Author: நலன் விரும்பி
பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இன்றுவரை 55 முறைப்பாடுகள்
பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இன்றுவரை 55 முறைப்பாடுகள்
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இன்றுவரை 55 முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
அத்துடன் கடந்த 13,14 ஆம் மற்றும் 15 ஆம் திக்திகளில் இடம்பெற்ற அஞ்சல் வாக்கு பதிவிடும் நடவடிக்கை உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களின் மேற்பார்வையின் கீழ் சுமூகமாக
நடைபெற்றதாகவும் இன்றும் நாளையும் முப்படை,பொலிஸ் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகத்தை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கான அஞ்சல் வாக்கு பதிவு இடம்பெறவுள்ளதுடன் அதற்குரிய ஏற்பாடுகள் நிறைவுபெற்றுள்ளதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை வௌியிடுவோருக்கு எச்சரிக்கை
கொரோனா பரவல் தொடர்பில் போலியான செய்திகளை வௌியிடுவோருக்கு எச்சரிக்கை
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் போலியான செய்திகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவோரை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துளள்ளன.
இந்த குழுவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 26 அதிகாரிகள் அடங்குவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு போலி செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது ´தண்டனைச் சட்டத்தின் 120 ஆம் பிரிவுக்கு அமைய தண்டனைக்குரிய குற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி குற்றாவாளிகள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு இரண்டு வருட சிறை தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் – கிளிநொச்சி
வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் – கிளிநொச்சி
தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்கள் மற்றும் அவற்றினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களை தடுப்பது தொடர்பில்; கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றைய தனம் இந் நிகழ்வு நடைபெற்றது.
வீதி விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் காயமுறுவதன் மூலமாக உடல் வலுவினை இழக்கின்ற நிலைமைகளை குறைப்பதற்கான செயற்திட்டத்தினை மேற்கொள்வதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்தவகையில் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதோடு முன்மொழிவுகளும் பெறப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக மாவட்ட மட்டத்தில் விபத்துக்களினை தவிர்ப்பது தொடர்பிலான குழுவொன்றினை உருவாக்கி விபத்துக்கள் இடம்பெறுவதற்கான காரணங்களை ஆராய்வதற்கும் விபத்துக்கள் ஏற்படுகின்ற நிலைமையில் அவ் விபத்தானது நிகழ்ந்த காரணம் தொடர்பில் ஆராய்ந்து அறிந்து அவற்றை தவிர்ப்பதன் ஊடாக எதிர்காலத்தில் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களை வெகுவாக குறைத்துக்கொள்ளும் வகையில் ஆரம்பகட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக சமூகமட்டத்திலான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம்
சுகாதார பாதுகாப்பின் அடிப்படையில் பரீட்சை சான்றிதழ்கள் Online மூலம் மாத்திரம் விநியோகம்
சுகாதார பாதுகாப்பு காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் மற்றும்
பொதுவான சேவைக்கான கருமபீடம் மீள அறிவிக்கும் வரையில் 2020 ஜுலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சான்றிதழை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரருக்காக Online மூலமாக விண்ணப்பித்து 48 மணித்தியால காலப்பகுதிக்குள்
சான்றிதழை வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www.doenet.lk உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் அல்லது 011 2784323 என்ற
தொலைபேசியின் ஊடாக சான்றிதழ் ஆவண களஞ்சிய பிரிவுடன் தொடர்புகொண்டு அல்லது துரித தொலைபேசி இலக்கமான 1911 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்
கிளிநொச்சி வளாக மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற முடியாது
கிளிநொச்சி வளாக மாணவர்கள் வளாகத்தை விட்டு வெளியேற முடியாது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் நாள் வரை வளாகத்தை விட்டு வெளியேற முடியாது என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும். எனினும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வர முடியாது என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பீடங்களின் பரீட்சை நடவடிக்கைகள் நாளை வழமைக்குத் திரும்பும் என்று வளாகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள தொழில் நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு கோரோனா தொற்று ஏற்படவில்லை என அவரது உயிரியல் மாதிரிகளின் பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அவரது பெற்றோரின் பிசிஆர் பரிசோதனை முடிவிலும் அவர்களுக்கு இல்லை என்று தெரியவந்தது.
அதனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை மீளத் திறந்து இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பரீட்சையை நடத்துவது தொடர்பில் புதிய கட்டுப்பாட்டுடன் சுகாதாரத் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் உள்ள விவசாயம், தொழில்நுட்ப பீடங்களின் விடுதியில் உள்ள இறுதி ஆண்டு மாணவர்கள் அனைவரும் பரீட்சைகள் நிறைவடையும் நாள்வரை வளாகத்தைவிட்டு வெளியேற முடியாது.
அனைத்து மாணவர்களும் வளாகத்துக்குள் நடமாட முடியும். எனினும் எந்தவொரு மாணவரும் வளாகத்தைவிட்டு வெளியேறி மீள வளாகத்துக்குள் வர முடியாது. அவர்களுக்கான உணவு வழங்கப்படவேண்டும்.
அத்தோடு விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க முடியும். மாணவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதோடு அடிக்கடி கைகளை உரிய தொற்று நீக்கிகொண்டு கழுவுதல்வேண்டும்.
எந்தவொரு வெளிமாவட்ட மாணவரும் வீடு சென்று திரும்பிவர அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று மத்திய சுகாதார அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் – அமைச்சரவை தீர்மானம்
மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் – அமைச்சரவை தீர்மானம்
2020 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பில் சமீப காலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு மற்றும் முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தி பொது மக்களுக்கு பாரிய அளவிலான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக மின் சக்தி மற்றும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் மின் கட்டணம் தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவு படுத்துவதற்காக தம்மால் அமைச்சரவைக்கு ஆவணம் ஒன்று இதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறினார்.
நிவாரணத்தை வழங்குவதற்காக அமைச்சரவையினால் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு அமைவாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே முதலான மாதங்களில் ஒவ்வொரு மின்சாரக் கட்டணம் பட்டியலின் பெறுமதி பெப்ரவரி மாதத்தில் பெறுமதியிலும் பார்க்க அதிகமாயின் பெப்ரவரி மாதத்திற்கு சமமான தொகை வீதம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக அறவிடுதல் மற்றும் அந்த மின்சாரக் கட்டண பணக் கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக 02 மாத கால அவகாசத்தை வழங்குதல்.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகிய 3 மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை தற்பொழுது செலுத்தியுள்ள பாவணையாளர்களுக்கு கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொழுது அவர்களினால் கூடுதலாக செலுத்தியுள்ள தொகையை மீள செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்காக 2 மாத நிவாரண காலம் வழங்கப்படவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் எந்தவித மின் துண்டிப்பையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்குவதற்காக மின்சார சபைக்கு மானியத்தை வழங்குவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
ஜப்பான்- கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடிசெய்த நபர் கைது
ஜப்பான்- கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடிசெய்த நபர் கைது
ஜப்பான் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தொழில்வாய்ப்புகளை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கண்டி
குற்றத் தடுப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர் நேற்று (14) தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் நாட்டில் உள்ள பிரசித்திப்பெற்ற விகாரைகளில் உள்ள தேரர்களையும் பிரபலமானவர்களின்
பெயர்களையும் பயன்படுத்தி 5,379,900 ரூபா பணத்தை மோசடி செய்துள்ளார்.
காலி பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தொடர்பில் வத்தேகம, மாத்தறை, அநுராதபுரம், பெலியத்த, மதுகம, ஹிக்கடுவ, மீடியாகொட, மிஹான, தெல்தெனிய, பலாங்கொட, தம்புள்ளை, தலங்கம, கதான, அளுத்கம,
நாரோஹேன்பிட்டிய, மினுவங்கொட, சபுகஸ்கந்த, நவகமுவ, கெக்கிராவ ஆகிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி குற்றத் தடுப்பு நடவடிக்கை பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.
வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணியில் இலங்கை இராணும்
வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணியில் இலங்கை இராணும்
அடுத்த வருடம் தொடக்கம் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் பணி இலங்கை இராணுவத்திடம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வருடாந்தம் பெரும் தொகை பணத்தை செலுத்தி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சாரதி
அனுமதிப்பத்திரத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் தனியார் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சாரதி அனுமதிப்பத்திரத்தை பொது மக்கள் பெற்றுக்கொள்ளும் பொழுது அதற்காக 1340 ரூபா செலுத்த வேண்டும். இதேபோன்று 2009 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு
வழங்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தத்தினால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய பெரும் தொகையிலான பணம் வெளிநாட்டை சென்றடைந்தது.
தொடர்ச்சியாக இந்த நிறுவனத்திற்கான ஒப்பந்தம் நீடிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஒப்பந்தத்திற்கு அமைய அதனை முடிவிற்கு கொண்டு
வராமையினால் இந்த நிலை ஏற்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
இந்த விடயங்களைக் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்கும் பணியை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைப்பது தொடர்பில் நேற்றைய தினம்
விசேட பேச்சுவார்த்தை ஒன்று போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர
சில்வா, அமைச்சின் செயலாளார் காமினி செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் சுமுகமான முறையில் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பு
மட்டக்களப்பில் சுமுகமான முறையில் இடம்பெற்ற தபால்மூல வாக்களிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறை களுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில்
தபால்மூல வாக்களிப்பின் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது.
இதன்படி மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களின் மாவட்ட மற்றும் பிரதேச அலுவலகங்களிலும்
இந்த வாக்களிப்பு நடைபெற்றது. இதன்போது பொது சுகாதார துறையினர் சுகாதார முறைகளை கவனிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இம்மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்காக மட்டக் களப்பு தேர்தல் தொகுதியில் 7342 அரச உத்தியோகத்தர்களும், பட்டிருப்புத் தொகுதியில் 3047 அரச உத்தியோகத்தர்களும், கல்குடா தேர்தல்
தொகுதியில் 2426 அரச உத்தியோகத்தர்களுமாக மொத்தம் 12815 பொலிஸ் மற்றும் முப்படையினர் அடங்களான அரச உத்தியோகத்தர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கமைய தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அலுவலர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்காக 14, 15 ஆந்திகதிகள் தத்தமது அரச காரியாலயங்களிலும் மற்றும் மாவட்ட செயலகங்கள், தேர்தல்
அலுவலகங்கள், பொலிஸ், முப்படை சிவில் பாதுகாப்பு படை உட்பட சுகாதார துறையினர் எதிர்வரும் 16, 17 ஆந்திகதிகளில் நள்ளிரவு 12.00 மணிவரையும் வாக்களிக்க முடியுமெனவும், இத்தினங்களில்
வாக்களிக்க முடியாதவர்கள் தாம் சேவைபுரியும் நிலையம் அமைந்துள்ள மாவட்ட செயலகங்களில் அல்லது மாவட்ட தேர்தல்
காரியாலயங்களில் 20,21 வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக தபால் திணைக்களத்திற்கு எதிர்வரும் 11, 12, 13 ஆந் திகதிகளில் கையளிக்கப்படவுள்ளதுடன், வாக்காளர்
அட்டைகள் வீடு வீடாக விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 29 ஆந் திகதிவரையும் இடம்பெறும் எனவும் வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் 29ஆந் திகதிக்கு பின் தபால்
அலுவலகங்களில் தத்தமது அடையாளத்தினை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்முடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது
தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது
தமிழர்களின் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்கும் வகையிலேதான் இந்த அரசு செயற்படுகிறது என முன்னாள்
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்
நேற்று (14) கிளிநொச்சி வலைப்பாட்டுப் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில்
கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் இந்த நாட்டிலே விடுதலை வேண்டி 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகிறோம். ஆரம்பத்தில் தந்தை செல்வா தலைமையில்
அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத வழியில் தலைவர் பிரபாகரன் தலைமையிலும் போராடி வந்தவர்கள் தமிழர்கள்.
தமிழர்கள் சிங்கள மக்களின் உரிமைகளை பறிப்பதற்காக இந்த மண்ணில் போராடவில்லை. நாம் பூர்விகமாக வாழ்ந்த இந்த
மண்ணிலே எமது உரிமைகளை பெறுவதற்காகவே நாம் போராடி வந்திருக்கிறோம் போராடியும் வருகிறோம்.
இவ்வாறாக நீண்ட காலமாக இடம் பெற்றுவரும் தேசிய விடுதலை போராட்டத்தை சிதைக்க இந்த அரசு உத்வேகத்துடன்
செயற்படுகிறது. வடக்கு கிழக்கு பூராகவும் இராணுவ சோதனை நிலையங்களை நிறுவி சோதனையிட்டு தமிழர்களை தொடர்ந்தும் ஒரு இராணுவ கெடுபிடிக்குள் வைத்திருக்கவே இந்த அரசு
செயற்படுகிறது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
இப் பிரச்சாரக் கூட்டத்தில் வடமகாண முன்னாள்கல்வி அமைச்சர் குருகுலராஜா பச்சிலைப்பள்ளி, கரைச்சி தவிசாளர்கள் கட்சியின்
செயற்ப்பாட்டாளர்கள்,மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்
இலங்கை கடற்படைக்கு புதியவர் நியமனம்
இலங்கை கடற்படைக்கு புதியவர் நியமனம்
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார்.
இவர் இலங்கையின் 24 ஆவது கடற்படை தளபதியாவார்.
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

பிரிட்டனில் கொரனோவால் 45 ஆயிரம் மக்கள் பலி
பிரிட்டனில் கொரனோவால் 45 ஆயிரம் மக்கள் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 45 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியான மக்கள் தொகை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி சுமார் மூன்று லட்சம் மக்கள் பாதிக்க பட்டு இருந்தமையும் ,ஆளும் பிரிட்டன் அதிபர் ஜோன்சன்
நோயின் தொற்றுக்கு உள்ளாகி உயிர் தப்பி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது
செயல் இழந்த வாட்சப் – பாதிக்க பட்ட பயனாளிகள்
செயல் இழந்த வாட்சப் – பாதிக்க பட்ட பயனாளிகள்
உலக மக்களை ஆட்டி படைத்து வரும் வாட்சப் மதியம் நான்கு மணியளவில் செயல் இழந்து காணப்பட்டது
இதன் பாதிப்பு அமெரிக்கா ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா ,வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் அது வழமையான செயல் பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது
கண்ணிவெடி தாக்குதலில் ரசியா இராணுவத்தினர் காயம்
கண்ணிவெடி தாக்குதலில் ரசியா இராணுவத்தினர் காயம்
சிரியாவின் இட்லி பாகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடு பட்டிருந்த ரஷியா
,துருக்கிய இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்த பட்ட கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி மூன்று ரசியா படைகள் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் துருக்கிய படைகளும் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
தொடர்ந்து அகோர சண்டை இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கோட்டா அரசு சாதனை – 50 ரூபாவுக்கு நெல் கொள்வனவு – குஷியில் மக்கள்
கோட்டா அரசு சாதனை – 50 ரூபாவுக்கு நெல் கொள்வனவு – குஷியில் மக்கள்
ஓரு கிலோ கிராமிற்கு 50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் 2020 சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியினால் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 சிறுபோகத்தில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 50 ரூபா
உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்யும் பணியை தற்பொழுது ஆரம்பித்துள்ளது.
கடந்த வருடங்களில் நாட்டரிசி நெல் கிலோ கிராம் ஒன்று 38 ரூபா மற்றும் சம்பா நெல் கிலோ 41 ரூபா என்ற அடிப்படையிலும் கொள்வனவு செய்யப்பட்டதுடன் அதிமேதகு ஜனாதிபதியின்
நாட்டை கட்டியெழுப்புவதற்கான சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, புதிய அரசாங்கத்தினால்
2019 /2020 சிறுபோகத்தில் அனைத்து நெல் வகைகளுக்கும் ஆகக்கூடிய விலையை வழங்கி ஒரு கிலோ கிராம் நெல் 50 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்படுகின்றது.
இதற்கு அமைவாக இம்முறை சிறுபோகத்திலும் விவசாயிகளின் நெல் அறுவடைக்காக ஆகக்கூடிய விலை ஒன்று வழங்கப்படுவதை உறுதி செய்து ஒரு கிலோ கிராம் நெல் 50 ரூபா என்ற உறுதி
செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தும் சபை கொண்டுள்ள நாடு முழுவதிலும் அமைந்துள்ள அனைத்து களஞ்சியசாலைகளும் தற்பொழுது
திறக்கப்பட்டுள்ளன. தாமதமின்றி விவசாயிகளிடம் இருந்து மொத்த நெல் அறுவடையை அரசாங்கம் உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி தற்பொழுது
திறைசேரியினால் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் சம்பளம் அடுத்த வாரம் வழங்க பாடுமாம் – தள்ளாடும் சகோதர ஆட்சி
உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம்..
உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை
கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அந்த திணைக்களத்தின் தொழிற்சங்கம் மற்றும் பிரதமருக்கு இடையில் நேற்று (2020.07.13) காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நிதி அமைச்சின்
செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவுக்கு பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் வாரத்திற்குள் உள்நாட்டு வருவாய் இலக்கை முழுமைப்படுத்துவதற்காக திணைக்களத்தின்
ஊழியர்களுக்கு 2019ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தங்கள் சேவையை நிறைவேற்றுவதற்கு தேசிய வருவாய் திணைக்கள அதிகாரிகள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை அரசாங்கம் என்ற ரீதியில் மதிப்பளிப்பதாக பிரதமர் இதன் போது
குறிப்பிட்டுள்ளார். கொவிட்- 19 நெருக்கடியின் போதும் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவை
வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடு தொடர்பில் திணைக்கள ஊழியர்களுக்கு கௌரவம் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தேசிய வருவாய் திணைக்கள
அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜே.டீ.சந்தன தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் செயலாளர் காமினி செனரத், தேசிய வருவாய் ஆணையாளர் நாயகம் நந்துன் குருகே, தேசிய வருவாய் திணைக்களத்தின் அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய
வருவாய் பொது சேவை சங்கத்தின் அதிகாரிகள் உட்பட குழுவினர் இணைந்திருந்தனர்.
கடற்படைத் தளபதி பிரதமரை சந்திப்பு
கடற்படைத் தளபதி பிரதமரை சந்திப்பு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா நேற்று (ஜூலை 13, 2020) பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன்
பாரம்பரிய சந்திப்பு நேற்று (ஜூலை 13, 2020) நடைபெற்றது. பிரதமர் கடற்படைத் தளபதியுடன் நல்லுறவு உரையாடி, கடற்படைத் தளபதியிடம் வளமான எதிர்காலம் வாழ்த்தினார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா 2020 ஜூலை 15 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார், இந்த நிகழ்வைக் குறிக்கும்
வகையில் கடற்படைத் தளபதியும் பிரதமருக்கும் இடையே நினைவு பரிசும் பரிமாற்றப்பட்டது.

செல்லுபடியான காலம் நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு நிவாரண காலம்
செல்லுபடியான காலம் நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு நிவாரண காலம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் பொழுது தேவையற்ற குளப்பநிலைக்கு அப்பால் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று நிலைமை மீண்டும் நாட்டில் தலையெடுப்பது தொடர்பில் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதி மற்றும் சந்தேகத்தின் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து
திணைக்களத்தின் வெரஹர அலுவலகத்தில் வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் ஒன்றுகூடும் அடிப்படையில் தேவையற்ற நெருக்கடி நிலை ஏற்படுவதாக அவதானிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (13) மாத்திரம் சுமார் 3500 பேர் வெரஹர அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். இருப்பினும் 1300 பேருக்கு மாத்திரமே நாளாந்தம் சேவைகள் வழங்கப்படுகின்றன.
வெரஹர அலுவலகத்தில் இடம்பெற்ற நெருக்கடி நிலை தொடர்பாக போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் காரணங்களைக் கோரியுள்ளார்.
வெரஹர அலுவலகத்தின் ஊடாக வானக அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்கு அமைவாக நாளாந்த சேவையை
வழங்கக்கூடியளவு வரையறுக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் ஆலோசனைகளை கடைப்பிடிப்பதுடன் பயனாளிகளான பொதுமக்களிடம் நாம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இதுவரையில் 2020 ஆம் ஆண்டு இலக்கம் 3 இன் கீழான மோட்டார் வாகன கட்டளைகள் மூலம் 2020.03.16 தொடக்கம் 2020.06.30 வரையிலான காலப்பகுதியில் செல்லுபடியான காலம்
நிறைவடையும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக செல்லுபடியான காலம் நிறைவடையும் தினம் தொடக்கம் 06 மாதங்களுக்கு மேலதிக நிவாரண காலம் மற்றும் 2020.07.01 தொடக்கம் 2020.09.30
வரையிலான காலப்பகுதிக்குள் செல்லுபடியாகும் காலம் நிறைவடையும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக சாரதி
அனுமதிப்பத்திரம் நிறைவடையும் தினம் தொடக்கம் 03 மாத நிவாரண காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக தேவையான வகையில் தொடர்ந்தும் இந்த காலம் நீடிக்கப்படவேண்டும் என்று அவதானிக்கப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு
போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.
வாகன அனுமதிப்பத்திரத்தை 1 நாள் சேவையின் கீழ்
பெற்றுக்கொள்வதற்காக ஹம்பாந்தோட்டை மற்றும் அநுராதபுர மாவட்ட அலுவலகங்களின் வசதிக்கு அமைவாக இந்த இடங்களுக்கு செல்ல முடியும்.
பொதுவான சேவையின் மூலம் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஏனைய அனைத்து மாவட்ட மோட்டார்
வாகன போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் வசதிகள் மற்றும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிற்றோம்.
அனைவரும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றக் கூடிய ஒருமித்த நாடு உருவாக்கப்படும்- மகிந்த
அனைவரும் மதத்தை சுதந்திரமாக பின்பற்றக் கூடிய ஒருமித்த நாடு உருவாக்கப்படும்- மகிந்த
அரச துறையை செயலற்றதாக்குவதற்கு கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்த தீர்மானங்களை மாற்றி தமது ஆட்சிக் காலத்தில் அரச துறையை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ, லூனாவ களப்பு வளாகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பலமான அரச துறை ஒன்று காணப்பட வேண்டியதன் மதிப்பு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் போதும் மற்றும் ஆரோக்கியமான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதுமே மக்களுக்கு புரிந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஆபத்தான நிலைக்கு முகங்கொடுத்து குறைவான வசதிகளுக்கு மத்தியில் அரச பணியாளர்கள் ஆற்றியது சாதாரணமானதொரு பணியல்ல எனத் தெரிவித்த பிரதமர், எதிர்காலத்தில் அரச துறையை மேலும் பலப்படுத்துவதாக கூறினார்.
அத்துடன், அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து வாழக்கூடிய, அனைத்து மதத்தவர்களும் தமது மதத்தை சுதந்திரமாக பின்பற்றக்கூடிய ஒருமித்த நாடு ஒன்றை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பௌத்தத்திற்கு முதலிடம் வழங்குவதன் மூலம் ஏனைய மதத்தவர்களுக்கு சுதந்திரமாக தமது மதங்களை பின்பற்ற முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாம் அனைவரும் வெவ்வேறு இனத்தவர்கள் என்ற ரீதியிலும், வெவ்வேறு மதத்தவர்கள் என்ற ரீதியிலும், ஒற்றுமையாக வாழ்ந்து வருவதற்கான கௌரவம் மதத் தலைவர்களையும், மக்களையுமே சாரும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தமது ஆட்சிக் காலத்தில் விகாரை, பள்ளிவாசல்கள், கோவில்கள் என்பவற்றின் அபிவிருத்தி இன, மத, பாகுபாடு பாராது வடக்கு, தெற்கு, கிழக்கு ,மேற்கு என பிரதேச பேதமின்றி மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அதுபோன்று நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையை நினைவு கூர்ந்த பிரதமர், எதிர்காலத்தில் புதிய அரசாங்கம் ஒன்றின் ஊடாகவும் அவ் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்
காவல்துறையினரை இடித்து விட்டு தப்பி சென்ற டிப்பர்
காவல்துறையினரை இடித்து விட்டு தப்பி சென்ற டிப்பர்
மாத்தறை ஹக்மன, கோங்கால பொலிஸ் காவலரன் பகுதியில் பொலிஸாரின்
மீது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச்சென்ற டிப்பர் வண்டி ரன்ன பிரதேசத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ரன்ன, கட்டகடுவ பிரதேசத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
நிலையில் குறித்த டிப்பர் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இரண்டு பொலிஸ்
சார்ஜன்ட்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது
செய்வதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







