Category: மருத்துவம்
மருத்துவம் உடலில் ஏற்படும் நோய்கள் எவ்வாறு பரவுகிறது ,அதனை எவ்விதம் தடுப்பது என்பது தொடர்பான குறிப்புக்கள் இந்த மருத்துவம் பகுதியில் பகிர படுகிறது
தேனீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து
தேனீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து
பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. ஆபீசிலோ, வீட்டிலோ போக-வர டீ குடிப்பார்கள். அது பால் இல்லாத டீயோ, பால் சேர்த்த டீயோ, சூடாக 2 வாய் அவ்வப்போது குடித்தால் தான் வேலை ஓடுகிறது என்பார்கள்.
தேனீர் குடிப்பதால் ,குடிக்கும் பழக்கம் உள்ளவரா?
டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா
பலருக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. ஆபீசிலோ, வீட்டிலோ போக-வர டீ குடிப்பார்கள். அது பால் இல்லாத டீயோ, பால் சேர்த்த டீயோ, சூடாக 2 வாய் அவ்வப்போது குடித்தால் தான் வேலை ஓடுகிறது என்பார்கள்.
இதன் காரணமாகதான் நம் ஊர்களில் டீ கடைகள் அதிகம். அத்தனை கடைகளிலும் ஈ கூட்டம் போல் மக்கள் இருப்பார்கள்.
டீ ஓரிரு முறை குடிப்பது நல்லதே என்றாலும் இப்படி ஓட்டகம் போல் குடித்துக் கொண்டிருப்பது பல தீய விளைவுகளை ஏற்படுத்தும். அவை
- இரும்பு சத்து உடலினுள் உறிஞ்சப்படுவது குறையும்.
- அதிக படபடப்பு, மன உளைச்சல் உண்டாகும்.
- தூக்கம் குறையும்
- வயிற்றுப் பிரட்டல் ஏற்படும்
- நெஞ்செரிச்சல் ஏற்படும்.
- கர்ப்ப காலத்தில் சில பிரச்சினைகளைக் கொடுக்கலாம்.
- தலைவலி ஏற்படும்.
- மயக்கம் ஏற்படும்.
- டீ குடிக்காமல் இருக்க முடியாத படபடப்பு ஏற்படும்.
எனவே ஓரிரு கப் டீ மட்டுமே குடித்து நன்மைகளைப் பெறுவோமாக.
தேனீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து
இப்போது எல்லாம் கிரீன் டீ அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. மார்பக புற்று நோய், பிராண்ட்ரேட் புற்றுநோய், வயிறு புற்று நோய் அபாயம் வெகுவாய் குறைகின்றது.
• சர்க்கரை நோய், இருதய நோய் பாதிப்பை வெகுவாய்க் குறைக்கின்றது. ஆக கிரீன் டீ என்பதனை நமது சாதா டீக்குப் பதிலாக நாள் ஒன்றுக்கு 2 கப் கிரீன் டீ குடிப்பது நல்லது.
2 கப் அளவு போதுமானது. அதற்கு மேல் தேவையற்றது. ஆனால் காபி, சாதாரண டீ இவற்றையெல்லாம் குடித்துக் கொண்டு கிரீன் டீயும் குடிப்பது தவறு.
காபி, சாதா பால் டீ, கறுப்பு டீ இவற்றினை விட்டு கிரீன் டீ மட்டும் 2 முறை குடிக்கலாம். இவை இன்றைய ஆய்வுகள் கூறுபவை.
இந்த தேநீர் குடிப்பதாகி நிறுத்தினால் தமது ஆய்வு குறைந்து விடும் என கருதும் மக்களும் இந்த மக்கள் கூட்டத்தில் இருக்கத்தானே செய்கின்றனர் .
இறக்க தானே போகிறோம் தின்று ,குடித்து விட்டு இறப்போம் என்பவர்கள் இதனை தாராளமாக செய்யலாம் ,மேலும் சில ஆண்டுகள் நலமுடன் வாழவேண்டும் என கருதுபவர்கள்
அளவுடன் எதனையும் மேற்கொள்வது உடலுக்கும் ,உளவியலுக்கும் ,சாகும் வரை நல்லது அன்பர்களே
உதட்டு முத்தம் கொடுத்தா உடம்பு குறையுமாம்
ஒருமுறை இதழில்- உதட்டு முத்தம் கொடுத்தா – உடம்பு குறையுமாம் -முத்தம் கொடுக்கும் போது
2 முதல் 6 கலோரிகள் நம் உடலில் இருந்து கரைக்கப்படுகிறது.
மிக ஈடுபாட்டுடன் கொடுக்கப்படும் முத்தத்தினால் ஒரு மணி நேரத்திற்கு 100 கலோரிகளை எரிக்கமுடியும். இது 20 நிமிட உடற்பயிற்சிக்கு சமமானதாகும்.
இதன் மூலமாக எளிய மற்றும் இனிய வழியில் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.
- லிப் டு லிப் முத்தம் குடுக்கும் போது 30க்கும் மேற்பட்ட முக தசைகளை தூண்டுகிறது. இது உங்கள் முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உண்டாவதை குறைக்கிறது. இதன் மூலம் உங்கள் முகம் இளமையாக தோற்றம் அளிக்கும்.
உடல் எடையை குறைக்கும் லிப் டு லிப் முத்தம்
- இதழ் முத்தம் உங்கள் இரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
உதட்டு முத்தம் கொடுத்தா உடம்பு குறையுமாம்
- நீங்கள் முத்தமிடும் போது, உமிழ்நீர் உற்பத்தி உங்கள் வாயில் அதிகரிக்கிறது, இது பற்களில் உருவாகும் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி உங்கள் பற்கள் மீது உருவாகும் கேவிட்டிகளை குறைக்க உதவுகிறது
- .
- ஜப்பானிய ஆராய்ச்சியின்படி, 30 நிமிட முத்தம் ஹிஸ்டமின் எனும் ரசாயனம் உடலில் உற்பத்தி ஆவதை குறைக்கிறது.
- இந்த ஹிஸ்டமின் எனும் ரசாயனம் தான் தும்மல், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்களில் நீர் வடிதல் காரணமான ஒன்று. எனவே தும்மலை முத்தம் கொடுத்தும் குறைக்கலாம்.
- முத்தம் எண்டார்ஃபின் எனும் ரசாயனம் உடலில் உற்பத்தி ஆவதை அதிகரிக்கிறது, இந்த எண்டார்ஃபின் உங்களின் சந்தோஷமாக உணரவைக்கும் உணர்ச்சிகளின் வெளியீட்டை தூண்டும். பின்னர் நீங்கள் மகிழ்ச்சியாக உணரலாம்.
இதன் பின்னர் தயங்காது ,கூச்ச படைத்து உங்களுக்கு பிடித்தவர்கள் உதடடை இறுக்கி அழுத்தி உதட்டு முத்தம் கொடுங்கள் .
ஆசையும் தீரும் ,உடல் எடையும் குறையும் ,ஆண்களே யாக்கிரதை குண்டு பெண் பிள்ளைகளை கண்ணுற்றால் ஓடி ஒளிந்து விடுங்கள் .
ஏறி உட்க் கார்ந்து உதட்டை கழுவி காய போட்டுவிட போகின்றனர் ,சும்மாவா என்ன உதட்டு முத்தம் ,பணம் இல்லாது ஓசியில் என்றால் ஓகே தான் ,கவனம் உதடு கிழிந்துவிடும்
கர்ப்பம் ஆவதை தள்ளிப் போட உதவும் வழிகள்
கர்ப்பம் ஆவதை தள்ளிப் போட உதவும் வழிகள்
பின்வரும் முறைகள் எளிதாக மாதவிடாயை கண்காணித்து, அதன்படி கருவுறும் வாய்ப்பைத் தள்ளிப் போட உதவும்.
- 8 முதல் 12 மாதங்களுக்கு, எந்த நாளில் மாதவிடாய் ஏற்படுகிறது என்று குறித்துக் கொள்ளுங்கள்.
- அதன் பின் இந்த மாதவிடாய் மொத்தம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுகின்றது, அதாவது அதன் சுழற்சி நாட்களை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
- ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும் நாளே உங்கள் மாதவிடாயின் முதல் நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பின் குறுகிய மற்றும் நீண்ட நாட்கள் அந்த மாதத்தில் எத்தனை ஏற்பட்டுள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
- மாதவிடாய்க்குப் பின் வளமான சாளரத்தை குறித்துக் கொண்டு அதில் இருந்து 18 நாட்களை குறுகிய சுழற்சி காலத்தில் இருந்து கழிக்க வேண்டும்.
- உதாரணத்திற்கு 27 நாட்கள் குறுகிய சுழற்சி காலம் என்றால், 27ல் இருந்து 18 நாட்களை கழிக்க வேண்டும். அதன் பின் கிடைப்பது 9 நாட்கள்.
கர்ப்பம் ஆவதை தள்ளிப் போட உதவும் வழிகள்
- அதன் பின் சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட வளமான சாளரத்தை உங்கள் நீண்ட கால மாத விடாய் சுழற்சி காலத்தில் இருந்து 11 நாட்களை கழிக்க வேண்டும்.
- உதாரணத்திற்கு, 3௦ நாட்களில் இருந்து 11 கழித்தால், 19 நாட்கள் கிடைக்கும்.
- இந்த குறுகிய மற்றும் நீண்ட கால சுழற்சிக்கு இடையில் உங்களுக்கு கிடைக்கும் நேரம் தான் வளமான சாளரம். மேலே குறிப்பிட்ட உதாரணத்தின் படி நீங்கள் கருவுறும் வாய்ப்பை தவிர்க்க திட்டமிடலாம்.
- உங்கள் வேலையை எளிதாக்க இப்போது பல மொபைல் அப்பிளிகேஷன்கள் உள்ளன, இவற்றை கூகிள் பிளேஸ்டோரிலிருந்து இலவசமாகவும் டவுன்லோடு செய்யலாம்.
- இதில் நீங்கள் எளிதாக உங்கள் மாதவிடாய் காலங்களை குறித்து வைத்து கணக்கிட முடியும். இதில் பல மாத தகவல்களை சேகரித்து வைக்கலாம்.
- உங்கள் மாதவிடாயை நீங்கள் இத்தகைய பயன்பாடு கருவிகளை கொண்டும், உங்கள் நாட்குறிப்பில் குறித்துக் கொண்டு கணக்கிட்டாலும்.
- மேலும் வேறு பல விஷயங்கள் உங்கள் கணிப்பை/கணக்கை தவறாக்கக்கூடும்.
- குறிப்பாக,
- உங்கள் வேலை, அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம், இது உங்கள் உடலைக் காலப்போக்கில் பாதிப்பதால், உங்கள் மாத விடாயும் பாதிக்கக் கூடும்.
இது மட்டுமல்லாது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உணவு பழக்கங்களும் உங்கள் மாதவிடாய் மற்றும் கருவுறும் தன்மையை பாதிக்கக்கூடும்.
இதனோடு சேர்த்து நீங்கள் செய்யும் உடற்பயிற்சி போன்ற சில விஷயங்களும் ஓவுலேசன் நாளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
உங்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் ஏற்பட்டால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே கருவுறும் வாய்ப்பையும் தள்ளிப் போடலாம்.
அப்படி உங்களால் கணிக்க முடியாமல் போகும் தருணத்தில், வேறு வழி இன்றி நீங்கள் கருத்தடை மருந்து மற்றும் காண்டம் போன்ற சில உதவிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.
பெண்களுக்கு கர்ப்பப்பையில் சதை கட்டி வருவது ஏன்?
பெண்களுக்கு கர்ப்பப்பையில் சதை கட்டி வருவது ஏன்?
கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள்.
இது ஏன் ஏற்படுகிறது என்பதற்கு, முழுமையான மருத்துவ காரணங்கள் நமக்கு தெரியாது. ஆனால், தெரிந்த சில காரணங்கள் உள்ளன.
அவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் தான், சதைக் கட்டிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
குழந்தை பருவத்தில் இருந்தே, நார்ச்சத்து உள்ள உணவுகள், கீரைகள் சாப்பிடாமல் இருப்பதே, சதைக்கட்டிகள் ஏற்பட காரணம். கடந்த, 10 ஆண்டுகளில், உணவு பழக்கமே, வெகுவாக மாறி விட்டது.
கேக், வெண்ணெய், பிஸ்கட், ஐஸ்கிரீம் என, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளையே பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுகின்றனர்.
பெண்களுக்கு கர்ப்பப்பையில் சதை கட்டி வருவது ஏன்?
இவர்களுக்கு, கர்ப்பப்பையில் சதைக் கட்டிகள், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம், உடல் பருமன் என, வாழ்க்கை முறை மாற்றத்தினால் பல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இது தவிர, உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, நடக்காமல், ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பது, கூடுமான வரை நடப்பதைத் தவிர்ப்பது,
உயரத்திற்கு ஏற்ப உடல் எடையுடன் இல்லாமல் இருப்பது, இவையும் வேறு சில காரணங்கள்.
சதைக் கட்டிகள், 1 செ.மீ., 2 செ.மீ., இருக்கும் போதே, அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
அறுவை சிகிச்சை செய்த நான்கைந்து மாதங்களில், மீண்டும் வளர்ந்து விடுகிறது. வெட்ட வெட்ட வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தான், இதனுடைய தன்மை.
அதே நேரத்தில், உணவு பழக்கம் உள்பட, வாழ்க்கை முறை மாற்றத்தினால் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
30, – 35 வயதில், சரியான உடல் எடையுடன் இருந்தால், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற வேண்டாத பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
காலை உணவில், எண்ணெயில் பொரித்த வடைகள், தேங்காய் சட்னி, மட்டன் குருமா என்று கொழுப்பு நிறைந்த உணவாக இல்லாமல், ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், ஆப்பம் என்று சாப்பிட வேண்டும்.
இட்லிக்கும், தோசைக்கும் ஒரே மாவு தான் என்றாலும், தோசை சில நிமிடங்களே கல்லில் வேகிறது. எனவே, செரிமான சக்தி இதற்கு குறைவு.
இட்லி, 10 – 15 நிமிடங்கள் ஆவியில் வேகிறது. இது எளிதில் செரிக்கும், எடையும் போடாது, பசியும் அடங்கும். இதற்கு, மல்லி தழை, வெங்காயம், பொட்டுக் கடலை, விரும்பினால் சிறிய துண்டு தேங்காய் வைத்து சட்னி செய்யலாம்.
மதிய உணவில், கண்டிப்பாக ஏதாவது ஒரு வகை கீரை இருக்க வேண்டும். எத்தனையோ வகை கீரைகள் உள்ளன.
முருங்கைக் கீரை, வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிடலாம். இரும்பு சத்து அதிகம்.
உடல் எடை குறைவாக இருந்தால், உணவிலேயே சதைக் கட்டிகளை சரிசெய்யலாம். சற்று அதிக உடல் எடையுடன் இருப்போருக்கு, மருந்துகளுடன் உணவு கட்டுப்பாடும் தேவைப்படும்.
மருந்து சாப்பிட்ட அடுத்த வாரமே சரியாகுமா என்றால், இல்லை. குறைந்தது, ஆறு மாதங்களாவது சாப்பிட வேண்டும்.
இது ஏதோ சரி செய்யவே முடியாத கட்டி என்றெல்லாம் பயப்பட தேவையில்லை.
ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?
ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?
சீம்பால் என்பது குழந்தை பிறந்த முதல் 2, 3 நாட்கள் வரை தாயிடம் ஊறும் கெட்டியான மஞ்சள் நிற பால் ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால்
தாயிடமிருந்து வரும் சீம்பாலில் விட்டமின் ஏவும், நோய் எதிர்ப்பு சக்தியும், குழந்தை வளர்ச்சிக்கான சத்து பொருட்களும் உள்ளன.
சீம்பாலைக் குழந்தைக்கு கொடுப்பதால் வயிற்றுப்போக்கு, நோய் தொற்றுகள் உள்ளிட்ட பல நோய்களிடமிருந்து குழந்தைகளைக் காக்கும்.
மேலும், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை சீம்பால் அதிகரிக்கும்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?
ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 2-3 மணி நேரத்துக்குள் ஒருமுறை பால் ஊட்ட வேண்டும். அதாவது 8-12 தடவை குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டும்.
மாலையிலும் இரவிலும் பால் ஊறுவது அதிகம் என்பதால் ராத்திரி நேரத்திலும் குழந்தைகளுக்கு பால் ஊட்ட வேண்டும்.
ஒரு மார்பகத்தில் குழந்தை எவ்வளவு நேரம் குடிக்கிறதோ அதைப் பொறுத்து சுமார் 15-20 நிமிடங்கள் வரை கொடுக்கலாம். அதன் பிறகு குழந்தைக்கு தேவை என்றால்
அடுத்த மார்பகத்திலும் பால் குடிக்க வைக்கலாம்.
ஒரு குழந்தை 6-8 முறை சிறுநீர் கழித்தாலோ, 2-3 முறை மலம் கழித்தாலோ குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்கிறது என அர்த்தம்.
குழந்தையின் மலத்தின் நிறம் கருப்பிலிருந்து மஞ்சளுக்கு மாறுகிறது என்றால் குழந்தைக்கு போதுமான அளவு பால் கிடைக்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒவ்வொரு வாரமும் 150-200 கிராம் வரை குழந்தையின் எடை அதிகரித்தாலே பால் போதுமாக இருக்கிறது என அறிந்து கொள்ளலாம்.
தாய் பால் வழங்கும் பொழுது மது அருந்துவது தவிர்க்க வேண்டும் ,அவ்வாறு மதுவோ புகைத்தாலோ உள்ளவர்கள் தஹபீ பால் ஊட்டும் பொழுது உங்களுக்கு உள்ள அந்த
நோய் சிசுவுக்கு விரைவாக ஹோத்ரும் அபாயம் உள்ளது .
சிசுக்களின் தோள்கள் மென்மையானவையாக உள்ளத்தில் தோல் நோய்கள் ஏற்பட கூடிய அபாயமும் உள்ளது .
எனேவ தாய் பால் ஊட்டும் காலங்களிலாவது புகைத்தல் ,மது அருந்துவது தவிர்த்தல் சால சிறந்தது
கிரீன் டீ கொழுப்பை குறைக்கும் ‘
கொழுப்பை குறைக்கும் ‘கிரீன் டீ
பச்சை தேயிலை (கிரீன் டீ) மிகவும் ஆரோக்கியமான ஒரு பானம். முழுவதும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த ஒரு சத்துமிக்க ஒரு பானம்.
மனித உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், சக்தியையும் தர வல்லது. இது மனித மூளையின் செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது. உடலில் உள்ள கொழுப்பு கரைக்கப்படுகிறது. கேன்சரை தடுக்கிறது.
தேநீர்:- இதில் பல தாவர மூலக்கூறுகள் உள்ளது. அவை அனைத்தும் சேர்ந்து இதை ஒரு சுவையான பானம் ஆக்குகிறது. முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதில் பாலிபினால்கள் அதிகம் நிறைந்துள்ளன, இது வீக்கம் குறைக்க உதவுகிறது மற்றும் கேன்சரை விரட்ட பயன்படுகிறது. 30 சதவீதம் பாலிபினால்கள் உள்ளது மற்றும்
காட்டகேன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட் செல்களின் சேதத்தை தடுக்கிறது. புற்றுநோய் எதிர்ப்பு திறனை உருவாக்குகிறது. வயது முதிர்வை தடுக்கிறது.
மற்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.
இபிசிஜி என்னும் முக்கியமான சக்தி வாய்ந்த மூலக்கூறு தேநீரில் அமைந்துள்ளது.
பலவிதமான நோய்களை தீர்க்க இது உதவு கிறது. இதில் தாது உப்புகள் நிறைந்துள்ளன. நல்ல உயர்தரமான தேநீரை தேர்ந்தெடுத்தல் சிறந்தது.
தரம் குறைந்த தேயிலையில் புளுரைடு அதிகம் நிறைந்திருக்கும். எனவே தரமானதை தேர்ந்தெடுத்தல் நல்லது.
மூளையின் செயல்பாடுகளை துரிதப்படுத்தி நம்மை புத்திசாலிகளாக்குகிறது. முக்கியமான ஒரு மூலப்பொருள் காபின் ஒரு ஊக்கியாக செயல்படுகிறது.
எடைகுறைவு சிகிச்சை:- கிரீன் டீயினால் கிடைக்கும் பிரபலமான நன்மைகளுள் ஒன்றுதான் எடை குறைய உதவும் என்பது.
இதில் உள்ள பாலீபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் மற்ற டீக்களை விட கிரின் டீயில் தான் ஏராளமான கேட்டசின்கள் உள்ளன.
உடல் எடையைகுறைக்க முயல்பவர்களுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.
இதை சூடான நீரில் தொடர்ந்து பருகுபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்புகள் படியவிடாமல் செய்து உடலுக்கு தேவையான நன்மையான சக்தியாக உடல் எடை கூடுவது உடல் பருமன் அடைவது போன்ற பிரச்சினைகளை நீக்குகிறது.
கொழுப்பு குறைவு:- கேட்டசின்கள் என்பது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்.
இவை உடலில் உள்ள அதிகப் படியான கொழுப்பு களைத் தடுக்கும். கிரீன் டீயில் கேட்டசின், கேலோகேட்டசின், எபிகேட்டசின் கேலேட் போன்ற பொருட்கள் உள் ளன.
அத்துடன் கிரீன் டீயில் மிகவும் சுறுசுறுப்பான எபிகேலோகேட்டசின் -3- கேலேட் அதிகம் உள்ளது.
கலோரி எரிப்பு:- கிரீன் டீயில் எடை யைக் குறைக்க உறுதுணையாக இருக்கும் மற்றொரு ஊட்டச்சத்தான காப்பைன் உள்ளது.
இந்த காப்பைன் கொழுப்பைக் குறைப்பதோடு, கலோரிகளையும் குறைக்கும்.ரத்த அழுத்தம்:- ரத்த அழுத்த பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள்,
கிரீன் டீ கொழுப்பை குறைக்கும் ‘
அன்றாடம் கிரீன் டீயைக் குடித்து வர, அது ரத்த அழுத்த பிரச்சனையைத் தடுப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியம்:- கிரீன் டீ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதால், அது இதய நோய் வரும் அபாயத்தை குறைத்து,
இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை கிரீன் டீ பருகுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான வியாதிகள் ஏற்படும் ஆபத்து
குறைவதாக ஜப்பான் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதிலிருக்கும் “கேட்டசின்” எனும் வேதிப் பொருள் இதயத்தை காப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆர்த்திடிஸ்:- கிரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ஒரு குறிப்பிட்ட மூலக்கூறுகளின் உற்பத்தியைத் தடுத்து,
உடலினுள் ஏற்படும் காயங்கள் மற்றும் ஆர்த்திரிடிஸ் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஆகவே எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கிரீன் டீ குடியுங்கள்.
ஞாபகத்திறன்:- கிரீன் டீயை அதிகம் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த தேயிலையில் இருக்கும் மூலப்பொருட்கள் மூலையில் இருக்கும் செல்களை தூண்டி, ஞாபகத்திறனை மிகுதியாக மேம்படுத்துகிறது. “
அல்சைமர்” எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதை கிரீன் டீ தடுப்பதாக கூறுகிறார்கள். மேலும் கிரீன் டீயில் காப்பைனுடன்,
டு-தியனைன் என்னும் அமிமேனா அமிலமும் உள்ளது. இவை இரண்டும் மூளையின் செயல்பாட்டை சீராக வைத்து கொள்கிறது.
பல் நோய்கள்:- கிரீன் டீயில் இருக்கும் வேதிப்பொருட்கள் உடலில் எப்பகுதியிலும் இருக்கும், கிருமிகளை அழிக்கவல்லது
அதிலும் குறிப்பாக பல் சொத்தை மற்றும் அது ஏற்படுவதற்கு காரணமான பல் ஈறுகள் மற்றும் பல் இடுக்குகளில் இருக்கும் கிருமிகளை அழித்து பற்களை பாதுகாக்கிறது.
சுறுசுறுப்பு:- கிரீன் டீ அதிகம் அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் பிராணவாயு மூலக்கூறுகளை அதிகம் தூண்டி, உடலும் மனமும் உற்சாகமடைய செய்கிறது
. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கும் சக்தியை தருகிறது.
சிறந்த டயட்:- ஒரு கப் கிரீன் டீயில் 30-50 மி.கி காப்பைன் உள்ளது. கிரின் டீ எடையைக் குறைக்கும் என ஓரே நாளில் அளவுக்கு அதிகமாக குடித்தால்
பக்கவிளைவுகளுடன் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். இதனை அளவாக தினமும் ஒரு கப் என குடித்து வர பாதுகாப்பான வழியில் உடல் எடை குறையும்.
ஆகவே எடையைக் குறைக்க உதவும் பானங்களுள் சிறந்த ஒன்றாக கிரீன் டீயை சொல்லலாம்.
புற்றுநோய் :- சில ஆய்வுகளில் எபிகேலோகேட்டசின்-3 கேலேட்டிற்கு, உடலில் வளரும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத்
தடுத்து அழிப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ரத்தத்தை சுத்தம் செய்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.
நோய் எதிர்ப்பு மண்டலம்:- கிரீன் டீயில் உள்ள லிதியனைன்; குடிப்பதால் உண்டாகும் பக்க விளைவுகளைத் தடுக்கும். இந்த அமினோ அமிலம். நோய் எதிர்ப்பு மண்டலத்தை
வலிமையாக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும்.
பிரசவ வேதனை குறித்து பெண்கள் அஞ்சுவது ஏன் தெரியுமா ..?
பிரசவ வேதனை குறித்து பெண்கள் அஞ்சுவது ஏன் தெரியுமா ..?
சுகப்பிரசவத்திற்கான பிரசவ வேதனை வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன.
கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
பிரசவ வேதனை குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்
பிரசவ வேதனை குறித்து அச்சம்கொள்ள வேண்டாம்
சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன.
கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது.
2005-06-ம் ஆண்டில் அறுவை சிகிச்சை முறையில் பிறந்த குழந்தைகளின் விகிதாசாரம் நமது நாட்டில் 9 சதவீதமாக பதிவாகியிருந்தது. உலக சுகாதார நிறுவனம் அறுவை
சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் அளவானது, 10 முதல் 15 சதவீதம் என்பதாக மட்டுமே இருக்கின்ற நிலையில், 2015-2016-ம் ஆண்டில் 18 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
இயல்புக்கு மாறான நிலையில் குழந்தை இருப்பது, நஞ்சுக்கொடி படுக்கையில் இருந்து ரத்தம் கசிவது, கட்டுப்படுத்த முடியாத உயர்ரத்த அழுத்தம் போன்ற
சூழ்நிலைகளில் உயிர்காக்கும் கருவியாக அறுவை சிகிச்சையை பயன்படுத்தலாம் என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால், இப்போது பிரசவ வலி இயல்பாக
தோன்றுவது இல்லை. பிரசவவலி அச்சமும் ஒரு காரணமாக உள்ளது. எல்லாவற்றையும் விட குழந்தை பிறக்கும் ராசி, நேரங்களை பெற்றோரே நிர்ணயிப்பதால் அறுவை
சிகிச்சையை அதிகம் பேர் தேர்வு செய்கிறார்கள்.
உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை மற்றும் தவறான உணவு பழக்கவழக்கங்களினால் சுகப்பிரசவம் இயல்பான முறையில் உருவாகாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாழ்க்கை முறையில் மாற்றங்களையும், திருத்தங்களையும் செய்வதன் மூலம் இதற்கான தீர்வு காணலாம். இந்த திருத்த நடவடிக்கைகள், கருத்தரிப்பதற்கு
முந்தைய காலத்திலேயே தொடங்க வேண்டும். கர்ப்ப காலத்தின்போது ஒரு இயல்பான பிரசவத்தை மேற்கொள்வதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கருத்தரித்த பெண் தயாராக இருக்க வேண்டும்.
கருத்தரித்த காலத்தின்போது உரிய உடல் எடை அதிகரிப்பு மற்றும் பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அது சுகப்பிரசவத்திற்கு
வழிவகுக்கும். இதனை பின்பற்றினால் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் பிரசவ நாட்கள் தள்ளிப்போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல்
சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
மூன்றாவது பிரச்சினை, பிரசவ வேதனை குறித்த அச்சம். இது அறுவை சிகிச்சை ஏற்பட மிகப்பொதுவான காரணங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது.
இந்த அச்சத்தை பெண்கள் மனதில் இருந்து நீக்கினாலே அவர்கள் தாமாகவே சுகப்பிரசவத்திற்கு தயாராகிவிடுவார்கள்.
முதல் பிரசவம் அறுவை சிகிச்சையாக இருந்தால் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் சில விஷயங்களை கவனிக்க
வேண்டும். அறுவை சிகிச்சை செங்குத்தான முறையில் செய்யப்பட்டு இருந்தால்,
சுகப்பிரசவம் முயற்சிக்க இயலாது. இதனால் அங்கு தையல் போடப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களுக்கும், குழந்தைக்கும் தீங்கு விளையக்கூடும்.
அத்தகைய நேர்வில் அறுவை சிகிச்சை முறையைத்தான் நீங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
அதனால் முடிந்தவரை முதல் பிரசவத்தை சுகப்பிரசவமாக மாற்றுவது பெண்கள் கையில்தான் உள்ளது.
உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்
எடை கூடுவதற்கான காரணங்கள்
அதிக எடை, பருத்த உடல் எடை என்பது இன்றைய கால கட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக உள்ளது
. இந்த அதிக எடையுடன் சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என கைகோர்த்து வருகின்றது. சுமார் 34 சதவீதம்
பெரியோர்களும், 19 சதவீதம் குழந்தைகளும் கூடுதல் எடையுடன் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பெண்கள் உடல் எடை கூடுவது என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்தினால் மட்டும் அல்ல.
பலர் அவர்களின் முன்னோர்களை விட அதிக எடையுடன் இருக்கின்றனர். அதனை குறைக்கவும் கஷ்டப்படுகின்றனர்.
ஆனால் உணவு, பயிற்சி இவை மட்டும் இன்றி வேறு சில காரணங்களும் எடை கூடுதலுக்கு காரணமாக இருக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
- சூழ்நிலையும் உடல் எடை எடை கூடுதலுக்கு காரணமாக அமைகின்றது. நமது உணவு, நீர், காற்று, கட்டிடப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என
- பலவற்றில் ரசாயன கலவைகள் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது. இவை அனைத்தும் மனித உடலின் செயல்திறனை மாற்றி நாளமில்லா சுரப்பிகளை
- தாக்குவதன் மூலம் உடல் எடை கூடுதல் ஏற்படுகின்றது.
- பிளாஸ்டிக், அலுமினியம் இவற்றில் உள்ள
- நச்சுப்பொருட்கள் உடலில் சேர்ந்து விடுகின்றன.
- நீரில் கிருமிகளை அழிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள்.
- நாம் பயன்படுத்தும் தரம் குறைவான சுகாதார பொருட்கள் இவை ஹார்மோன் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
- பல ரசாயனங்களை நாம் சுவாசிக்கின்றோம். இவை எல்லாம் 100 வருடங்களுக்கு முன்பு இருந்ததில்லை. இவை நாகரீக உலகின் மாற்றங்கள்.
- நம் பல பூச்சி கொல்லி மருந்துகள்.
- பல மருந்துகளை நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
மேற்கூறிய காரணங்களால் தூக்கம் பாதிக்கப்படுகின்றது. ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன.
குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அழிகின்றன. உடலில் வீக்கம் ஏற்படுகின்றது.
- ஓயாத மனஉளைச்சலில் வாழ்கின்றோம். இப்படிக்கூடும் பல்வேறு காரணங்களாலும் உடலில் எடை கூடுதல் ஏற்படுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.உடல் எடை
இதற்கான தீர்வு தான் என்ன?
- இயற்கையோடு ஒன்றி இருப்போம்.
தேவையான அளவு 8 மணி நேர தூக்கம் அவசியம். - அளவான உப்பினை உபயோகிப்போம்.
- வெள்ளை சர்க்கரை, அதிக இனிப்புகள் இவற்றினைத் தவிர்ப்போம்.
- சோடா வேண்டாம்.
இப்படி சில வழிமுறைகளையும் சரியான
உணவு உடற்பயிற்சி இரண்டினையும் கடைப்பிடிக்கும் போது
கூடுதல் எடை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
சிறந்த உடல் நலத்திற்கான சில டிப்ஸ்கள் :
- உடற்பயிற்சி, உணவு முறை, முறையான தூக்கம்
- இவை உடல் நலத்தின் மூன்று தூண்கள் ஆகும்.
- வறுத்த, பொறித்த உணவுகளையும், தெருக்களில் சுகாதாரமற்று விற்கும் உணவுகளையும் தவிர்ப்போம்.
- காலையில் தேனும், எலுமிச்சை சாறும் மிக நல்லது.
என ஆயுர்வேதம் வலியுறுத்துகின்றது. - வாரத்தில் ஓரிரு வேளையாவது உண்ணாவிரதம் இருக்கலாம்.
- தினம் காலை உணவினை தவிர்க்கவே கூடாது.
- கிரீன் டீ நல்ல பயன் அளிக்கும்.
- மெதுவாக உண்ண பழகுங்கள். ஒவ்வொரு கவள உணவினையும் 32 முறை நன்கு மெல்லுங்கள் என்று கூறப்படுகின்றது. முடியுமா?
மனித உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்
- தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பாக உணவினை முடித்துவிடுங்கள்.
- பழங்களை தனியாகவும், காய்கறிகளைத் தனியாகவும் உண்ணுங்கள். ஆனால் பழங்கள், காய்கறிகளை நன்கு சேர்த்துக்கொள்ளுங்கள்.
- நார் சத்து உணவே அவசியம்.
- வானவில் நிறங்கள் அனைத்தும் உங்கள் அன்றாட உணவில் இருக்க வேண்டும்.
- விருந்துக்கு செல்வதற்கு முன்னால் வீட்டில் உண்டுவிட்டு செல்லுங்கள்.
- நெல்லி சாறு மற்றும் தேனை காலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
- ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடங்கள்.
- 2 மணிக்கொரு முறை 2 நிமிடங்கள் கை, கால் முதுகினை நீட்டி மடக்கி சிறு பயிற்சி செய்யுங்கள்.
- முடிந்த பொழுதெல்லாம் கண்ணை மூடி திறங்கள். இது தானாகவே நிகழும் என்றாலும் கவனம் கொண்டு சில முறை செய்யுங்கள்.
- சிரிப்பு பயிற்சியினை காலையில் செய்யுங்கள்.
சி மார்பக புற்று நோய்: மார்பக புற்று நோயினைப் பற்றிய விழிப்புணர்வினை மருத்துவ உலகம் பெண்களிடையே நன்கு ஏற்படுத்தி உள்ளது.
மார்பகத்தில் கட்டி, உருண்டை போன்ற ஒரு உறுத்தல் இவைகளை சுய பரிசோதனை மூலமும், மருத்துவ பரிசோதனை மூலமும் கண்டறிந்து சிகிச்சை பெற
வேண்டும் என்ற உண்மைகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.
இதில் மேலும் சில கூடுதல் செய்திகளை அறிந்து கொள்வோம்.மார்பகத்தில் சிறுகுழிவு, தோல் பின் வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
சரும பாதிப்பிற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
இவை மார்பக சரும பாதிப்பிற்கும் பல காரணங்கள் உண்டு. மார்பக உள்ளாடை மிக இருக்கமாக இருந்தாலும் சரும
பாதிப்பு ஏற்படும். மார்பகத்தில் திடீரென சிகப்பு, வீக்கம், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
பொதுவாக மார்பகத்தில் இருந்து திரவம் வடிந்தால் கவனம் தேவை. இது கர்ப்ப காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் கவலைக்கு உரியது அல்ல.
பெண் மார்பத்தில் கறுப்பு புள்ளி, திட்டுகள் இருந்தால் சரும நிபுணரை அணுக வேண்டும்.
சிகப்பு திட்டுகள் இருந்தாலும் அதே போல் சரும நிபுணர் ஆலோசனையை உடனடியாக பெற வேண்டும்.மார்பக காம்பிலும்,
அதனை சுற்றிய பகுதியிலும் எந்த வித மாறுதல்கள் ஏற்பட்டாலும் மருத்துவர் ஆலோசனை அவசியம்.
மேலும்மார்பக சருமத்தில் மாறுதல்
வீக்கம், வலி உடல் எடை
மார்பக உருவில் மாற்றம்
இப்படி எந்த மாறுதல்களுக்கும் உடனடியாக மருத்துவ உதவி பெற்றால் எளிதில் தீர்வு பெறலாம்.
ருத்துவம் மிக நல்ல முன்னேற்றத்தினை பெற்றுள்ளது. அதனின் முழுபயனை அனைவரும் பெற வேண்டும்.
அதிக எடை யுடன் குழந்தை பிறக்க காரணங்கள்
அதிக எடை யுடன் குழந்தை பிறக்க காரணங்கள்
கர்ப்பம் பற்றிய பொதுவான விஷயங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதிக எடை யுடன் அவற்றுள் ஒன்று தான் கர்ப்ப கால குழந்தையின் எடை.
அதாவது கர்ப்பிணி பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
ஒருவேளை குழந்தையின் வளர்ச்சி நினைத்ததை விட பல மடங்கு பெருகி காணப்பட்டால் என்ன செய்வது? வாருங்கள் என்னுடன் சேர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
வல்லுனர்களின் கருத்துப்படி குழந்தையின் எடையானது பொதுவாக 2500 கிராம் முதல் 5000 கிராம் வரை இருக்கக்கூடும்.
எந்த குழந்தையின் எடையாவது 5000 கிராமை கடந்து காணப்படுமெனில் குழந்தை பெரிதாய் பிறக்க வாய்ப்பிருக்கிறது.
இருப்பினும், குழந்தை குண்டாக பிறப்பதால் ஆரோக்கியம் அற்று இருக்கக்கூடும் என அர்த்தமில்லை.
இதனால் பிரசவத்தின் போதும் நீங்கள் ஒன்றும் பெரிய சிக்கல்களை சந்திப்பதுமில்லை.
கர்ப்பிணிகள் உடல் எடை பொறுத்து குழந்தையின் எடை அமையுமா?
அதிக எடை யுடன் குழந்தை பிறக்க காரணங்கள்
உங்கள் உணவு முறை பொறுத்தே குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் அளவு என்பது அமைகிறது.
ஆனால் நீங்கள் உண்ணும் உணவின் தரம் மற்றும் எடுத்துக்கொள்ளும் அளவை பொறுத்து குழந்தைகள் குண்டாக பிறப்பதில்லை.
- ஒரு ஆய்வின்படி தெரியவருவது என்னவென்றால், உங்கள் எடையானது 23 பவுண்டிற்கும் அதிகமாக இருக்கும்போது 8.8 பவுண்ட் அளவுக்கு அதிகமாக
- குழந்தை எடையுடன் பிறக்க வாய்ப்பிருக்கிறதாம்.
- அதேபோல் அம்மாக்களின் எடை 44 முதல் 49 பவுண்ட் இருக்கும்போது குழந்தைகளின் எடை இருமடங்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
- நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவில் கவனம் தேவை.
- எண்ணெய் அதிகம் அடங்கிய உணவையும் ஜங்க் (Junk) உணவையும் தவிர்க்க வேண்டும்.
- உங்கள் வயிறு சிறியதாக இருப்பின் சத்துள்ள உணவை மருத்துவரின் பரிந்துரையுடன் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.
எதனால் குழந்தை குண்டாக பிறக்கிறது?
- இரத்த சர்க்கரை அளவு பொறுத்து குழந்தையின் எடை என்பது அதிகரித்து காணப்படுகிறது.
- அம்மாக்களின் வயது பொறுத்து குழந்தையின் எடை அதிகம் காணப்படுகிறது.
- உங்களுக்கு இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் இரத்த சோகை இருக்கும்போது குழந்தை குண்டாக பிறக்க வாய்ப்பிருக்கிறது.
- ஒரு ஆண் மற்றும் பெண்ணின் மரபு மாற்றங்களை பொருத்தும் குழந்தை குண்டாக பிறக்கிறது.
ரெட் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?
மனிதர்கள் -ரெட் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?
இன்றைய பாஸ்ட்புட் கலாசாரத்தில் ரெட் ஒயின் குடிப்பது குடிப்பது மக்களிடையே சாதாரண விஷயமாக மாறிவிட்டது.
அதிலும் ரெட் ஒயின்பெண்கள் குடிப்பதற்கு ஏற்ற பானமாகும்.
பெரு நகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்கள் தற்போது ரெட் ஒயினை விரும்பி அருந்துகின்றனர்.
ரெட் ஒயின் என்பது பல்வேறு வகையான திராட்சை பழங்களை கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.
ரெட் ஒயினை குடிப்பதால் தோலின் நிறம் கூடும், சரும பொழிவு மேம்படுவதோடு இளமை தன்மையும் அதிகரிக்கும்,
நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். ரெட் ஒயினுக்காக பயன்படுத்தப்படும் திராட்சைகளில் ரெஸ்வரேட்ரால்,
கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன.
ரெட் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?
இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
ரெட் ஒயினை அளவாக குடிப்பதன் மூலம், கல்லீரல் நோய்கள், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் டிமென்ஷியா போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
ரெட் ஒயினில் தூக்கத்தை தூண்டும் மெலடோன் என்ற உட்பொருள் அதிக அளவில் உள்ளது.
எனவே தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ரெட் ஒயினை தினமும் ஒரு டம்ளர் குடிக்கலாம்.
ஆனால் இரவு தூக்கத்திற்கு செல்லும் முன்பு குடிக்க வேண்டும். குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குடித்து விட வேண்டும்.
இதுவே குடுப்பம் நடந்திடும் அளவுக்கு புதிய பலத்தை தருகிறது .
வேகம் பிடிக்கவும் ,வேண்டியது போல செயல்படவும் இதில் கொஞ்சல் வாயில் ஊற்றுங்கள் ,விறு விருப்புடன் செயல் பட களைப்பின்றி தொடர
என பல்வேறு சேவைகளை இலகுவாக செய்து வேலையை இலக்கு படுத்துகிறது
அதே நேரம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவர் ரெட் ஒயினை மிதமான
அளவுகளில் குடித்தால் சில வகை கேன்சர், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும்.
அதுவே அளவுக்கு அதிகமானால் தீங்கு உண்டாகும். எனவே அளவோடு அருந்தி வளமான வாழ்க்கைக்கு வழிவகுங்கள்..
இரத்த அழுத்தம், மன அழுத்தம் போக்க – இதை பண்ணுங்க
இரத்த அழுத்தம், மன அழுத்தம் போக்க – இதை பண்ணுங்க
இன்றைய பரபரப்பான உலகில் மன அழுத்தம், அதனால் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதயக் கோளாறு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.
இவர்கள் அனைவரும் சாந்தி ஆசனம் கட்டாயம் செய்ய வேண்டும். செய்தால் மன அழுத்தம் இல்லாமல், ரத்த அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.
செய்முறை:
விரிப்பில் கிழக்கு திசையில் தலை வைத்து மேற்கில் கால் வைத்து கை கால்களை அகற்றி படுத்துக் கொள்ளவும்.
தலையை லேசாக இடப்பக்கம் சாய்த்துக் கொள்ளவும் கைவிரல்கள் வானத்தை பார்த்து இருக்கவும். (படத்தை
பார்க்கவும்). கண்களை மூடிக் கொள்ளவும். இப்பொழுது உங்கள் மனதை நண்பனாக்கி மனதின் மூலம் கீழ்கண்டவாறு பயிற்சி செய்யவும்.
உங்கள் மனதை தலை வெளி தசைகளில் நிலை நிறுத்தவும். அதில் உள்ள எல்லா டென்ஷனையும். அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்துவிட்டேன்.
அதில் எந்த டென்ஷனும் இல்லை என்று எண்ணத்தினால் ரிலாக்ஸ் செய்யவும். பின்பு உங்கள் மனதை தொண்டை வெளி சதையில் நிலை நிறுத் தவும்
. அதிலுள்ள டென்ஷன், அழுத்தம் அனைத்தையும் பூமிக்கு அர்பணித்ததாக எண்ணி உடலை தளர்த்தவும்.
பின்பு உங்கள் மனதை தோள்பட்டை பகுதியில் நிலைநிறுத்தி அந்த தசைகளிலுள்ள எல்லா டென்ஷனையும்
அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்துவிட்டேன் என்று மனதால் தளர்த்திக் கொண்டே வரவும். பின்பு உங்கள்
மனதை இருதயத்தின் வெளி தசைகளில் நிலை நிறுத்தவும். அதிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தங்களையும் பூமிக்கு
அர்ப்பணித்ததாக எண்ணி ரிலாக்ஸ் செய்யவும்.
பின்பு உங்கள் மனதை வயிற்று வெளி தசைகளில் நிறுத்தி அதிலுள்ள டென்ஷன், அழுத்தங்களை பூமிக்கு
அர்ப்பணித்ததாக எண்ணவும். பின் வலதுகால் வெளி தசைகள், இடதுகால் வெளி தசைகளில் நிலை நிறுத்தி
ரிலாக்ஸ் செய்யவும். தலை முதல் கால் வரை உடல் வெளி தசைகளில் இருந்து அழுத்தத்தை மனதால் ரிலாக்ஸ் செய்யவும்.
இப்பொழுது உங்கள் மனதை மூளை உள் பகுதியில் நிலை நிறுத்தி அந்தப் பகுதியிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தம்,
உடலைவிட்டு நீங்குவதாக எண்ணி தளர்த்தவும். மூளைக்கு கீழ் இரண்டு நாளமில்லா சுரப்பிகள் உள்ளது. உங்கள் ஆழ்
மனதை அதில் நிலை நிறுத்தி அந்த சுரப்பியில் உள்ள டென்ஷன் வெளியேறுவதாக தளர்த்தவும்.
பின் உங்கள் மனதை தொண்டை உள் பகுதி தைராய்டு பகுதியில் நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும்
வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.
பின் இருதயம், நுரையீரல், தைமஸ் சுரப்பி அதில் உங்கள்
இரத்த அழுத்தம், மன அழுத்தம் போக்க – இதை பண்ணுங்க
மனதை நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும். எனது
இதயத்துடிப்பு சீராக இயங்குகின்றது, அந்தப் பகுதியில் எந்த டென்ஷனும் இல்லை என்று எண்ணி தளர்த்தவும்.
பின் வயிற்று உள் பகுதியில் சிறுகுடல், பெருங்குடல், கணையம், அட்ரினல் சுரப்பியில் நிலை நிறுத்தி அதிலுள்ள
எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக மனதால் நினைத்து தளர்த்தவும். பின் வலதுகால்; உள்பகுதி, இடதுகால்
உள்பகுதியில் மனதை நிலை நிறுத்தி அதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணி தளர்த்தவும்.
மூச்சில் கவனம்
இப்பொழுது இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை உள் இழுக்கவும். மூச்சை உள் இழுக்கும் பொழுது நல்ல சக்தி
வாய்ந்த பிராணக் காற்றை உள் இழுப்பதாக எண்ணவும். உடன் மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மூச்சை
வெளியிடும் பொழுது நம் உடல், மனதிலுள்ள எல்லா டென்ஷனும் வெளியேறுவதாக எண்ணவும். இதுபோல்
இரண்டு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை செய்யவும்.
இப்பொழுது இயல்பாக நடைபெறும் மூச்சோட்டத்தை மட்டும் கூர்ந்து கவனிக் கவும். மூச்சு இயற்கையாக
நடைபெறு கின்றது. அந்த மூச்சு உள் வருவதையும் வெளியே செல்வதையும் மூன்று நிமிடங்கள் கூர்ந்து கவனிக்கவும்.
பின்பு அவசரப்படாமல் மெதுவாக இரு கால்களையும் சேர்க்கவும். பின் இரு கைகளை மெதுவாக ஒன்று
சேர்க்கவும். பின் 10 விநாடிகள் அமைதி யாக இருந்துவிட்டு இடது பக்கம் மெதுவாகத் திரும்பி எழுந்து உட்காரவும்.
பலன்கள்
இந்த சாந்தி ஆசனம் தான் மிகக் கடினமான ஆசனம் என்று யோகிகள் கூறுவார்கள். மற்ற கடினமான ஆசனங்களை செய்துவிடலாம். ஆனால் இதில் உங்கள் மனதை
முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, மனதிற்கு கட்டளையிட்டு அதனை செயல்படுத்த வேண்டும். முதலில் பயிற்சி செய்யும் பொழுது 100 சதவீத மனோலயம்
இருக்காது. கவலை வேண்டாம். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். முழுமையான பலன் கிட்டும்.
மனிதனின் அனைத்து வியாதிக்கும் மன அழுத்தம் கவலை தான் காரணம். மன அழுத்தத்தால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக இயங்காமல் பல
வகையான நோய்கள் வருகின்றது. இந்த சாந்தி ஆசனம் ஒன்று தான் உடல் வெளி தசைகள், உடலுக்குள் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலுள்ள டென்ஷனை வெளியேற்றி
மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்கின்றது.ரத்த அழுத்தம், நீரிழிவு நீங்கும். இதயம் பாதுகாக்கப்படும். மன அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கும். உடலுக்கு
பிராண சக்தி கிடைக்கின்றது. உடலில் ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சரியாக இயங்கும். நரம்புத் தளர்ச்சி, படபடப்பு நீங்கும்.
கோபம் நீங்கும். சாந்தம், பொறுமை குணம் வளரும். அடி முதுகு வலி, கழுத்து முதுகு வலி நீங்கும். சுறு சுறுப்பாக திகழலாம்.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்
முடி வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவு வகை
பெண்கள் நீண்ட கூந்தல் பராமரிப்புக் காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள் ஷாம்புக்கள் கிடைக்கின்றன,அதனால் கூந்தல் வளரவும் வேகம் .
அவை வெளிப்புற பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும்.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்
உறுதியான கூந்தலுக்கு விட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம்.
இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எந்தெந்த சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும்,
ஆரோக்கியத்துக்கும் அவசியம், எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
- முட்டையில் புரோட்டீன், விட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய
- ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. முட்டையில்
- உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம்
- உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் பயோட்டின்
- என்கிற விட்டமினும் உள்ளது.
- பீன்ஸில் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக பீன்ஸ்,
- சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல்
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்
- அடர்த்தியாக வளர உதவி புரிகின்றன.
- ஓட்ஸில் விட்டமின் பி-யும், தாது உப்புக்களும் நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு
- நிறமளிக்கக்கூடியது. ஓட்ஸில் உள்ள சத்துக்கள் முடி வேகமாகவும், கருமையான நிறத்திலும் வளரத்
- தேவையானவை ஆகும்.
- கேரட்டில் விட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை
- பாதுகாக்கும் தன்மை இதற்கு உண்டு.
- கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன.
- பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுப்பதோடு முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும்.
- தோலுக்கு நல்ல நிறத்தையும், முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.
மாதவிடாய் பிரசவத்தின் பின் எப்போது தொடங்கும்
பிரசவத்தின் பின் எப்போது மாதவிடாய் தொடங்கும்
பெரும்பாலான அம்மாக்கள் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சியை பற்றி குழம்பவும், கவலைப்படவும் செய்கிறார்கள்.
அவர்கள் முந்தைய ஒன்பது மாதங்களில் மாதவிடாய் இல்லாமல் இருந்திருப்பார்கள்.
புதிதாக அம்மாவானவர்கள் அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஆச்சரியப்படுவார்கள்.
இங்கு அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றியும், தாய்ப்பாலூட்டுவது எப்படி மாதவிடாயை பாதிக்கிறது என்பதை பற்றியும் பார்க்கலாம்.
கர்ப்பகாலத்தின் முக்கியமான விஷயங்களில் ஒன்று பெண்களுக்கு இந்த 9 மாதமும் மாதவிடாய்ஏற்படாது என்பது தான்.
அவர்கள் துணிகளையோ அல்லது நாப்கின்களையோ இந்த மாதங்களில் மாற்ற வேண்டியிருக்காது. இந்த சமயத்தில் இது அவர்களுக்கு விடுதலை அளித்திருந்தாலும்,
பிரசவத்தின் பின் எப்போது வேண்டுமானாலும் அவர்களுக்கு மாதவிடாய்ஏற்படலாம். இதற்கென எந்த தேதியையும், கால நேரத்தையும் குறிப்பிட முடியாது.
ஒவ்வொரு பெண்ணின் உடலும் அவர்களுக்கென தனி அட்டவணையுடன் இயங்கி கொண்டிருக்கிறது.
மாதவிடாய் பிரசவத்தின் பின் எப்போது தொடங்கும்
தாய்ப்பாலூட்டும் போது மாதவிடாயானது அதிகபட்சமாக 7 முதல் 8 மாத காலம் வரை நீடிக்கிறது. சில பெண்களுக்கு குழந்தை பிறந்த இரண்டு மாதங்களுக்கு பிறகே
ஏற்படுகிறது. ஆனால், இதை பற்றி கவலைப்படுவதற்கு ஏதுமில்லை. உங்கள் உடலுக்கான நேரத்தை விட்டு விடுங்கள்.
நீங்கள் விரைவில் பழைய நிலைக்கு திருப்பிவிடுவீர்கள்.
1 உங்கள் குழந்தை தாய்ப்பால் குடித்தும் அதிக நேரம் உறங்கினால், உங்களுக்கு மாதவிடாய்விரைவில் ஏற்படும்.
2 உங்கள் குழந்தை திட உணவுகளை சாப்பிட துவங்கிவிட்டால், உங்கள் மாதவிடாய் முடிவடைய போகிறது என்பதன் அறிகுறியாகும்.
சில நேரங்களில் தாய்ப்பாலூட்டும் போது, நீங்கள் இரத்த கறைகளை கவனித்திருப்பீர்கள்.
இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். இந்த கறைகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும், இதற்கென நேரம் காலம் எல்லாம் கிடையாது.
குழந்தை பிறப்பிற்கு பின் ஏற்படும் இரத்தப்போக்கு மகப்பேற்று இரத்தப்போக்கு என அழைக்கப்படுகிறது.
இது பெண்களில் உடலில் இருக்கும் தேவையற்ற இரத்தமாகும். இது உங்களது மாதாந்திர மாதவிடாயை விட அடர்சிவப்பு நிறத்திலும் அதிக அளவிலும் இருக்கும்.
நீங்கள் உபயோகிக்கும் நாப்கின்கள், 4 மணிநேரம் மட்டுமே பயன் தரும். நீங்கள் அவற்றை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்..
மாரடைப்பு வர காரணம் என்ன
நெஞ்சு வலிக்காமலேயே மாரடைப்புஏற்பட்டால், அதை ‘சைலன்ட் அட்டாக்‘ என்பர். அதிகம் மாரடைப்பு வருவதற்கு காரணம் என்ன ..? தெரியுமா..?
வயது முதிர்ந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நரம்பு கோளாறு உள்ளவர்களுக்கும் இவ்வகை மாரடைப்புஏற்படும் வாய்ப்பு அதிகம்.
அதே போல எவ்வித உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு இன்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை
பார்ப்பவர்களுக்கும் வலியில்லா மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேல்வயிறு, தோள்பட்டை, கழுத்து வலி, சில
நேரங்களில் தலை வலி, மயக்கம் போன்றவை கூட இம்மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கும்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், திடீரென்று மூச்சு வாங்குதல்,
வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டால், இது மாரடைப்பா என்பதை இ.சி.ஜி., மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வருடத்திற்கு ஒருமுறை எக்கோ பரிசோதனை, டிரெட்மில் எனப்படும் பரிசோதனை ஆகியவற்றை செய்ய வேண்டும்.
இப்பரிசோதனைகளின் போது நமது நாடித்துடிப்பு 100-க்கும் மேல் செல்லும். எனவே இதயத்தின் வேலைப்பளு கூடுகிறது. இவ்வாறு கூடும்போது,
மாரடைப்பு வர காரணம் என்ன
இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறதா? என தெரிந்துகொள்ளலாம். இதயத்திற்குரிய முக்கிய பரிசோதனைகளை வருடத்திற்கு ஒரு முறை செய்வது
நல்லது. அவ்வாறு செய்தால் இதயத்தின் சிறுகோளாறுகளை கூட உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும். வலியில்லா மாரடைப்பை தவிர்க்கலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நிற்பதற்கு முந்தைய காலகட்டங்களில் மாரடைப்புவரும் வாய்ப்பு குறைவு.
மாதவிடாய் நின்றவுடன் மாரடைப்புக்கான வாய்ப்பு ஆண்களை விட அதிகம். நம் நாட்டில் உள்ள பெண்களின் வாழ்வியல் முறையும் மாரடைப்புக்கான முக்கிய
காரணமாகும். பல பெண்கள் முறையாக உடற்பயிற்சி செய்வதில்லை. மாறாக தொலைக்காட்சியில் அதிக நேரம் மூழ்கிவிடுகின்றனர். அப்போது ஏதாவது
நொறுக்குத்தீனியையும் சாப்பிடுகின்றனர். மேலும் இப்போதைய பெண்கள் எளிதில் மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர்.
சிறிய விஷயங்களை கூட சகிக்கும் தன்மை இல்லை. எனவே பெண்கள் மாரடைப்பில் இருந்து தப்பிக்க சோம்பலான வாழ்வியல் முறையில் இருந்து விடுபட வேண்டும்
அதிக இரதம் அழுத்தத்தை குறைக்க உங்களை குஷி படுத்துங்கள் ,மாரடைப்புஎனும் கொடிய யமன் உங்களை நெருங்கி வர மாட்டான் .
மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்தலாமா?
பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்தலாமா?நமது நாட்டில் மாதவிலக்கு காலத்தில் கோவில்களுக்கு செல்ல கூடாது என்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல்
பெண்கள் முக்கியமான விஷேசங்கள், பக்கத்து வீட்டு சுப நிகழ்ச்சிகள், சுற்றுலா செல்லுதல் போன்ற காரணங்களுக்காக மாதவிடாயை தள்ளிப்போட
நினைக்கின்றனர். இன்றும் சிலர் மாதவிடாய் ஏற்படுவதை உடலில் நடக்கும் சாதாரண ஆரோக்கிய நிகழ்வாக
கருதுவதில்லை. இதனால் தான் மாதவிடாயை சிறிது காலம் தடுத்து வைத்திருக்க மாத்திரைகளை
பயன்படுத்துகின்றனர். இது சரியான தீர்வா இல்லையா என்பதை இந்த பகுதியில் காணலாம்.
மாதவிலக்கு ஏற்படுவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பாக உணர செய்யக்கூடிய நாப்கின்கள் அதிகம் கிடைக்கின்றன. மாதவிலக்கை தடுத்து வைப்பதற்கு பதிலாக அது போன்ற நாப்கின்களை வாங்கி பயன்படுத்தலாம்.
மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்தலாமா?
மாதவிலக்கை தடுக்கும் மாத்திரைகள் அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்காது. சிலருக்கு அது
ஒவ்வாமையை உண்டாக்கும். பெண்களின் கர்ப்பப்பை பூ போல மென்மையானது. அதனை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்கள் மருந்தின் பெயரை சொல்லி தாமே கடைகளில் மாத்திரைகளில் வாங்கி கொள்கின்றனர்.
ஆனால் இவ்வாறு வாங்குவது மிகவும் தவறு. கர்ப்பபையின் நிலைகளை பொருத்து மாத்திரைகள் மாறுபடும்.
எனவே மருத்துவரிடன் சென்று கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து உங்களது கர்பப்பையின் நிலைக்கேற்ற மாத்திரைகளை சாப்பிடுவதே நல்லது.
உங்களது ஆரோக்கிய பின்னனி தெரியாமல் மாத்திரைகளை சாப்பிடுவது முற்றிலும் தவறு
. அவ்வாறு சாப்பிட்டால், உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம்.
சிலருக்கு ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.
வெளிநாடுகளில் வலி நிவாரணிகள், ஹார்மோன் பிரச்சனைகளை உண்டாக்கும் மாத்திரைகளை நீங்கள் மருத்துவரின்
ஆலோசனை பெறாமல் மருந்து கடைகளில் வாங்க முடியாது. ஆனால் இந்தியாவில் அவ்வாறு இல்லை. நாமே மருந்தின் பெயரை சொல்லி மாத்திரைகளை
வாங்கிக்கொள்கிறோம். மாத்திரைகள் உண்டாக்கும் பின்விளைவுகளை பற்றி தெரியாமல் அதனோடு விளையாடி,
ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்கிறோம் என்பது தான் உண்மை.
நீங்கள் இயற்கையாக உண்டாகும் மாதவிடாயை மருந்துகளை உபயோகித்து தள்ளிப்போடுவதால்,
பின்னாளில் உங்களுக்கு மிக அதிக அளவு உதிரப்போக்கும், முன்பு எப்போது இல்லாத அளவுக்கு உடல் வலியும் உண்டாகும்.
பாவித்த எண்ணெயை திரும்ப பாவிப்பதால் வரும் பாதிப்பு
சமையலுக்கு பாவித்த எண்ணெயை திரும்ப பாவிப்பதால் வரும் பாதிப்பு உணவை எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கும் போது,
அவற்றில் உள்ள கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சிதைந்து உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் நச்சு பொருளாக மாறுகிறது.
பெரிய உணவகங்களில் பயன்படுத்தி மீதமாகும் சமையல் எண்ணெய், சிறு உணவகங்களுக்கும், தெருவோர கடைகளுக்கும் மலிவு விலையில் விற்கப்படுகிறது.
பயன்படுத்தப்பட்ட எண்ணெய், தொடர்ந்து பயன்படுத்த உகந்ததா என்பதை ‘டோட்டல் போலார் காம்பவுண்ட்’ (டி.பி.சி.) என்ற அளவீடு மூலம் அளவிடப்படுகிறது.
இது 25 சதவீதத்தை விட குறைவாக இருந்தால் மட்டுமே சமைக்க அனுமதிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால் இதய நோய், அல்சைமர், புற்றுநோய், கல்லீரல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம்
போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. பெரிய உணவகங்களில் சமைக்கப்பட்டு மீதமான எண்ணெய், சில சிறு கடைகளுக்கு முறைகேடாக விற்கப்படுகிறது.
அந்த எண்ணெயை மறுசுழற்சிக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயிரி டீசல் உற்பத்தி நிறுவனங்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். பயன்படுத்திய எண்ணெய்
பாவித்த எண்ணெயை திரும்ப பாவிப்பதால் வரும் பாதிப்பு
தெருவோர கடைகளுக்கு விற்க கூடாது. இதுதொடர்பாக பெரிய உணவகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில், தினமும் 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெயை பயன்படுத்தும் சுமார் 20 உணவகங்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வாரம் 22 டன் பயன்படுத்தப்பட்ட எண்ணெய், உயிரி டீசல் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களிலும் தினமும் 50 லிட்டருக்கு மேல் சமையல் எண்ணெய் பயன்படுத்தும் உணவகங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறும்
நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புகை வெளியேறாத அளவுக்கு குறைந்த வெப்பநிலையில் எண்ணெயை சூடேற்றி உணவை பொரிக்க வேண்டும். அப்போது எண்ணெயில் தங்கும் உணவு துகள்களை,
கருப்பாக மாறுவதற்கு முன்பாக தொடர்ந்து அகற்ற வேண்டும். உணவு பொரிக்கப்பட்ட எண்ணெயில், மீண்டும் உணவை பொரிக்க கூடாது. வடிகட்டிய பின், குழம்பு
போன்றவற்றுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அந்த எண்ணெயை 2 நாட்களுக்கு மேல் வைத்திருக்க கூடாது.
இந்த வழிமுறைகளை கடைபிடித்தால், இதய நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை
கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை
கர்ப்பகாலத்தில் பெண்கள் குறைந்தது 8 மணி நேரமாவது உறங்க வேண்டும். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு
அவசியமானது. சாதாரணமாக ஒருவர் உறங்கும் போது, இடது புறமாக படுத்து உறங்குவது சிறந்தது என்பார்கள்.
கர்ப்பகாலத்தில் உறங்கும் நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.
புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படுவது உண்மையல்ல. இருப்பினும் எழுந்து
உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஏதாவது ஒரு கை புறமாக படுப்பதே நல்ல படுக்கை முறை. அதிலும்
இடது கைப்புறமாக படுப்பது மிகவும் சிறந்தது. மல்லாந்து படுக்கும் போது கருப்பை இரத்தக் குழாய்களை
அழுத்துவதால் மூச்சுத்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம். கர்ப்பிணிகள் எக்காரணத்தை கொண்டும் குப்புற படுக்க கூடாது. இரவு நேரத்தில் எளிதில்
உறக்கம் வராது எனவே சிறிது தூரம் மெதுவாக நடந்துவிட்டு வந்து உறங்கலாம். அசதியில் உறக்கம் வரும்.
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பாக வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு உறங்கச் செல்வது நன்மை தரும்.
எந்த காரணம் கொண்டும் குப்புற படுத்து உறங்கக் கூடாது. ஏனெனில் அது கருப்பையை அழுத்துவதோடு குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
உறங்கும் முன் தலைக்கு அருகில் செல்போன் வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவேண்டும். அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை
தலையணையை வசதியான வகையில் வைத்து உறங்குவது நல்லது. கால்களுக்கும் வைத்து உறங்குவதன் மூலம் கால் வீக்கம் வலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
கடைகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கர்ப்பகால தலையணைகளை வாங்கி உபயோகிக்கலாம்.
இரவு நேரங்களில் அதிக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் மார்ப்பக வளர்ச்சி, இடுப்பு பகுதிகள் விரிவடையும்.
அப்பொழுது ஏற்படும் சிரமத்தை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலான கர்ப்பிணிகள் நெஞ்செரிச்சல், செரிமான கோளறுகளினால் சிரமப்படுவார்கள்.
இவர்கள் உண்ட உடன் உறங்கச் செல்லக்கூடாது. இதுவே நெஞ்செரிச்சல் ஏற்பட காரணமாகிறது.
எனவே எளிதில் ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே உண்ணவேண்டும். படுக்கும் முன் வெது வெதுப்பாக பால் குடித்தால் உறக்கம் வரும்
. அதே சமயம் குளிர்பானங்கள், காபி போன்றவைகளை இரவு நேரங்களில் குடிப்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள் குறிப்பாக மன அழுத்தத்தினால்
பாதிக்கப்படாமல் இருக்க யோகா, மனதிற்கு இதம் தரும் பாடல்கள் போன்றவற்றை கேட்கலாம்.
அப்பொழுதுதான் ஆழ்ந்த உறக்கம் வரும் கரு வளர்ச்சியும் சீராக இருக்கும்.
ஆஸ்துமா உடல் பருமனால் ஏற்படும்
உடல் பருமனுக்கும் ஆஸ்துமா பாதிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பருமனான உடல்வாகு கொண்ட நபர்களின் நுரையீரலில் கொழுப்புத் திசுக்களை ஆய்வாளர்கள் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளனர்.
52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது,
பி.எம்.ஐ. எனப்படும் உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமாஅபாயம் அதிகரிக்கிறது
என்பதை இந்தக் கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையைக் குறைப்பதன் மூலம் இவர்களின் உடல்நிலையைச் சீராக மாற்றியமைக்க முடியுமா
என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆஸ்துமா உடல் பருமனால் ஏற்படும்
நுண்ணோக்கி மற்றும் சாயங்களைப் பயன்படுத்தி நுரையீரல் மாதிரிகளிலிருந்து சுமார் ஆயிரத்து 400
சுவாசவழிப் பாதைகள் குறித்து விரிவான பகுப்பாய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
பி.எம்.ஐ. அளவு அதிகமாக இருந்த பலருக்கு சுவாசப்பாதைகளின் சுற்றுப்புறத்தில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
கொழுப்பு அதிகரித்தால் சுவாசவழிப்பாதைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி நுரையீரலை வீக்கமடையச் செய்யும். இதுவே அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமாஅபாயம் இருப்பதை விளக்குகிறது.
அதிக எடை மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமாபாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது மோசமான ஆஸ்துமா அறிகுறிகள்
இருக்கும் என இந்த ஆய்வில் பணிபுரிந்த பெர்த்தில் உள்ள வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் நோபல் கூறுகிறார்.
அதிக எடை காரணமாக நுரையீரலில் ஏற்படும் நேரடி அழுத்தம் அல்லது அதிக எடையால் பொதுவாகவே
நுரையீரல் வீக்கம் அடைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.
ஆனால், இவர்களின் ஆராய்ச்சி மற்றொரு செயல்முறையையும் விளக்குகிறது என்று கூறுகிறார் பீட்டர் நோபல்.
நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் காற்றுப்பாதைகள் வீக்கமாக
இருப்பதே ஆஸ்துமாஏற்படுவதற்கான அறிகுறிகளின் அதிகரிப்புக்குக் காரணம் எனக் கருதுவதாகத் தெரிவிக்கிறார், பீட்டர் நோபல்.
உடல் எடைக்கும், சுவாச நோய்க்கும் இடையே உள்ள தொடர்பில் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகப்
பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு எவ்வளவு மோசமான அறிகுறி என்பதை இது காட்டுகிறது என்று
ஐரோப்பிய சுவாசக் கழகத்தின் தலைவர் தியரி டுரூஸ்டர்ஸ் கூறுகிறார்.
உடல் எடையைக் குறைப்பதன் மூலம் கொழுப்புத் திசுக்களின் இந்தக் கட்டமைப்பை மாற்றியமைக்க
முடியுமா என்பதை அறிய கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.
பிரிட்டிஷ் தொராக்சிக் சொசைட்டி என்ற அறிவியல் அமைப்பின் தலைவர் டாக்டர் எலிசபெத் சாபே, உடல் எடை
நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளின் கட்டமைப்பைப் பாதிக்கும் என்று சுட்டிக் காட்டப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்.
பொதுவாகவே, உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது பல்வேறு உடல்நலப் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்
பீடி புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்
சிகரெட்டுகளை விட அதிக கேடு விளைவிக்கும், எளிய பீடி மீது அரசு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.
சமீபத்தில் இ-சிகரெட்டுகளை மத்திய அரசு தடை செய்ததையும், பின்னர் தமிழக அரசு இதை தடை
செய்ததையும் பலரும் வரவேற்றுள்ளனர். ஆனால் முக்கிய பிரச்சினையான, பரவலாக இருக்கும் பீடி பிடிக்கும் பழக்கம்
மற்றும் புகையிலை போடும் பழக்கங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது பற்றி கவலை தெரிவிக்கின்றனர்.
புகையிலை புகைப்பதினால் புற்றுநோய் உண்டாகிறது என்பது 1950-களில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ச்சியான
புகை பழக்கத்தினால் நுரையீரல், சிறுநீர் குழாயின் கீழ் பகுதி, சிறுநீரக பகுதிகள், சிறுநீர்ப்பை, காற்று செல்லும்
செரிமான பாதையின் மேல் பகுதி, தொண்டைக் குழி, குரல் வளை, உணவுக் குழாய் மற்றும் கணையம் ஆகிய
உறுப்புகளில் புற்றுநோய் உண்டாகும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. நாசிக் குழி, மூக்கு எழும்பின்
உட்பகுதி, மூக்கு துவாரம், வயிறு, கல்லீரல், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் உண்டாக்கும் என்பதற்கும்
சான்றுகள் உள்ளன. காளப்புற்று நோய் மற்றும் எழும்பு மஜ்ஜைகளில் ரத்தப் புற்றுநோயும் இதனால்
உண்டாகின்றது என்று மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரகம், “பீடி பழக்கமும், பொது சுகாதாரமும்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.
புகைப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்
பீடி புகையில் அதிக அளவில் தார், நிக்கோட்டின், கார்பன் மோனாக்சைட், அமோனியா, ஹைட்ரஜன் சையனைட், இதர எரிதன்மை கொண்ட பீனால்கள் மற்றும் புற்றுநோய்
உண்டாக்கக்கூடிய ஹைட்ரோ கார்பன்கள், பென்சான்த்ராசீன், பென்சோபைரீன் மற்றும் கதிரியக்கத் தன்மை கொண்ட யுரேனியம் ஆகியவை உள்ளன.
பீடியை அடிக்கடி பற்ற வைக்க வேண்டியிருக்கும். பீடி சுற்றப் பயன்படுத்தப்படும் இலையின் ஊடுருவு திறன் குறைவாக இருப்பதாலும், முறையான வடிகட்டி
இல்லாததாலும், சிகரெட் புகையைவிட பீடி புகையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனப் பொருட்கள் வெளியாகின்றன. சிகரெட்டை விட பீடியை இரண்டு
அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஊத வேண்டியுள்ளதால், நிக்கோட்டின், தார் மற்றும் கார்பன் மோனாக்சைட் ஆகியவை அதிக அளவில் உள்ளிழுக்கப்படுகின்றன.
நிரந்தரமான மூச்சுக்குழாய் அழற்சி நோய் மற்றும் இதயநோய்களை உருவாக்கும் ஆற்றல் பீடிகளுக்கு உண்டு.
“இ-சிகரெட்டுகளை மட்டுமல்லாமல் அனைத்து வகையான புகையிலை பொருட்களையும் தடை செய்ய மாநில அரசை கோருகிறோம். கிராமப்புறங்களில் பீடிப்பழக்கம் மிக
அதிகமாக, குறைந்த வருமான கொண்ட மக்களிடம் உள்ளது. சிகரெட் பிடிக்கும் மக்களின் எண்ணிக்கையை விட பீடி பிடிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக
உள்ளதால், பீடி தடை செய்யப்பட வேண்டும். ஜி.ஏ.டி.எஸ் 2 (உலக வயது வந்தவர்கள் புகையிலை கணக்கெடுப்பு 2016-17) அறிக்கையின்படி, தமிழகத்தில் பீடி புகைப்பவர்களின்
விகிதம் 5.4 சதவீதமாக உள்ளது. இது ஜி.ஏ.டி.எஸ் 1 (2009-10) அறிக்கையின் 5.3 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது” என்று தமிழ்நாடு புகையிலை
கட்டுபாட்டுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிரில் அலெக்சாண்டர் கூறுகிறார்.
காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்…
டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் டெங்கு
வைரஸ்களால் உருவாகிறது. டெங்கு காய்ச்சல் வைரஸ்கள் நான்கு வகைகளை உடையது. டென்வி-1, டென்வி-2,
டென்வி-3 மற்றும் டென்வி-4 வகை வைரஸ்கள் மனிதனை தாக்கி டெங்கு காய்ச்சலை உருவாக்கும்
. இந்த வைரஸ் கிருமிகள் ஏடிஸ் வகை கொசுக்கள் பலவற்றினால் பரப்பப்படும். குறிப்பாக ஏடிஸ் ஈஸிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது.
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் சாதாரண காய்ச்சலுடன் இருக்கும்.
நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு சராசரியாக 3 முதல் 14 நாட்கள் பிடிக்கும். ஆனால், பெரும்பாலும் 4 முதல் 7 நாட்களுக்குள் நோய் அறிகுறிகள் தோன்றும்.
குழந்தைகளுக்கு சாதாரணமாக தோன்றும் ஜலதோஷம், வாந்தி, பேதியுடன் அறிகுறிகள் தொடங்கும்.
பெரியவர்களுடைய அறிகுறியை விட குறைவாக குழந்தைகளுக்கு தோன்றும் நோய்தாக்கம், பின்னர் அதிபயங்கர நோய் தாக்குதலுக்கு உள்ளாக்கும்.
நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் 20 சதவீதத்தினர்களுக்கு நோய் அறிகுறியான, அதிவிரைவு காய்ச்சல், கண்ணிற்கு பின்னால் வலி, தசை வலி மற்றும் தோலில் தடிப்புகள் உருவாகும்.
நோய் உடலில் தங்கும் நேரத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவம், அபாயகரமான பருவம் மற்றும் மீழும் பருவம் என பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பருவத்தில் பயங்கர காய்ச்சலோடு ஆரம்பிக்கும் நோயானது அதிகபடியான உடல் வலியையும், தலைவலியையும் குறைந்தது 2 முதல் 7 நாட்களுக்கு கொடுக்கும்.
இந்த நேரத்தில் 50 முதல் 80 சதவீத நோயாளிகளுக்கு தோல் தடித்து பின் தோலில் ஏற்படும் தடிப்புகள்போல் உருவாகும். சிலருக்கு லேசான ரத்தப்போக்கு வாயிலும், மூக்கிலும் ஏற்படலாம்.
நோய் அபாயகரமான கட்டத்திற்கு செல்லும் போது ரத்த நாளங்களும், சிறு நரம்புகளின் சுவர்களும் பலவீனமடைந்து இவற்றிலிருந்து திரவங்கள் நெஞ்சு கூட்டிற்கும்,
வயிற்றிற்குள்ளும் வந்து சேரும். இதனால் ரத்தத்தில் நீரின் அளவு குறையும், முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தின் அளவும் குறைவுபடும். இதனால்
காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்…
இந்தக்கட்டத்தில் உறுப்புகள் செயலிழப்பதும், அதிக ரத்தப்போக்குகளும் குறிப்பாக குடல் பகுதிகளில் ஏற்படும். நோயிலிருந்து மீழும் கட்டத்தில் ரத்த நாளங்களிலிருந்து
வெளியேற்றப்பட்ட நீரானது மீண்டும் நாளங்களுக்குள் உள்ளிழுக்கப்படும். இந்த நிகழ்வுகள் 2 முதல் 3 நாட்களுக்கு நடைபெறலாம்.
இந்நிகழ்வு பயங்கர உறுத்துதல்களையும, இதயத் துடிப்பை குறைக்கவும் செய்யும்.
சில நேரங்களில் ரத்த நாளங்களில் அதிகப்படியான நீர்சேர்க்கை உருவாகும். இதனால் மூளை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் 67 சதவீத சுயநினைவிழப்பு ஏற்படும். இதை தொடர்ந்து இதய தொற்றுகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும்.
இவ்வாறாக இந்நோய் பாதிப்புகள் இரண்டு வகையான பாதிப்பை உருவாக்கும் ஒன்று மரணத்தை ஏற்படுத்தும் டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சல்
. இவை அதிக ரத்தப் போக்கையும், ரத்த தட்டையணுக்களையும், ரத்தத் திரவங்களையும் குறைவுபடச் செய்யும்.
இரண்டாம் வகை டெங்கு, ஷாக் அறிகுறியை உருவாக்கி இதயத்துடிப்பை வெகுவாக குறைத்து அபாயக் கட்டத்தை அடையச் செய்யும்.
காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்…
டெங்கு வைரஸ்களை தாங்கி வரும் ஏடிஸ் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது அதன் எச்சிலோடு வைரஸ் கிருமிகள் மனித தோல்களுக்குள் உட்புகும்.
இந்த வைரஸ் கிருமிகள் பின்னர் தந்திரமாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்த வெள்ளை அணுவுக்குள் நுழைந்து,
தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உடலில் உலாவரும். இந்த ரத்த வெள்ளையணுக்கள் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தன்னுள் இருக்கும் வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கும்.
இந்த செல்கள் வைரஸ்களை அழிக்கும் “இன்டர்பெரான்” எனும் பொருள்களை உடலில் உருவாக்க சமிக்ஞைகளை வெளியிடும்.
இதன் மூலம் உடலில் அதிகபடியான இன்டர்பெரான் எனும் புரத பொருள்கள் உருவாகும். இதனால், உடல் வெப்பம் மிக விரைவாக அதிகரிக்கும்,
உடல் வலியையும் உருவாக்கும். அதே சமயம் வைரஸ்களும் முடிந்தவரை தன் இனத்தைப் பெருக்க முயற்சியெடுக்கும். இதனால், எலும்பு மஜ்ஜைகளும், கல்லீரலும் பாதிப்படையும்
. இதனால், ரத்தத்தை உறையவைக்கும் தட்டையணுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். விளைவுரத்த நாளங்களின் துவாரங்கள் வழியாக திரவங்கள் வெளியேறி மேலே குறிப்பிட்ட விளைவுகள் ஏற்படும்.
பகல் நேரங்களில் கடிக்கும் தன்மையுடைய இக்கொசுக்கள் ஒரு கடி மூலம் நோய்களை உருவாக்கும் சக்தியுடையது.
பெண் கொசுக்கள் நோய் தாக்கிய மனிதர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது வைரஸ் கிருமிகள் கொசுவின் உடலுக்குள் செல்கின்றன. பின் கொசுக்களின் குடல் சுவரில்
8 முதல் 10 நாள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும், பின்னர் கொசுக்களின் பிற உடல் உறுப்புகளுக்குள் செல்லும், பின்னர் கொசுவின் எச்சில் வழியாக வெளிப்பட்டு பிறரை
கடிக்கும்போது அந்த மனிதர்களுக்குள் செல்லும். இந்த வைரஸ் கொசுக்களுக்கு எந்த பிரச்சினைகளையும்
உருவாக்காது. டெங்கு கொசுக்கள் மனிதர்கள் வாழும் பகுதிகளின் மிக அருகிலுள்ள நல்ல தண்ணீர்தேக்கங்களில் முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும்.
காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்-இந்நோயை கண்டறிவது எளிதான காரியமில்லை, சாதாரணமாக வெள்ளையணுக்கள் எண்ணிக்கை, தட்டையணுக்கள் எண்ணிக்கையை வைத்து டெங்கு
காய்ச்சலைக் கண்டறிவது சரியான வழிமுறையில்லை. ஏனென்றால், பல நோய்களுக்கு இவற்றின் எண்ணிக்கை குறைவுபடலாம். டெங்கு காய்ச்சலை சரியாக கண்டறிய,
உடலிலுள்ள வைரஸ்களை வளர்த்தெடுக்கும் முறையையோ, வைரஸ் பி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டறியும் பி.சி.ஆர் முறையையோ, வைரஸ்
புரதங்களைக் கண்டறியும் முறையையோ அல்லது வைரஸ் நோய்களின் தொற்றுகளால் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்களைக் கண்டறியும் முறையையோ பயன்படுத்தலாம்.
டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருத்துவ முறைகள் இல்லாததால் நோய்களை வரும் முன் தடுப்பதே எளிய வழி.
காய்ச்சலை தடுக்கும் வழிமுறைகள்-இந்நோயை பரப்பும் கொசுக்கள் நன்னீரில் வளருவதால் வீட்டின் உள்ளேயும், அருகேயும் தண்ணீர்தேங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த கொசுக்கள் பகல்
வேளைகளில் கடிப்பதால் அந்த நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கை, கால்களை மறைக்கும் உடைகளை உடுக்க வேண்டும்.
நோய் அறிகுறி தென்பட்ட உடனே மருத்துவரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
அந்த வீடுகளில் டெங்கு வைரஸ் தாங்கிய கொசுக்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.







