Tag: இலங்கை தமிழர்கள்
இலங்கை தமிழர்கள் 6 பேர் கைது
இலங்கை தமிழர்கள் 6 பேர் கைது
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்வதற்கு முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 6 பேர் இந்தியா செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மன்னார், எருக்குழும்பிட்டி கடற்பகுதியில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 06 பேருடன் டிங்கி படகு ஒன்றை கைப்பற்றினர்.
இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்
இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்
இலங்கையில் இருந்து அதிகளாக நான்கு தமிழர்கள் இந்தியாவுக்கு தப்பி ஓடியுள்ளனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக , இலங்கையில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ,உயிர் பாதுகாப்பு தேடி நான்கு தமிழர்கள், தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் .
இவ்வாறு தமிழகத்தில் தஞ்சம் அடைந்த , நான்கு தமிழர்களும் ,திருகோணமலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது .
இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக தப்பி ஓட்டம்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து ,நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்கள், கடல் வழியாக ராமேஸ்வரம் சென்றடைந்து ,அதன் ஊடாக மண்டபம் அகதி முகாமுக்கு சென்றடைகின்றனர் .
இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடியை அடுத்து , ஆளும் தமிழக முதலமைச்சர் இஸ்டலின் ,உணவு பொதிகளை, கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தார் .
அதன் பின்னர், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் ,தீர்க்கமான முடிவினையும் அறிவித்திருந்தார் .
அவ்வாறானதொரு நிலையில், இலங்கை தமிழர்கள் ,அகதிகளாக தமிழகம் சென்ற வண்ணம் உள்ளமை ,அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .








