காணி
Posted in இலங்கை செய்திகள்

திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி

திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி

புதிதாக திருமணம் செய்த ,குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை

பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான

காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை

எடுக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளர் ஆர். டி. ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் இதற்கான

விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    Posted in Uncategorized

    வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட -கோட்டாபய கடற்படை முகாமுக்கு காணிகள் அபகரிப்பு

    வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட -கோட்டாபய கடற்படை முகாமுக்கு காணிகள் அபகரிப்பு

    முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கிருக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷ

    கடற்படை முகாமுக்காக அபகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ள வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் தமிழ் மக்களின் காணிகள்

    அவ்வாறு அபகரிக்கப்படுமாயின் மக்களோடு இணைந்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் இறங்குவோம் என எச்சரித்தார்.

    முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் 08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலமாக காணிகளை மீண்டும் அளவீடுசெய்து

    கடற்படைக்கு வழங்க இருப்பதாக காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

    இது தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

    “முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குரிய 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை 2017, 2018 ஆம் ஆண்டுகளில் அபகரிக்க முயற்சிகள்

    மேற்கொள்ளப்பட்டன. அதற்காக 2017இல் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது” என்றார்.

    இருப்பினும் அப்போது இந்த அபகரிப்பு முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணிகளுக்குரிய தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர் என

    நினைவூட்டிய அவர் அதனால் அப்போது அந்த ஆக்கிரமிப்பு முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன என்றார்.

    நிலஅளவை செய்வதற்காக 2021.07.29 ஆம் திகதி காலை 9 மணிக்கு வருகைதந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விபரங்களையும் இனங்காட்டும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் எனக்குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் தங்களினது காணியினை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் எடுத்துவரும்படியும் குறித்த கடிதத்தின் மூலம் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோட்டாபய ராஜபக்‌ஷ கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை அளவீடுசெய்து சட்டரீதியாக ஆக்கிரமிப்புச்செய்யும் முயற்சிகளை உரியவர்கள்

    கைவிடவேண்டும் எனத் தெரிவித்த ரவிகரன் அந்தக் கடற்படை முகாம் அங்கிருந்து அகற்றப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

    “இவற்றுக்கு மாறாக காணி ஆக்கிரமிப்பு முயற்சிகள் தொடர்ந்தால் எமது மண்மீட்புப் போராட்டங்களும் தொடரும்” என்றார்.

    முல்லைத்தீவு – கரைத்துறைபற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிகளிலுள்ள 271,6249 ஹெக்டேயர் விஸ்தீரனமுடைய காணிகள்

    எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அரசாங்கம் எடுத்துக்கொள்ள இருப்பதாக 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதியன்று வௌியான 2030/44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பொன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      காணிகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு

      காணிகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு

      யான் ஓயா செயற்றிட்டம் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படுகின்றது.

      கமசமக பிலிசந்தர எனும் கிராமத்துடனான உரையாடல் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

      இதனடிப்படையில் காணிகளை இழந்த 36 பேருக்கு மொத்தமாக 40 மில்லியன் ரூபாவுக்கும்

      அண்மித்த தொகை நட்டஈடுடாக வழங்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாண்டிகோரால தெரிவித்தார்.

      கமசமக பிலிசந்தர வேலைத்திட்டத்தின் ஒரு பகுதி திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

      அங்கு வருகை தந்த காணிகளை இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்கும்படி ஜனாதிபதி முன்னர்

      அதிகாரிகளுக்கு பணித்திருந்தார். அதற்கிணங்கவே இந்த நட்டஈடு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

        Posted in Uncategorized

        இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி

        இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணி

        இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 4

        இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணித் துண்டுகளை எதிர்காலத்தில் பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

        இதுதொடர்பாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ. ஏ. கே ரணவக்க தெரிவிக்கையில் நாட்டில் சுமார் 5 லட்சம் மக்கள் காணிகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

        இதற்கமைய பயன்படுத்தப்படாத காணிகளை அடையாளம் கண்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு

        காணிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய 4 இலட்சத்து முப்பத்து ஐயாயிரம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.