்மலானையைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 21ஆம் திகதி இரத்மலானை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள கடையொன்றில் வைத்து நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவிby நிருபர் காவலன்
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிby நிருபர் காவலன்
யாழில் வன்முறை கும்பல் கைது
யாழில் வன்முறை கும்பல் கைது
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பிரதேசத்தில் அண்மையில் அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீடு மீது தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் 8 பேர் யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ளநிலையில், 6 பேர் குறித்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதுடன், ஒருவர் தாக்குதல் சம்பவத்துக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியதுடன் ஒருவர் தரகராகவும் செயற்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வன்முறை கும்பலிடம் இருந்து பெண்களின் ஆடைகள், மோட்டார் சைக்கிள்கள், வாள்கள், கோடாரி, இரும்பு கம்பி, உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளன.
யாழில் வன்முறை கும்பல் கைது
டென்மார்க்கில் வசிக்கும் ஒருவரால் பணம் அனுப்பியே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது எனவும் அரச உத்தியோகத்தரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலுக்கு ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபா பணம் டென்மார்க்கில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக செங்குந்தா இந்து கல்லூரி விளையாட்டு மைதானம் தொடர்பில் நீடித்த பிரச்சனையே குறித்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை கொலை செய்ய முயற்சித்தமை என்ற குற்றச்சாட்டில் இன்று (19) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கல்வியங்காடு பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களின் சூத்திரதாரியாக காணப்படும் பிரதான சந்தேக நபரான டென்மார்க்கில் வசிப்பவரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் வன்முறை கும்பல் கைது
கடந்த 15ஆம் திகதி கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வருகை தந்த 6 பேர் சேதம் விளைவித்திருந்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதுடன், ஜன்னல் கண்ணாடிகளும் CCTV கெமராக்களும் சேதமாக்கப்பட்டிருந்தன.
குறித்த குழுவில் மூவர் பெண்களின் ஆடைகளை அணிந்து வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவிby நிருபர் காவலன்
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிby நிருபர் காவலன்
அச்சுறுத்தி வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது
அச்சுறுத்தி வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது
தென் மாகாணத்தை அச்சுறுத்தி மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் பாரிய குற்றவாளியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயாகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் உள்ள அம்பலாங்கொட டில்ஷானின் பிரதான உதவியாளர் என்பதுடன், இலங்கையில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியாகவும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரனாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அச்சுறுத்தி வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரிடம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட வெளியேறும் வாயிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவிby நிருபர் காவலன்
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிby நிருபர் காவலன்
இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது
இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது
சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஏழு இலங்கையர்களும் நேற்று (16) எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
ஜோர்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஏழு இலங்கையர்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது
இஸ்ரேலில் வேலைவாய்ப்பினை பெறுவதற்காக ஜோர்தான் -இஸ்ரேல் எல்லையில் சமீபத்திய ஆண்டுகளில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாகப் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த வருடம் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க முயன்ற 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது
- கணவரை கத்தியால் குத்திய மனைவிby நிருபர் காவலன்
- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறதுby நிருபர் காவலன்
- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கைby நிருபர் காவலன்
- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதிby நிருபர் காவலன்
சிறுமி துஷ்பிரயோகம் பெரியப்பா கைது
சிறுமி துஷ்பிரயோகம் பெரியப்பா கைது
வீட்டில் வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தமது பிள்ளையை தங்க வைத்த நிலையில் பெரிய தந்தை மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
வறுமை காரணமாக 17 வயதான தமது மகளை, தந்தையின் அண்ணா வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர்.
சிறுமி துஷ்பிரயோகம் பெரியப்பா கைது
இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சனிக்கிழமை பெற்றோரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.