என்னோடு வா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னோடு வா

என்னோடு வா

மீசை வைத்த ஆணழகா
மின்னுகிறாய் நாயகனா
கன்ன குழி சிரிக்குதே
காதல் மழை பொழியுதே

வீசும் காற்றாய் ஆட வா
வீணே வந்து மோத வா
சந்தம் பாடும் வீணையாய்
சாதனை பாடி போக வா

நினை வெல்லாம் நீயாகி
நீள்கிறாய் கொடியாகி
முளை விடும் பயிராகி
முன்னே வாராய் உயிராகி

தெருவோர மின் விளக்காய்
தினம் ஏனோ நனைகிறாய்
குடை பிடிக்க நான் வர வா
கூடியே வாழ்வோமா

நடை போடும் கால் இரண்டு
நமக்கு துணையல்லவா
நம் ஆசை தீர
நாம் இருவர் இணைவோமா ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-05-2023

என்னோடு வா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என்னோடு வா

என்னோடு வா

கவிதைக்குள் உன்னை நான் வரைய வா – என்
கனவுக்குள் என்றும் நீ மலர வா
இதயத்தை என்றும் திறக்க வா – என்
இதயத்தில் என்றும் இருக்க வா

உனக்காக என்றும் நான் வாடவோ – உன்
உயிரோடு என்றும் நான் கூடவோ
பிறந்தாயே நீ தானே எனக்காக – இந்த
பிரளயத்தை பிளக்க வா துணையாக ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-11-2022

https://www.youtube.com/watch?v=1sOvAMCME48
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என்னோடு வா

என்னோடு வா

விட்டுப்போன உறவென்று- உனை
விட்டு விட முடியவில்லை
தொட்டு பார்க்கும் எண்ணத்தால்- உனை
தொலைத்து விட இயலவில்லை

கட்டி வைத்த மாலையாக
காய்கின்ற பேரழகே….
உனை கொய்தவனை கொன்றிடவா..?
உன் உயிரை காத்திடவா?

மண்ணுக்குள் வேரெடுத்து
மழை நீரில் குளியலிட்டு….
விண்ணுலகை பார்த்தவளே
வீழ்ந்ததின்று எப்படியோ?

நிமிடம் ஒன்று சிந்திக்க
நினைவிழந்து போனதினால்
சுனாமி அலைக்குள்ளே
சுயம் வரத்தில் வீழ்ந்தாயோ ..?

அலை கடந்து வீடுடைத்த
ஆழி பேரலையாய்
மீதி வாழ்வுக்குள்
மிதந்து போராயோ …?

ஓயாது பெருக்கெடுக்கும்
ஒப்பாரி கண்ணீரை
தடுத்திடுவேன் வந்து விடு
தங்கமே நம்பி விடு …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 13-08-2021
http://ethirinews.com/

வன்னி மைந்தன் கவிதைகள்