உன்னால் தவிக்கிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

எந்தன் வாழ்வு ஏன் சோகமானது
ஏனோ என் கண்கள் நீரானது
வலிகள் மட்டும் நெஞ்சில் தொடரானது
வாழ்வே இன்று மெல்ல இருளானது

எனக்கு மட்டும் ஏன் துயரானது
இது யார் விதித்த சாபமானது
இறந்து போகவே இன்று மனம் எண்ணுதே
இதயம் வேதனையில் இன்று கருகுதே

உந்தன் நினைவு உயிரே என்னை கொல்லுதே
உறக்கம் இன்றியே விழியும் துடிக்குதே
நினைத்த மனதை நினைவு மறக்குமோ
நீயும் மறந்தால் மனம் உன்னை ஒதுக்குமோ

காலம் இந்த காலம் பொய்யானது – உயிர்
காதல் இங்கு வீணானது
தொட முன்னரே தொடரும் முடியுமோ
தொட்டு விட்டால் தொல்லை யாகுமோ

என்ன விதியோ இதை யார் செய்ததோ
பன்மைக்குள்ளே இங்கே பல செயல்களோ
உண்மையானால் இங்கே உறவு வெறுக்குமோ
உயிரும் இங்கே வலியால் துடிக்குமோ ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 01-10-2024
0044 7536707793

உன்னால் தவிக்கிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

கொண்டையில பூ மணக்க
கொலிஸ் ஒலி கால் ஒலிக்க
சாலையில போறவளே – முதுகு
சாளரத்தை காட்டுறியே

கெண்ட மீனு பார்வையாலே
கிண்டல் பார்வை செய்யிறியே
அங்கம் எல்லாம் தங்கா நகை
அணிந்து ஏனோ போகிறியே

பிஞ்சு மர பூவை போல
பிள்ளை நீ சிரிக்கிறியே
அஞ்சு முகம் உன்னைத் தானே
அப்படியே கொஞ்சி விட

காளை மனம் துடிக்குதடி
கலாட்டா செய்துதடி
பாழ் பட்ட பாவை உன்னால் – இந்த
பகல் ஒன்றை தொலைத்தேண்டி

எந்தன் நாளை நீ பறித்து
ஏங்க விட்டு போனவளே
கலோ சொல்ல மறுக்கிறியே
கஞ்ச தனம் காட்டுறியே .

ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

சில்லறையா நீ குலுங்க
சிலிர்க்குதடி என் உடம்பு
சிந்தையில நீ நடக்க
சிதறுதடி என் குசும்பு

வம்பு பண்ண வந்தவளே
வாசலிலே நிற்பதுவோ ..?
வாலாட்டி நான் சுற்ற
வாய் விட்டு சிரிப்பதுவோ ..?

கோடையில ஆற்று நீரை
கொதிக்க வைக்கும் சூரியனே
வெப்பத்தை தூவி விட்டு
வெண்ணிலவு போவதெங்கே ..?

குழைத்து வைத்த மாவை போல
குமரி புள்ள நீ கிடக்க
அவித்து உன்னை தின்ன
ஆள் மனசு துடிக்காதோ ..?

என் தோப்பில் பூவாகி
எனக்கெனவே காய்த்தவளே
நான் மட்டும் ரசித்துவிடும்
நாள் ஒன்றை காட்டாயா …?

வன்னி மைந்தன்
ஆக்கம் 09-02-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னால் தவிக்கிறேன்

    உன்னால் தவிக்கிறேன்

    சாயம் பூசி இன்றெந்த
    சண்டைக்களம் போகிறாய் …?
    உன் உதட்டை காட்டியேன்
    உலக யுத்தம் மூட்டிறாய் …?

    பாரத போர் ஒன்றை
    பாவை நீ மூட்டாதே
    முன் பகலை இரவாக்க
    முழுமதியே வைக்காதே

    பேரழகே முன் வந்தால்
    கார் மேகம் கூடாதோ …?
    முன்னே இடி மின்னல்
    முட்டி மோதாதோ ..?

    கட்டி கை கட்டி
    கண்ணே என்ன பார்க்கிறாய் ..?
    தோள் சாயும் கூந்தலில
    தொங்க விட்டேன் போகிறாய் …?

    ஏக்க பார்வையிலே
    என்னை தானே தேடுறாய் …?
    உன்னழகை பருகிடவோ
    உள்ளமே வாடுறாய் …?

    விழிமேலே இமை வைத்து
    விடயத்தை அளக்கிறாய்
    உயிர்மேலே எனை வைத்து
    உள்ளமே அழைக்கிறாய்

    கொஞ்சும் உந்தன் பேரழகு – என்
    உயிரை வாட்டுதடி
    கரும் சட்டை காவியமே
    கண்ணுறக்கம் தொலையுதடி …!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 24-01-2021

    வன்னி மைந்தன் கவிதைகள்