Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்- தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி
டி.ராஜேந்தர்- முரளி- பி.எல்.தேனப்பன்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.
அதில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். துணைத் தலைவர்கள்
பதவிக்கு சிவசக்தி பாண்டியன், பி.டி.செல்வகுமார், முருகன், ஆர்.கே.சுரேஷ் ஆகிய 4 பேர் போட்டியிடுகிறார்கள். செயலாளர்கள்
பதவிக்கு ‘கலைப்புலி’ ஜி.சேகரன், மன்னன், சுபாஷ் சந்திரபோஸ், ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு
கே.ராஜன், சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
வேட்பு மனு தாக்கல், கடந்த 15-ந் தேதி தொடங்கியது. டி.ராஜேந்தர், முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் வேட்பு
மனு தாக்கல் செய்தார்கள். வேட்பு மனுவை வாபஸ் பெற வருகிற 29-ந்தேதி கடைசி நாள். ஓட்டுப்பதிவு நவம்பர் 22-ந்தேதி காலை 8
மணிக்கு தொடங்கும். அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.
ரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்
ரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்
பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷூக்கு, ரகசியமாக திருமணம் நடந்துள்ளது.
ரகசிய திருமணம் செய்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் – பொண்ணு யார் தெரியுமா?
ஆர்.கே.சுரேஷின் திருமண புகைப்படம்
தம்பிக்கோட்டை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதையடுத்து விஜய் ஆண்டனியின் சலீம், விஜய்
சேதுபதி நடித்த தர்மதுரை போன்ற படங்களை தயாரித்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை
தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அவதாரமெடுத்தார். பின்னர் மருது, ஸ்கெட்ச், பில்லா பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அவருக்கும், சீரியல் நடிகை திவ்யாவுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது திருமணம் நின்று போனது.
ஆர்.கே.சுரேஷின் திருமண புகைப்படம்
இந்நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும், சினிமா பைனான்சியரான மது என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு
முன்பு ரகசியமாக திருமணம் நடந்துள்ளது. அந்த திருமண விழாவில் வெறும் 15 பேர் தான் கலந்து கொண்டார்களாம். இந்த
தகவல் கசிந்ததை அடுத்து, தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என ஆர்.கே.சுரேஷ் பதிவிட்டுள்ளார்..

தாக்கப்பட்ட சனம் ஷெட்டி… கதறி அழும் சுரேஷ்
தாக்கப்பட்ட சனம் ஷெட்டி… கதறி அழும் சுரேஷ்
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை சனம் ஷெட்டியை சுரேஷ் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தாக்கப்பட்ட சனம் ஷெட்டி… கதறி அழும் சுரேஷ்
சனம் – சுரேஷ்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பதினாறு போட்டியாளர்
கொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது அரச குடும்பம் அரக்கர்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில், சுரேஷ் வைத்திருக்கும் தடியால் சனம் ஷெட்டியை தாக்குகிறார்.
அதன்பின் கோபமடையும் சனம் செட்டி சுரேசை திட்டுகிறார். சுரேஷின் இந்த செயலை ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
சனம் – சுரேஷ்
அதன்பின் பிக்பாஸ் இடம் பேசும் சுரேஷ், செய்த தவறுக்கு கதறி அழுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ… வனிதாவை விளாசிய கஸ்தூரி
சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ… வனிதாவை விளாசிய கஸ்தூரி
சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ என்று வனிதா வெளியிட்ட வீடியோவிற்கு கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ… வனிதாவை விளாசிய கஸ்தூரி
கஸ்தூரி – வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். இந்த அறிவிப்பு வந்ததிலிருந்து
சர்ச்சையானது. இந்த சர்ச்சை முடிந்து சுமுகமாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், வனிதா தனது 40வது பிறந்தநாளை
கொண்டாட பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்றார்.
அங்கு பீட்டர் பால் மது அருந்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சென்னை திரும்பிய பிறகும் பீட்டர் பால்
தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட வனிதா, பீட்டர் பால் ரொம்ப குடிக்கிறார், நம்பி
ஏமாந்துவிட்டேன். தற்போது என்னால் சிரிக்கக் கூட முடியவில்லை. அவர் வீட்டிற்கும் வருவது இல்லை, செல்போனையும் சுவிட்ச் ஆஃப்
செய்துவிட்டார். ஹார்ட் அட்டாக் வந்து உயிர் பிழைத்த மனிதர் இப்படி மது அருந்துவதும், புகைப்பிடிப்பதுமாக இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த ஒருவர், வனிதாவின் வீடியோ பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கஸ்தூரியிடம் கேட்டார். அதற்கு கஸ்தூரியோ, வீடியோ வேறையா? பார்த்துட்டு சொல்றேன். என் அனுபவத்தில் இது சொல்வதெல்லாம் பொய் ரகம் என்றார்.
கஸ்தூரி – வனிதா
வீடியோ பார்த்த கஸ்தூரி, ஓமைகாட், நான் அந்த கண்ணீர் வீடியோவை பார்த்தேன். அருமையாக எடிட் செய்து, ஸ்டைலான கார்டு எல்லாம் இருந்தது. சொந்த வாழ்க்கையை வியாபாரம்
பண்ணுறது என்ன பொழப்போ, புரியலடா சாமி. எல்லாம் பொய், தற்புகழ்ச்சி, எல்லோரும் கெட்டவங்க, வனிதா மட்டும் தான்
பாதிக்கப்பட்டவர். அது எல்லாம் எதிர்பார்த்தது தான். ஆனால் எலிசபெத் ஹெலன் மீது ஏன் புகார் தெரிவிக்கணும்? நம்ப முடியவில்லை.
கஸ்தூரி பதிவு
வீடியோவில் நாலு விளம்பர இடைவேளை வேறு. ஸ்க்ரிப்ட் எடிட் செய்யப்பட்டு, நன்றாக பெர்ஃபார்ம் செய்யப்பட்ட இந்த வீடியோ
மூலம் நிறைய சம்பாதிப்பார். பீட்டர் பாலின் மருத்துவ செலவுக்கான பணத்தை சம்பாதிக்க பார்க்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார்
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார்
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்
விஜய் சேதுபதி
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் 800 என்ற
தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன்
வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் முத்தையா முரளிதரன் விஜய்சேதுபதிக்கு விடுத்த வேண்டுகோளில் 800 என்ற திரைப்படத்தில் நடிக்க வேண்டாம்
என்று கூறி இருந்தார். அதை ஏற்று விஜய்சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார்.
இதற்கிடையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை
மிரட்டல் விடுத்து, நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆபாச கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
விஜய் சேதுபதி
இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 3
சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கலகத்தை தூண்டுதல், ஆபாச கருத்து பதிவிடுதல்
மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி இலங்கையைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய இலங்கை
செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
ரேணிகுண்டா படம் மூலம் பிரபலமான இளம் நடிகை மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறி இருக்கிறார்.
மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
சனுஷா
தமிழில் அரண், காசி, பீமா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா, ரேணிகுண்டா படத்தில்
கதாநாயகியானார். தொடர்ந்து நாளை நமதே, எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களிலும்
நடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:-
“கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை
பயமுறுத்தின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன்.
தம்பியுடன் சனுஷா
அப்போது மிகவும் பாசம் வைத்துள்ள எனது தம்பியை பற்றி யோசித்தேன். நான் இறந்துபோனால் அவனால் தாங்கி கொள்ள
முடியாது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சியை கைவிட்டேன். பிறகு டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்தேன்.
அதன் பிறகு எனது மனதில் இருந்து சுமைகள் விலகி பழைய நிலைக்கு மாறினேன். என்னைப்போல் யாருக்கேனும் மன அழுத்தம்
இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன்.”
இவ்வாறு சனுஷா கூறியுள்ளார்.
மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்
மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்
சென்னை கோடம்பாக்கத்தில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டிய கன்னட நடிகைக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய நடிகை… போலீசார் அபராதம்
வம்ஷிகா
சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று முன் தினம் இரவு அதிவேகமாக சென்ற காரை சில வாகன ஓட்டிகள் ஆற்காடு
சாலையில் மடக்கிப் பிடித்தனர். ஓட்டுனர் இருக்கையில் இருந்த பெண் குடிபோதையில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. அவர்
கர்நாடகவை சேர்ந்த நடிகை வம்ஷிகா என்பதும் தெரியவந்தது. பின்னர் பொது மக்களுடன் அந்த நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடிகை வம்ஷிகா குடிபோதையில் இருப்பதை உறுதி செய்ததையடுத்து
பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று மாலை விசாரணைக்காக பாண்டி பஜார்
காவல்நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காரின் பதிவு எண் கர்நாடக பகுதியை சேர்ந்தது ‘
என்பதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தான் மது அருந்திருந்ததாகவும் ஆனால் சுய நினைவோடுதான் இருந்ததாக தெரிவித்தார்.
வம்ஷிகா
மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறுதான், ஆனால் உலகில் யாரும் செய்யாத தவறை தான் செய்யவில்லை என
விளக்கமளித்தார். மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக காவல்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதாக நடிகை வம்ஷிகா தெரிவித்தார்.
மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை
மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை
மாஸ்க் அணியாமல் சுற்றுலா சென்ற பிரபல நடிகையிடம், சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
மாஸ்க் அணியாமல் அபராதம் கட்டிய பிரபல நடிகை
அதிதி பாலன்
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, அனைத்து சுற்றுலா தலங்களும்
மூடப்பட்டன. தற்போது தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதிதி பாலன்
அப்போது அங்கு முகக்கவசம் இன்றி வந்த நடிகை அதிதி பாலனிடம் சுகாதாரத்துறை
அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதித்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
பின்னர் அதிதி பாலன் 200 ரூபாயை அபராதம் கட்டி சென்றதாக கூறப்படுகிறது
. அதிகாரிகளிடம் நடிகை அதிதி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சில மணி நேரம் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை
மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார்.
அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த மகாராஷ்டிர அரசு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கங்கணாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்தது. மேலும், கங்கனா
மகாராஷ்டிர மாநிலம் வரவும் கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது.
இதையடுத்து, ’ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் இமாச்சலபிரதேசத்தில் இருந்து கங்கனா மீண்டும் மகாராஷ்டிரா வந்தார். அவர் தற்போது தனது சொந்த மாநிலமான இமாச்சலபிரதேசம் வசித்து வருகிறார்.
அவர் கடந்த சில நாட்களாக தனது சமூகவலைதள பக்கமான டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
பாலிவுட்டில் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (47) நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை
மாணவர்களுக்கு காட்டியதற்காக 18 வயது இளைஞனால் நேற்று தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரமான கொலைதொடர்பாக நேற்று முதல் தனது டுவிட்டர் பக்கத்தில் கங்கனா அடுக்கடுக்கான கருத்துக்களை பதிவு
செய்து வந்துள்ளார். கங்கனாவுடன் இணைந்து அவரது சகோதரி ரங்கோலி சந்தலும் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.
பாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சமூகவலைதளத்தில் பதிவு செய்த கருத்துக்கள் அனைத்தும் மத ஒற்றுமையை
சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்திரா மாஜிஸ்திரேட் மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில் ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பர் புகார் மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்த்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி
ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை
போதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராகினி கொடுத்த தகவலின் பேரில் அஜித் பட நடிகர் வீட்டில் விசாரணை நடைபெற்றுள்ளது.
போதை பொருள் வழக்கு – ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் விசாரணை
ராகினி
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் போதைப் பொருள் குறித்த விவாதங்கள் பாலிவுட் விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி
விட்டது. ஆனால் கர்நாடக திரை நட்சத்திரங்கள் மத்தியில் போதைப் பொருள் புழங்குவதாக பல மாதங்களுக்கு முன்பே விசாரணை தொடங்கப்பட்டு விட்டது.
இந்த விசாரணை மத்தியக் குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல்
தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் போதைப் பொருள்
பயன்படுத்தியது மற்றும் அந்தக் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக
நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி மற்றும் அவர்களது நண்பர்கள்
என 14 பேர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விவேக் ஓபராய்
இந்நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதி
அளித்த தகவலின்பேரில் மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்
வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்
முன்னணி நடிகையான தமன்னா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் சென்ற போது அவரது பெற்றோர்கள் கட்டியணைத்து வரவேற்றிருக்கிறார்கள்.
வீடு திரும்பிய தமன்னா… கட்டியணைத்து வரவேற்ற பெற்றோர்கள்
தமன்னா
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை” எனக்கூறியிருந்தார்.
இதையடுத்து ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் சென்ற தமன்னாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர்
ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஐதராபாத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார்.
தமன்னா
இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தமன்னா மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். வீட்டிற்கு
வரும் தமன்னாவை வாசலிலேயே வரவேற்று அவருடைய அப்பாவும், அம்மாவும் கட்டியணைத்து வரவேற்றார்கள். தான் மீண்டு
வந்ததைப் பற்றியும் உருக்கமான வீடியோ ஒன்றை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

காதலில் விழுந்த லட்சுமி மேனன்
காதலில் விழுந்த லட்சுமி மேனன்
சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய லட்சுமி மேனன், தான் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.
காதலில் விழுந்த லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்
சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து
பிரபலமானார். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான றெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின், படிப்பில் கவனம் செலுத்திய லட்சுமி மேனன் நடிப்பிற்கு
சில ஆண்டுகள் முழுக்கு போட்டார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த வருகிறார்.
சமீபத்தில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு அவர் உடனடியாக மறுப்பு
தெரிவித்தது மட்டுமல்லாமல், அந்நிகழ்ச்சி குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.
லட்சுமி மேனனின் இன்ஸ்டாகிராம் பதிவு
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன், அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்
ஒருவர், நீங்கள் சிங்கிளா? என கேள்வி எழுப்பினார். அதற்கு இல்லை என பதிலளித்த லட்சுமி மேனன், கூடவே ஹார்டின் சிம்பலையும் பதிவிட்டுள்ளார்.
அதே போல, திருமணத்தை பற்றி என்ன நினைக்கிறீங்க? என மற்றொரு ரசிகர் கேட்க, அது ஒரு மிகைப்படுத்தப்பட்டது என்று
அவர் பதிலளித்துள்ளார். தற்போது நடிகை லட்சுமிமேனன் தான் சிங்கிளாக இல்லை என கூறி இருப்பதால், அவரது காதலர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்
விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்
விஜய் சேதுபதி படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் ஆதரவாக களம் இறங்கி இருக்கிறார்கள்.
விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்
விஜய் சேதுபதி
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி 800 என்ற படத்தை
உருவாக்கவுள்ளனர். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது. “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும்,
விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது” என்று கண்டித்தனர்.
விஜய் சேதுபதி
நேற்று மோசன் போஸ்டர் வெளியான நிலையில் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வந்தனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக, we stand with vijay Sethupathi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
சிறையில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா திடீர் மோதல்
சிறையில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா திடீர் மோதல்
போதைப்பொருள் விவகாரத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள
நடிகைகள் ராகிணி, சஞ்சனா மோதிக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உன்னால தான் என் தூக்கமே போச்சு… சிறையில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா திடீர் மோதல்
ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி
கன்னட திரை உலகில் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர்கள் பரப்பன அக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நடிகைகள் 2 பேரும் மோதிக் கொண்டுள்ள சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிறையில் இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு வரை புத்தகம்
படித்துவிட்டு தூங்கவிடாமல் செய்வதாக நடிகை ராகிணி மீது சஞ்சனாவும், அதிகாலையில் எழுந்து யோகா பயிற்சி செய்வதால்
தன்னால் தூங்க முடியவில்லை என்று சஞ்சனா மீது ராகிணியும் சிறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார்கள் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராகணி திவேதி, சஞ்சனா கல்ராணி
நடிகைகள் 2 பேரையும் சிறை அதிகாரிகள் சமாதானப்படுத்தினாலும், அவர்கள் தினமும் சண்டை போட்டு
கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் இருவர் இடையே சில நேரங்களில் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும்,
அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் ராகிணி, சஞ்சனாவிடம் அமலாக்கத்துறையினர் 5 நாட்கள் விசாரணை நடத்திவிட்டு சென்ற பிறகு தான், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி முதலில் கைதான பின்பு தான் சஞ்சனா கைதாகி இருந்தார்.
இதனால் உன்னால் (ராகிணி) தான், நான் கைதாக நேரிட்டதாக சஞ்சனா கூறுவதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும் 2 நடிகைகளும் சண்டை போட்டு வருவதாக தகவல் வெளியாகி
உள்ளது. சிறையில் நடிகைகள் மோதிக் கொள்ளும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்
ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்
சிதம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரென்ன மண்புழுவா?…. ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்
வைரமுத்து, ராஜேஸ்வரி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர், கடந்த ஜூலை 17ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது
பட்டியலினத்தை சேர்ந்தவர் எனக்கூறி கீழே அமர வைத்து அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின்
புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பட்டியலினத்துத் தாயொருத்தி தரையில்
வீசப்படுவதா? அவரென்ன மண்புழுவா? தலைவியாய்க் கூட அல்ல.. மனுஷியாய் மதிக்க வேண்டாமா? என் வெட்கத்தில் துக்கம்
குமிழியிடுகிறது. தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க வேண்டிய துயரங்களுள் இதுவும் ஒன்று”. என வேதனை தெரிவித்துள்ளார்.
வைரலாகும் ராஷி கண்ணாவின் கவர்ச்சி போட்டோஷூட்
வைரலாகும் ராஷி கண்ணாவின் கவர்ச்சி போட்டோஷூட்
நடிகை ராஷி கண்ணாவின் சமீபத்திய கவர்ச்சி போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் ராஷி கண்ணாவின் கவர்ச்சி போட்டோஷூட்
ராஷி கண்ணா
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம்
வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய
வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, மேதாவி, சைத்தான் கா பட்சா போன்ற படங்களில் நடிக்க உள்ளார்.
இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
ராஷி கண்ணா
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை
சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார், அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். படங்களில்
பெரும்பாலும் கவர்ச்சியான வேடங்களில் நடித்திராத ராஷி கண்ணா தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சிம்பு பட நடிகையின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு பட நடிகையின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் சிம்புவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
சிம்பு பட நடிகையின் திடீர் அறிவிப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்
சிம்பு
சிம்பு நடிப்பில் வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சனா கான். இதை தொடர்ந்து இவர்,
தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல படங்கள்
நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது இந்தி படம் ஒன்று உருவாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது சனா கான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு திடீர் முடிவை அறிவித்துள்ளார். இனிமேல்
திரைப்படம் உள்ளிட்ட எவற்றிலும் நடிப்பதில்லை. இனி இறைவனின் ஆணைப்படி, தன்னால் முடிந்த உதவிகளை செய்து
கொண்டு வாழ்வது என முடிவெடுத்து இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
சிம்புடன் சனாகான்
சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் இவர் டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இவர் பின் தொடர்ந்தவர்கள்
அதிக பேர். இந்நிலையில் சனாகானின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
என் கனவு அது மட்டும்தான் – கல்யாணி பிரியதர்ஷன்
என் கனவு அது மட்டும்தான் – கல்யாணி பிரியதர்ஷன்
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக இருக்கும் கல்யாணி பிரியதர்ஷன், என் கனவு அது மட்டும்தான் என்று பேட்டியளித்துள்ளார்.
என் கனவு அது மட்டும்தான் – கல்யாணி பிரியதர்ஷன்
கல்யாணி பிரியதர்ஷன்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக்
சுப்புராஜ் ஆகியோர் உடன் சுஹாசினி மணி ரத்னமும் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை
இயக்கியுள்ளனர். இதில் ‘இளமை இதோ இதோ’ என்ற கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காளிதாஸ்
ஜெயராம், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து கல்யாணி பிரியதர்ஷன் கூறும்போது, ‘இளமை இதோ இதோ’ படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்கள் நடைபெற்றது
. நாயகன் காளிதாஸ் ஜெயராம் என்னுடைய குடும்ப நண்பர். சிறந்த நடிகர். படப்பிடிப்பு மிகவும் ஜாலியாகவும் சிறந்த அனுபவமாகவும் இருந்தது.
செட்டில் 5 பேர்தான் இருந்தோம். நானே மேக்கப் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பார்த்தேன். இந்த அனுபவம் சிறப்பாக இருந்தது’ என்றார்.
பெண் இயக்குனர் படத்தில் நடித்த அனுபவம் குறித்த கேள்விக்கு, என்னை பொருத்தவரை ஆண் இயக்குனர், பெண் இயக்குனர் என்று
பார்க்க முடியவில்லை. இயக்குனர்கள் எல்லோரும் குரு. அவர்களை சொல்லுவதை திறமையாக செய்ய வேண்டும் அதுதான் என் வேலை. அதை சிறப்பாக செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
கல்யாணி பிரியதர்ஷன்
என் கனவு ஒன்று மட்டும்தான். ஒரே ஒரு படம் மட்டும் இயக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அது இப்போ இல்லை. விரைவில் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்’ என்றார்.
‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்
திருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
காஜல் அகர்வால்நடிகை காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். பின்னர் விஜய்
, அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம்
முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணத்தை எளிய முறையில் நடத்த உள்ளோம். மேலும் எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இத்தனை ஆண்டுகாலம் திரைத்துறையில்
ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. திருமணத்திற்கு பின்னரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து
நடிப்பேன்” என காஜல் அகர்வால் அதில் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி
ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி
சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக இருக்கும் ஷிவானி, ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி
ஷிவானி நாராயணன்
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தினமும் இவரது
புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள். தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
ஷிவானி நாராயணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளே ஷிவானியை வைத்து சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக
லாக்டவுனில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களில் ஒல்லியாக இருந்ததாகவும், தற்போது டி.வி.யில் பார்க்கும் போது
மிகவும் குண்டாக இருப்பதாகவும் ட்ரோல் செய்கிறார்கள். இவ்வளவு நாள் எடிட் செய்த போட்டோவை போட்டு ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்






