Posted in சினிமா

சிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை

சிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பிரபல நடிகை சிகரெட் கேட்டு அடம்பிடிப்பதாக கூறப்படுகிறது.

சிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை
சஞ்சனா கல்ராணி
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட

நடிகை சஞ்சனா கல்ராணி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முதல்நாள் சிறையில் கொடுத்த உணவை

அமைதியாக வாங்கி சாப்பிட்ட சஞ்சனா, அதன்பின்னர் தனக்கு தினமும் சாப்பிட கோழி இறைச்சி வேண்டும் என்று கேட்டு வருவதாக தெரிகிறது.

கடந்த வியாழக்கிழமை இரவு தனக்கு கோழி இறைச்சி வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கேட்டு சஞ்சனா அடம்பிடித்து உள்ளார். ஆனால் வாரத்திற்கு ஒருநாள் தான் சிறையில் அசைவ

உணவு வழங்குவோம், இதனால் தற்போது கோழி இறைச்சி வழங்க முடியாது என்று கூறி அதிகாரிகள் சமாதானம் செய்து உள்ளனர்.

இதையடுத்து தனக்கு சிகரெட் வேண்டும் என்றும் சஞ்சனா கேட்டு உள்ளார். அதற்கும் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

சஞ்சனா கல்ராணி

இந்த நிலையில் தனக்கு சிகரெட், கோழி இறைச்சி வேண்டும் என்று நேற்றும் சிறைத்துறை அதிகாரிகளிடம் சஞ்சனா அடம்பிடித்ததாக

தெரிகிறது. ஆனால் இதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து கோழி இறைச்சி வாங்கி தராவிட்டால் கூட

பரவாயில்லை, சிகரெட் மட்டுமாவது வாங்கி கொடுங்கள் என்று சஞ்சனா கேட்டு உள்ளார். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள்

இதற்கு மறுத்ததோடு, அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றனர்

Posted in சினிமா

சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி

சூர்யா தந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சூர்யாவுக்கு நன்றி சொன்ன நீதிபதி – ஏன் தெரியுமா?
சூர்யா
கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய

வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க

உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஓடிடி மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில், அதன் வெளியீட்டு லாபத்திலிருந்து சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியிருந்த

ரூ.30 லட்சம் தொகையை தற்போது தயாரிப்பாளர்கள் கே ஆர் , கே. முரளிதரன் , கே.ஜெ.ஆர். ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீதிபதியிடம் காசோலையை வழங்கிய தயாரிப்பாளர்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில், சூர்யா தந்த இந்த

பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள். சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Posted in சினிமா

கண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ

கண்ணை கட்டி கொண்டு த்ரிஷா ரசிகர் செய்த விஷயம்.. வைரல் வீடியோ

த்ரிஷாவின் ரசிகர் ஒருவர் கண்ணைக் கட்டிக்கொண்டு த்ரிஷா ஓவியத்தை வரையும் வீடியோ வைரல் ஆகி உள்ளது.

த்ரிஷா அளவுக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து 18 வருடங்களுக்கு மேலாக முன்னணி ஹீரோயினாக வேறு யாரும் இருக்க

வாய்ப்பில்லை. மௌனம் பேசியதே தொடங்கி படிப்படியாக பல முன்னணி ஹீரோக்களுக்கு ஹீரோயினாக நடித்திருக்கிறார் அவர்.

புத்தம் புதிய அம்சங்களுடன் வெளியாகிறது- சாம்சங் மொபைல்!
அவருக்கு அதிக அளவு ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று

சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதில் வெறித்தனமான ரசிகர் ஒருவர் த்ரிஷாவின் ஓவியத்தை கண்ணை மூடிக் கொண்டு வரைந்திருக்கிறார். இந்த

வீடியோ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர்

கணக்கில் பகிர்ந்து இருக்கும் த்ரிஷா “Love this. Thank you so much!” என குறிப்பிட்டிருக்கிறார்.

முதலில் ஒரு துணியை கொண்டு கண்ணை கட்டிக் கொள்ளும் அந்த நபர் அதற்கு பிறகு பேப்பரை வைத்து அதற்கு பின்னாலிருந்து

த்ரிஷாவின் முகத்தை ஓவியமாக தலைகீழாக வரைகிறார். கண்ணை கட்டிக் கொண்டு அவர் இப்படி கச்சிதமாக த்ரிஷாவின்

முகத்தை வரைந்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யம் அளித்திருக்கிறது. பலரும் அவருக்கு பாராட்டுக்களை வாரி வழங்கி

வருகிறார்கள். அவரது திறமையை பாராட்டி பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.

https://twitter.com/i/status/1307235077630226432

Posted in சினிமா

ஆபாச பட நடிகையுடன் -பிரபல நடிகை மோதல்

ஆபாச பட நடிகையுடன் -பிரபல நடிகை மோதல்

ஊர்மிளா ஒரு ஆபாச பட நடிகை, நடிப்பால் அவரை யாருக்கும் தெரியாது என்று கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார்.

ஆபாச பட நடிகை… ஊர்மிளாவுக்கு கங்கனா பதிலடி
கங்கனா – ஊர்மிளா
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு இப்போது போதை

பொருள் பக்கம் திரும்பி உள்ளது. முன்னணி நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் போதை பொருள் தடுப்பு

போலீசார் விசாரணை நடத்தினால் பெரிய நடிகர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்றும் கங்கனா ரணாவத் கூறியுள்ளார். இதற்கு

நடிகைகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கங்கனா ரணாவத்தை கண்டித்து பலரும் பேசி வருகிறார்கள்.

கமல்ஹாசனின் இந்தியன் படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை ஊர்மிளா கூறும்போது, “கங்கனா ரணாவத் இந்தி பட உலகம் குறித்தும் மும்பை குறித்தும் அவதூறான கருத்தை

வெளியிட்டுள்ளார். மும்பை மகளான என்னால் இதனை பொறுக்க முடியாது. கங்கனா ரணாவத் போதை மருந்துக்கு எதிரான போராட்டத்தை அவரது சொந்த மாநிலமான இமாசல பிரதேசத்தில்

இருந்து தொடங்க வேண்டும். அங்குதான் போதை பொருள் உற்பத்தி ஆகிறது” என்றார். இதற்கு கங்கனா பதிலடி கொடுத்துள்ளார்.

கங்கனா – ஊர்மிளா

அவர் கூறும்போது, “ஊர்மிளா அவதூறாக பேசி உள்ளார். ஊர்மிளா ஒரு ஆபாச பட நடிகை. நடிப்பால் அவரை யாருக்கும் தெரியாது.

அதை உறுதியாக சொல்ல முடியும். ஆபாசத்துக்கு பெயர் போனவர் ஊர்மிளா. தேர்தலில் பா.ஜனதா கட்சியில் சீட் வாங்குவதற்கு நான்

முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார். அவருக்கே தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும்போது எனக்கு கிடைக்காதா?”

இவ்வாறு கங்கனா கூறியுள்ளார்.

Posted in சினிமா

மோடிக்கு வாழ்த்து கூறி புதிய பட அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்

மோடிக்கு வாழ்த்து கூறி புதிய பட அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி லைகா நிறுவனம் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

மோடிக்கு வாழ்த்து கூறி புதிய பட அறிவிப்பை வெளியிட்ட லைகா நிறுவனம்
பிரதமர் மோடி


இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சிப்

பிரமுகர்கள், பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள், பொதுமக்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கத்தி, 2.O, தர்பார், மாஃபியா போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த லைகா நிறுவனம், பிரதமர் நரேந்திர

மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், ‘ஹேப்பி பர்த் டே டியர் பி எம்’ என்ற ஹேஷ்டேகின் மூலம் “பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் மீதுள்ள அன்பினாலும்

மரியாதையினாலும் அவரது 70வது பிறந்தநாளான இன்று தமிழில் “கர்மயோகி” என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை வழங்குவதற்கு லைகா புரொடக்ஷன்ஸ் பெருமைப்படுகிறது”.

கர்மயோகி

மேலும், இத்திரைப்படத்தை எஸ் சஞ்சய் திரிபாதி அவர்கள் எழுதி இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ், சன்டயல் மற்றும் பன்சாலி

புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் மஹாவீர் ஜெயின் தயாரித்துள்ளனர்” என்று கூறி பிரதமர் நரேந்திர

மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

“கர்மயோகி” பிரதமர் மோடி பற்றிய சிறப்பு திரைப்படம். மோடியின் இளமை பருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கிறது.

Posted in சினிமா

போதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்கள் சொல்ல தயார் – மிரட்டும் ஸ்ரீ ரெட்டி

போதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்கள் சொல்ல தயார் – மிரட்டும் ஸ்ரீ ரெட்டி

போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் அனைவரின் பெயரையும் சொல்ல தயாராக இருக்கிறேன் என நடிகை ஸ்ரீரெட்டி அதிரடியாக கூறியிருக்கிறார்.

போதை பொருள் பயன்படுத்தும் ஹீரோக்கள் பெயரை சொல்ல தயார் – ஸ்ரீ ரெட்டி அதிரடி
ஸ்ரீ ரெட்டி


திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட் நடிகை ரியா

மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி போன்ற நடிகைகள் போதைப்பொருள் விவகாரத்தில்

கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருசில நடிகர் நடிகைகள் இந்த விவகாரத்தில் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு தகுந்த பாதுகாப்பு

அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்களின் பெயர்களை தெரிவிக்க தயார் என்று தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோக்களின் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகள் அனைத்திலும் போதைப்பொருள்

பயன்படுத்தப்படுவதாகவும், போதைப் பொருள் இல்லாத பார்ட்டிகளே இல்லை என்றும் ஸ்ரீரெட்டி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

ஸ்ரீ ரெட்டி

மேலும் தெலுங்கு பிரபலங்களின் வாரிசு நடிகர்கள் நடத்தும் நடன பார்ட்டிகளிலும் போதைப் பொருள் உள்ளது என்றும் அது

மட்டுமின்றி பல ஒழுக்கக் கேடான விஷயங்களும் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா அரசு எனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால் போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் மற்றும் நடிகைகளின் பெயரை தெரிவித்த தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Posted in சினிமா

மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா

மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா

நடிகை மீனா 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணையும் மீனா
மோகன்லால், மீனா
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில் கடந்த 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி

பெற்ற படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கிய இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை

காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.

இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில்

கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

மோகன்லால், மீனா

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்க உள்ளார். இந்த படத்திலும்

மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். மீனா நடிப்பாரா? இல்லையா? என்பது கேள்விக்குரியாக இருந்தது.

இந்நிலையில், திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் மீனா நடிப்பதை நடிகர் மோகன்லால் உறுதிப்படுத்தி உள்ளார். இன்று பிறந்தநாள்

கொண்டாடும் நடிகை மீனாவிற்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மோகன்லால், திரிஷ்யம் 2 படத்தின் செட்டிற்கு

உங்களை வரவேற்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார். திரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Posted in சினிமா

சொந்த வீட்டிலேயே திருட்டு… தலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்

சொந்த வீட்டிலேயே திருட்டு… தலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்

சொந்த வீட்டிலேயே கணவனுக்கு கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுத்த நடிகை ஒருவர் தற்போது தலைமறைவாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த வீட்டிலேயே திருட்டு… தலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்
சுசித்ரா


கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, வாய்ப்பு கிடைக்காததால் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். சீரியல் நடிகைகளுக்கும்

இவர் கார் ஓட்டி வந்துள்ளார். அந்த வகையில்தான் தெய்வமகள் சீரியல் நடிகை சுசித்ராவுடன் மணிகண்டனுக்கு பழக்கம்

ஏற்பட்டுள்ளது. காதலித்து வந்த இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் செலவுக்கு பணமின்றி இருவரும்

தவித்துள்ளனர். அப்போது தனது சொந்த ஊருக்கு மனைவி சுசித்ராவை, மணிகண்டன் அழைத்துச் சென்று பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்.

மணிகண்டன் அங்கு சில நாட்கள் மனைவியுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அங்கு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை பார்த்ததும் கணவனிடம் அந்த பணத்தை

கொள்ளையடித்து சென்னைக்கு சென்றுவிடலாம் என நடிகை சுசித்ரா ஐடியா கொடுத்துள்ளார். அந்த பணத்தை வைத்து குறும்படம் எடுத்து யூடியூப்பில் சம்பாதிக்க திட்டம் போட்டுள்ளார்.

சுசித்ராவின் கணவர் மணிகண்டன்

இதையடுத்து சுசித்ராவை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைத்த மணிகண்டன், சில நாட்களுக்கு பின் மனைவி சொன்னபடி பணம்

மற்றும் நகையை கொள்ளையடித்துள்ளார். வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனதை அறிந்த மணிகண்டனின் பெற்றோர், போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

விசாரணை நடத்தியதில் மணிகண்டன் தான் குற்றவாளி என்பதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

கணவன் மாட்டிக் கொண்டதை அறிந்த நடிகை சுசித்ரா தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை போலீசார் வலைவீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Posted in சினிமா

கொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி

கொரோனாவுக்கு தமிழ் நடிகர் பலி

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார்.

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும்,

திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் பெரேரா காலமானார். இவர் என்கிட்ட

மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி

உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வந்து இருக்கிறார்.

பாஜகவில் இணைந்த ப்ளோரன்ட் பெரேரா

கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்

பெற்று வந்தவர், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.

Posted in சினிமா

50-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்

50-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது ஐம்பதாவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார்.

50-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்


90-களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் 1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டினார்.

2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன்

உண்டு. 50-வயதைத் தொட்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் அதை மறைக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு தான்

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணனுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்
Posted in சினிமா

தொழிலதிபரை மணந்தார் கோப்ரா பட நடிகை

தொழிலதிபரை மணந்தார் கோப்ரா பட நடிகை

விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துவரும் நடிகை மியா ஜார்ஜ், தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்பை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

தொழிலதிபரை மணந்தார் கோப்ரா பட நடிகை
மியா ஜார்ஜ், அஸ்வின் பிலிப்


தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து , ரம், எமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது

விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கும், கேரளாவை

சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்புக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

மியா ஜார்ஜ், அஸ்வின் பிலிப் திருமண புகைப்படம்

மியா ஜார்ஜ்-அஸ்வின் பிலிப் திருமணத்தை செப்டம்பர் 12-ந் தேதி நடத்துவது என்று இருவரின் பெற்றோர்களும் முடிவு

செய்திருந்தனர். அதன்படி, மியா ஜார்ஜ் திருமணம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புனித பசில்லா தேவாலயத்தில் நேற்று

நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி, மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். அதன்பிறகு மணமக்களுக்கு வரவேற்பு

அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.

Posted in சினிமா

போதைப் பொருள் பயன்படுத்தியதை மறைக்க சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்ற நடிகை

போதைப் பொருள் பயன்படுத்தியதை மறைக்க சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்ற நடிகை

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை, மருத்துவ பரிசோதனைக்காக கொடுத்த சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்றுள்ளார்.

போதைப் பொருள் பயன்படுத்தியதை மறைக்க சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்ற நடிகை
ராகினி திவேதி


கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில்

இருந்ததாக கடந்த 4-ந் தேதி நடிகை ராகிணி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை, நீதிபதி

முன்னிலையில் ஆஜர்படுத்திவிட்டு காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூர் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ராகினி, மருத்துவ பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து

செல்லப்பட்டார். அப்போது நடிகை ராகினி திவேதி தனது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து மருந்து பரிசோதனைக்கு கொடுத்து ஏமாற்ற முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராகினி திவேதி

யாரேனும் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதை சிறுநீர் மாதிரியை எடுத்து மருந்து பரிசோதனை

செய்வதன் மூலம் கண்டறிய முடியும். சிறுநீரில் தண்ணீரைச் சேர்ப்பது சிறுநீரின் வெப்பநிலையை குறைக்கும், இது உடல் வெப்ப நிலைக்கு சமமாக இருக்கும்.

பின்னர் மீண்டும் ராகினியிடம் சிறுநீர் மாதிரியை பெற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ராகினியின் நடத்தை

வெட்கக்கேடானது என்று விசாரணை அதிகாரி தெரிவித்தார், போலீஸ் காவலில் நீட்டிப்பு கோரும் போது இந்த சம்பவம் மாஜிஸ்திரேட்டிடம் குறிப்பிட்டு காட்டப்படும் என்று அவர் கூறினார்.

Posted in சினிமா

பிரபல பாடகியுடன் அனிருத் காதல்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், பிரபல பாடகியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.அனிருத்தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3

படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த

ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது

படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் மாஸ்டர், இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், சியான் 60 போன்ற படங்கள் உள்ளன.


இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், பிரபல பாடகி ஜோனிடா காந்தியை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் கூட

ஜோனிடா காந்தியும், அனிருத்தும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்காக சேர்ந்து பாடிய ‘செல்லம்மா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

அனிருத், ஜோனிடா காந்தி

பாடகி ஜோனிடா, டெல்லியில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர். யூடியூப் மூலம் பிரபலமான ஜோனிடா காந்தி ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் தன் திரையுலக பயணத்தை

துவங்கினார். அவரை ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெறும் மெண்டல் மனதில் பாடல்மூலம், ஏ.ஆர்.ரகுமான் தான் தமிழில் அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக சுச்சீ லீக்ஸ் பரபரப்பாக இருந்தபோது அனிருத், ஆண்ட்ரியா முத்தம் கொடுத்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால்

அவை மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று கூறப்பட்டது. அதன் பிறகு எந்தவித காதல் சர்ச்சையிலும் அனிருத் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது பாடகி ஜோனிடாவை அவர் காதலிப்பதாக கூறப்படுகிறது. 

Posted in சினிமா

குண்டான நாயகன்…. ஷூட்டிங் போக முடியாமல் தவிக்கும் படக்குழு

குண்டான நாயகன்…. ஷூட்டிங் போக முடியாமல் தவிக்கும் படக்குழு

லாக்டவுனில் ஹீரோ குண்டானதால், அவர் மீண்டும் உடல் எடையை குறைக்கும் வரை படக்குழுவினர் காத்திருக்கிறார்களாம்.

லாக்டவுனில் குண்டான நாயகன்…. ஷூட்டிங் போக முடியாமல் தவிக்கும் படக்குழு
பிரியதர்சினி, லோகன்


தமிழ் பட உலகில் நீண்ட காலத்துக்குப்பின், முக்கோண காதல் கதையை கொண்டு தயாராகும் படம்‘காகிதப்பூக்கள்’. கதாநாயகனாக லோகன் அறிமுகமாகிறார். இன்னொரு

கதாநாயகனாக பிரவீன்குமார் நடிக்கிறார். கதாநாயகி, பிரியதர்சினி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் முத்து மாணிக்கம்.

முதல்கட்ட படப்பிடிப்பு பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பை

தொடங்குவதற்குள் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், சுமார் 5 மாதங்களாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. தற்போது

மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தும் ‘காகிதப்பூக்கள்’ படக்குழுவால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம்.

காரணம் படத்தின் நாயகன் லோகன் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் குண்டாகி விட்டாராம். அவர், பத்தே நாளில் உடல்

எடையை குறைப்பதாக கூறியதை தொடர்ந்து, படப்பிடிப்பை வரும், 15ம் தேதி துவக்க திட்டமிட்டுள்ளார்களாம். அடுத்தகட்ட படப்பிடிப்பு

திண்டுக்கல், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறதாம்.

Posted in சினிமா

அமலாபால் கணவராக நடித்தவருக்கு கொரோனா

அமலாபால் கணவராக நடித்தவருக்கு கொரோனா

அமலாபால் கணவராக நடித்த நடிகருக்கு கொரோனா வைரஸ் தொற்று

உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

அமலாபால் கணவராக நடித்தவருக்கு கொரோனா
அமலா பால்


கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்த திரைப்படம் ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்த திரைப்படத்தில் அமலாபாலின் கணவராக பிரபல

பாலிவுட் நடிகர் அஃப்தாப் என்பவர் நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி

செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தன் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததை அடுத்து கொரோனா வைரஸ் சோதனை செய்து கொண்டதாகவும்

துரதிஷ்டவசமாக தனக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அஃப்தாப்

இதனை அடுத்து மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தன்னுடன் கடந்த சில

நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்

Posted in சினிமா

நாசரா இது…. வைரலாகும் புதிய புகைப்படங்கள்

நாசரா இது…. வைரலாகும் புதிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும்

நாசரின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நாசரா இது…. வைரலாகும் புதிய புகைப்படங்கள்
நாசர்


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நாசர். எந்த

கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிகவும் திறமையாக நடித்து கொடுப்பவர்.

சிறிய கதாபாத்திரம் என்றாலும் கூட தன்னுடைய தனித்திறமையால் ஸ்கோர் செய்துவிட்டு செல்வார்.

நாசர்

பல முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்திருக்கிறார். தற்போது முன்னணி

நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நாசர்

எதிர்நாயகன் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படத்தில்

ஆளே மாறி போய், புதிய தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படங்கள்

ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நாசரா இது
நாசரா இது
Posted in சினிமா

தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்ட மீரா மிதுன்

தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்ட மீரா மிதுன்

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்ட மீரா மிதுன்
மீரா மிதுன்


பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் அவ்வப்போது தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு செய்து

பரபரப்பை ஏற்படுத்தி வருவார். குறிப்பாக முன்னணி நடிகர்கள் மீது அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மீராமிதுன் இறந்து விட்டதாகவும் போஸ்ட்மார்ட்டம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர்

விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீராவே

இந்த பதிவை செய்தாரா அல்லது அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு

யாரேனும் மர்ம நபர்கள் பதிவு செய்தார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

மீரா மிதுன் பதிவு

இது குறித்து அவரே விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Posted in சினிமா

கழுத்தில் பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா… வைரலாகும் புகைப்படம்

கழுத்தில் பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா… வைரலாகும் புகைப்படம்

நடிகை வனிதா விஜயகுமார், தனது கணவர் பீட்டர் பாலுடன் கழுத்தில் பண மாலை அணிந்து வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார்.

கழுத்தில் பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா… வைரலாகும் புகைப்படம்
வனிதா – பீட்டர் பால்


நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர்.

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து பீட்டர்

பால் வீடு திரும்பி இருக்கும் நிலையில், வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார் வனிதா.

குடும்பத்தினருடன் வனிதா

இரண்டு மகள்களுடன் வனிதா, பீட்டர் பால் இருவரும் கழுத்தில் பண மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். தனது லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020

ஆம் ஆண்டின் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே

முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Posted in சினிமா

சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத்

சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலையிடுவார் என் நம்புவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரனாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என

கூறினார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிவசேனாவுக்கும், நடிகைக்கும் மோதல் உண்டானது.

மேலும், பலத்த எதிர்ப்பை மீறி அவர் மும்பை வந்தார்.

இதற்கிடையே, பாந்திரா பாலிஹில்லில் உள்ள கங்கனா ரனாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக கூறி

மாநகராட்சியினர் அவற்றை இடித்து தள்ளினர். இந்த விவகாரங்களால் கங்கனா ரனாவத் மற்றும் உத்தவ் தாக்கரே அரசு இடையே மோதல் வலுத்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் நடக்கும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிராவில் உங்கள் அரசு, என்னை நடத்தும் விவகாரம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா?

சட்ட மேதை அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உங்கள் அரசை உங்களால் கேட்க முடியவில்லையா? பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களை

நீங்கள் அறிந்திருக்கக் கூடும். சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி ஒரு பெண்ணை உங்கள் அரசு துன்புறுத்தும் நிலையில், உங்களின்

அமைதியையும் அலட்சியத்தையும் வரலாறு மதிப்பு செய்யும். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்களென நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Posted in சினிமா

தினமும் மாட்டுக் மூத்திரம் குடிப்பேன் – அதிர வைத்த அக்‌ஷய் குமார்

தினமும் மாட்டுக் மூத்திரம் குடிப்பேன் – அதிர வைத்த அக்‌ஷய் குமார்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார், தான் தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பதாக கூறியுள்ளார்.

தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன் – அதிர வைத்த அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்


டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான

சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக

வெளியிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சினிமா, அரசியல் பிரபலங்களும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகின்றனர். கடந்த

சில மாதங்களுக்கும் முன்னர்கூட நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தற்போது பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அதில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் பியர் கிரில்ஸ் தனக்கு யானை சாணத்

தில் டீ போட்டுக் கொடுத்ததாக அக்‌ஷய் குமார் தெரிவித்தார்.

பியர் கிரில்ஸ், அக்‌ஷய் குமார்

இந்நிலையில் பியர் கிரில்ஸ், அக்‌ஷய் குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் சமூக வலைதளத்தில் லைவ்

வீடியோ சாட் செய்தனர். அப்போது, யானை சாணத்தில் போட்ட டீயை எப்படித் தான் குடித்தீர்களோ என்று ஹூமா, அக்‌ஷய் குமாரிடம் கேட்டார்.

அதற்கு அக்‌ஷய் குமார் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் கூறியதாவது, நான் தினமும் மாட்டுக் கோமியம்

குடிப்பதால், யானை சாண டீ எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றார். ஆயுர்வேத காரணங்களுக்காக தான் தினமும் கோமியத்தை குடிப்பதாக அவர் கூறினார்.