Posted in சினிமா

சுந்தர்.சி அடித்து விட்டாரா குஷ்பு

சுந்தர்.சி அடித்து விட்டாராகுஷ்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு பதிவிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.

சுந்தர்.சி அடித்து விட்டாரா?.. குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு
குஷ்பு


நடிகை குஷ்பு 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததை போல தற்போது

அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு. சமீபத்தில் இவர் உடல் இடையை குறைத்து கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் சில ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு ஒரு

புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கண்ணத்தில் யாரோ அடித்தது போன்று வீரிய கோவத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுந்தர்.சி அடித்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு வேளை இந்த புகைப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற வன்கொடுமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பதிவிட்டிருக்களாம் என சில பதிவிட்டு வருகின்றனர்

. இந்த பதிவிற்கான விளக்கத்தை விரைவில் குஷ்பு அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    Posted in சினிமா

    உடல் எடையை குறைத்தது எப்படி? – ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு

    உடல் எடையை குறைத்தது எப்படி? – ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு

    ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள்ள நடிகை குஷ்பு, உடல் எடையை குறைத்தது எப்படி என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

    உடல் எடையை குறைத்தது எப்படி? – ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
    குஷ்பு


    90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை

    மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததைப் போல தற்போது அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு.

    கடந்த சில மாதங்களாகவே உடல் எடையை குறைக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் குஷ்பு. தற்போது அதன் பலனாக, இன்றைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

    குஷ்பு

    இதையடுத்து ‘உடல் எடையை எப்படி குறைத்தீர்கள்’ என ரசிகர்கள் பலரும் அவரிடத்தில் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் குஷ்பு.

    அதன்படி, நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை குறைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தினமும் நடைப்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் வேகமாக குறைந்துவிடும் என குஷ்பு கூறியுள்ளார்.

      Posted in சினிமா

      குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு

      குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு

      நடிகையாகவும், அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்புவின் டுவிட்டர் கணக்கை விஷமிகள் சிலர் முடக்கி இருந்தார்கள்.

      குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மீட்பு
      குஷ்பு


      தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி

      வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

      நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு, அங்கு தோல்வியை தழுவினார். அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட குஷ்பு, டுவிட்டரில் ஆக்டிவாக இயங்கி வந்தார்.

      குஷ்பு
      முடக்கம் செய்யப்பட்ட போது இருந்த டுவிட்டர் பக்கம்

      இந்நிலையில், இன்று காலை நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது. அவர் பதிவிட்டிருந்த அனைத்து

      பதிவுகளும் அழித்து ஹேக்கர்கள் கைவரிசை காட்டி இருந்தனர். மேலும் டுவிட்டர் பக்கத்தில் khushsundar என்பதற்கு பதிலாக briann என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

      குஷ்பு
      மீட்கப்பட்ட நிலையில் இருக்கும் டுவிட்டர் பக்கம்

      இது தொடர்பாக நடிகை குஷ்பு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை குஷ்பு பதிவு செய்திருந்த அனைத்து பதிவுகளும் மீட்கப்பட்டுள்ளது.

      Posted in சினிமா

      அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி

      அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி

      நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்பு, அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் என்று சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.

      அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி
      குஷ்பு
      1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ்

      , தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

      இவர் பி.வாசு இயக்கத்தில் வெளியான ‘நடிகன்’, ‘சின்ன தம்பி’, ‘கிழக்கு கரை’, ‘மன்னன்’, ‘ரிக்‌ஷா மாமா’, ‘இது நம்ம பூமி’, ‘அம்மா

      வந்தாச்சு’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். இதில் பல படங்கள் பெரும் வரவேற்பு பெற்றது.

      குஷ்பு – இயக்குனர் வாசு

      தற்போது, பி.வாசு குறித்து குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனது குரு, எனக்கு மிகவும் பிடித்தமானவர். என்னை

      நன்றாகப் புரிந்துகொண்ட ஒரு இயக்குநர். எனக்குள்ளிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் பி.வாசுதான்.

      எனது திரை வாழ்க்கையைச் செதுக்கியதில் அவருக்குப் பெரிய பங்குண்டு. அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன். அவர்

      மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். மிகவும் ரசித்தேன். பல உணர்வுகளை இது சொல்கிறது”.

      இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

      Posted in உலக செய்திகள்

      உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்

      உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்

      முருகன் அருளால்தான் உயிர் பிழைத்ததாகவும் தனது கணவர் வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் தன்னை காப்பாற்றி உள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

      முருகன் அருளால் உயிர் தப்பினேன்- நடிகை குஷ்பு உருக்கம்

      செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

      விபத்தில் உயிர் தப்பியது பற்றி குஷ்பு உருக்கமான பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

      கடலூர் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்பட்டு சென்றபோது எனது கார் மீது கண்டெய்னர் லாரி மோதியது.

      இந்த விபத்தில் எனது கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. முருகன் அருளால்தான் நான் உயிர் பிழைத்து உள்ளேன். எனது கணவர்

      வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் என்னை காப்பாற்றி உள்ளது.

      அந்த முருகனே என்னை வேல் யாத்திரைக்கு வரச் சொல்லி அழைத்து உள்ளது போலவே உணர்கிறேன். எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

      விபத்து நடந்த போதிலும் வேல் யாத்திரையில் திட்டமிட்டபடி நான் கலந்து கொள்கிறேன்.

      இவ்வாறு குஷ்பு கூறினார்.