Posted in இலங்கை செய்திகள்

வன்னியில்-பாடசாலைக்குள் புகுந்த வெள்ளம் – மீட்புப்பணியில் இராணுவம் – படங்கள் உள்ளே

வன்னியில்-பாடசாலைக்குள் புகுந்த வெள்ளம் – மீட்புப்பணியில் இராணுவம் – படங்கள் உள்ளே

வடக்கு தமிழர் தாயகத்தின் முதலாவது பெரிய குளமாக காண படும் இரணை மடு குளத்தின் நீர்மட்டம் 32

எட்டியுள்ள நிலையில் அதன் வான் கதவுகள் திறந்து விடப்பட்டன ,

இதன் பொழுது இன்று ஓ./எல் சோதனை எழுத சென்ற மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கினர் ,அவ்வேளை

பாடசாலைக்குள் வெள்ளம் புகுந்ததால் அந்த மாணவர்களை மீட்க்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டது

,இயந்திர படகுகள் மூலம் இந்த மீட்பு பணிகளை இராணுவம் மேற்கொண்டது ,தர்மபுரம் ,மற்றும் ஹிந்து கல்லூரி

ஆகியவற்றில் இராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்ட காட்சிகள் இவை .

தமிழர்களை கொன்ற அதே இராணுவம் தற்போது வெள்ளத்தில் பாதிக்க பட்டவர்களை காப்பாற்றுகிறதாம் .

Posted in இலங்கை செய்திகள்

நால்வர் சுட்டு கொலை

நால்வர் சுட்டு கொலை -வெடி கொளுத்திய பெண்கள் -பொலிசாருக்கு கேக்கு ஊட்டல் – video

தெலுங்கானாவில் நான்கு பேர் இணைந்து மாட்டு வைத்தியரை கற்பழித்து தீயிட்டு கொழுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ,

அந்த நால்வரையும் காவல்துறையினர் தப்பி ஓடினர் என கோரி என் கவுண்டரில் சுட்டு கொன்றனர் .

மேற்படி செய்தியை அறிந்த மக்கள் ,பெண்கள் போலீசாருக்கு கேக்கு ஊட்டியும் ,பட்டாசு வெடித்தும் மகிழ்கின்றனர்

பாராளுமன்றில் சுட்டு கொன்றது தவறு என பெண்கள் கூச்சல்

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

பகை வெல்ல வழி என்ன …?

பகை வெல்ல வழி என்ன …?

வென்றவர் உலகில் நூறு
வெளி வந்தவர் உலகில் நூறு
உலகாண்டவர் கோடியில் நூறு
உதை வாங்கியர் கோடியில் நூறு ….

சிந்தை செய்தார் நூறு -அட
சிகரம் தொட்டார் நூறு ….
விந்தை செய்தார் நூறு
வீழ்ந்து மடிந்தார் நூறு ….

எந்தையார் நாடு ஏனோ ..?
எமன் காலில் வீழ்ந்த கேடு ..?
முந்தையர் வீழ்ந்த செயலும் -உன்
மூளையில் ஏறல் பாரு ….

முப்படை செய்தும் என்ன
முடிவில் ஏதும் இல்ல ….
இப்பகை கொன்று வெல்ல
இன்று வழி என்ன சொல்ல ..?

  • வன்னி மைந்தன்
    ஆக்கம் -06-12-2019
வெல்ல வழி
      Posted in உளவு செய்திகள்

      இஸ்ரேல் அமெரிக்கா ரகசிய ராணுவ திட்டம்- தகருமா ..? ஈரான் ? video

      இஸ்ரேல் அமெரிக்கா ரகசிய ராணுவ திட்டம்- தகருமா ..? ஈரான் ? video

      ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா ,இஸ்ரேல் வான்படைகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்த இவர்கள் முனைய கூடும் எனவும் ,அவற்றை விமானத்தின்

      மூலம் தகர்க்கவே இந்த நகர்வுகள் இடம்பெறுவதாக முக்கிய உளவுத்துறை ஊடகங்கள் நாசுக்காக தெரிவிக்கின்றன .

      அப்படியானால் ஈரான் என்ன சும்மாவா இருக்கும் …? காட்சிகளில் முக்கிய தலைகள் அரங்கில் நுழைகின்றன

      ,தாக்குதல் திட்டம் மிக முக்கிய இலக்கு எனவே எதிர்பார்க்க படுகிறது ,

      இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவோம் என ஈரான் தெரிவித்து வரும் நிலையில் இந்த நகர்வுகள்

      அரங்கத்தில் நுழைந்துள்ளது போர் பதட்டத்தை மத்திய கிழக்கில் அதிகரித்துள்ளது .

      அமெரிக்காவுக்கு எமது பலத்தை நாம் காண்பிப்போம் எனவும் அது இல்லாது அழியும் நிலை இங்கிருந்து ஆரம்பிக்கும் என ஈரான் மறைமுகமாக கூறி வருகிறது .

      இது ஈராக் சதாம் உசேன் அல்ல ,ஈரானிடம் வில்லங்க ஆயுதங்கள் தாராளமாக இருக்கின்றன .அவை

      அமெரிக்காவின் தொழில் நுட்பங்களை தாண்டியவையும் கூட .

      அவ்வாறான பலம் பொருந்தியா ஈரானுடன் போர் என்பது இஸ்ரேல் ,அமெரிக்காவுக்கு ஆபத்தானது ,அப்படியான அந்த மரண விளையாட்டில் அமெரிக்கா களம் இறங்குமா ..?

      இதில் அமெரிக்கா தோல்வி உற்றால் டிரம் சார்ந்துள்ள கட்சி மீளவும் ஆட்சியில் நீடிக்குமா ..? அப்டோயானால் இது என்ன கண்ணாம் பூச்சி ஆட்டமா ..?

      கடல் வழிப்பயணங்களை தடுத்து கப்பல்களை சிறை பிடித்து தாம் போருக்கு தயார் என ஈரான் அறைகூவல்

      விடுத்தது வருவது உலக சண்டியர் அமெரிக்காவின் அழிவு இதில் இருந்து ஆரம்பிக்க கூடும் என்றே எதிர்வுகள் அதிர்கிறது

      தற்போது உக்கிரம் அடைந்துள்ள ஈரான் அமெரிக்கா போர் பதட்டம் மூன்றாம் உலக போரை பரந்து பட்ட வலிந்து தாக்குதலை அது மேற்கொள்வதை

      நடப் பாண்டில் நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன ,ஆபத்தான போர்க்களம் ஒன்றை நோக்கியும் அதன் ஆயுத

      உற்பத்தியின் உருவாக்கம் மற்றும் செயல் திறன்களை ஆய்வு செய்யும் களமாகவும் இது மாற்றம் பெற போகிறது

      – வன்னி மைந்தன் –

      Posted in உளவு செய்திகள்

      சீனா – அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் உச்சம் – போர் பதட்டம் அதிகரிப்பு

      சீனா – அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் உச்சம் – போர் பதட்டம் அதிகரிப்பு
      https://www.youtube.com/watch?v=bZEwAErG4Ds
      Posted in சினிமா

      தைரியம் தான் பெண்களுக்கு பாதுகாப்பு – நித்யா மேனன்

      தைரியம் தான் பெண்களுக்கு பாதுகாப்பு – நித்யா மேனன்

      தமிழ், மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை கதையான த அயன்லேடி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக விசேஷ பயிற்சிகள் எடுத்து வருகிறார். அவர் கூறியதாவது:- “நான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானேன். ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்தேன்.

      ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது. என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது இல்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். நான் விட்டு கொடுக்கவில்லை. பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக சொன்னேன்.

      நித்யா மேனன்

      என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

      Posted in சினிமா

      மகளுக்கு பாலியல் தொல்லை – டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்

      மகளுக்கு பாலியல் தொல்லை – டி.வி. நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்

      வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

      இந்த நிலையில், நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாகவும், தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார்.

      தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு ஏமாற்றி விட்டார். குழந்தையுடன் தவித்து வருகிறேன் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். ஜெயஸ்ரீ புகார் மீது வழக்கு பதிவு செய்து ஈஸ்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

      ஈஸ்வர் – ஜெயஸ்ரீ

      இந்த நிலையில் ஜெயஸ்ரீ இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து கணவர் ஈஸ்வர் மீது புதிய புகார் ஒன்றை அளித்தார். கணவர் கைது செய்யப்பட்ட பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

      மேலும் அவர் கூறுகையில், ஈஸ்வர் எனது மகளுக்கு நீண்ட காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவருக்கு திருமணத்துக்கு பிறகு குடி பழக்கம் அதிகரித்தது. கஞ்சா பயன்படுத்தும் பழக்கமும் இருந்தது. சூதாட்டத்திலும் ஈடுபட்டு வந்தார். இதனால் கடன் தொல்லையும் ஏற்பட்டது. குடித்துவிட்டு வந்து என்னை தாக்குவதுடன் மகளிடமும் தவறாக நடந்துகொள்வார்.

      டி.வி. நடிகை ஒருவருடன் சேர்ந்து இருக்கும்போது வீடியோ கால் செய்து பேசுவார். இதுபோன்ற செய்கைகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னிடம் இருந்து ஈஸ்வர் அபகரித்த நகை, பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

      Posted in இலங்கை செய்திகள்

      மைத்திரி சகோதரனுக்கு ஆப்படித்த கோட்டா – சம்பளத்தை குறைத்தார்

      மைத்திரி சகோதரனுக்கு ஆப்படித்த கோட்டா – சம்பளத்தை குறைத்தார்

      இலங்கையில் கோட்டபாய அதிகாரத்திற்கு ஏறிய நாளில் இருந்து இன்று வரை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன

      ,அதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரன் இலங்கை டெலிகாம் நிறுவனத்தின் தலைவராக உள்ளார் ,

      அவருக்கு வழங்க பட்டு வந்த மாதம் 20 லட்ஷம் பணத்தினை இரண்டரை லட்ஷமாக குறைக்கும் படி கோட்டா அதிரடி உத்தரவிட்டுள்ளார் .

      இதனால் மைத்திரி கடுப்பில் உறைந்துள்ளாராம் .

      Posted in இலங்கை செய்திகள்

      மிரிஹானா தடுப்பு மையம் திடீர் சுற்றிவளைப்பு – 75 கைபேசிகள் -5 லப்டப் -15 லட்ஷம் பணம் மீட்பு

      மிரிஹானா தடுப்பு மையம் திடீர் சுற்றிவளைப்பு – 75 கைபேசிகள் -5 லப்டப் -15 லட்ஷம் பணம் மீட்பு

      இலங்கையில் – உள்ள வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்க பட்டுள்ள மிரிஹானா தடுப்பு மையம் இன்று அதிகாலை வேளை திடீரென சுற்றவளைக்க பட்டது ,

      அவ்வேளை நடந்த தேடுத்தலின் பொழுது மறைத்து வைத்து பாவிக்க பட்ட 75 கைபேசிகள் மற்றும் ஐந்து லாப்டாப் ,ஒன்றரை மில்லியன் ரூப்ப பணம் என்பன மீட்க பட்டுள்ளது ,

      பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இங்கே பணப் பரிவர்த்தனை இடம்பெற்று வந்ததாகவும் தெரிவிக்க படுகிறது

      மேலும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு – வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo

      வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு – வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo

      இலங்கையில் நிலவை வரும் பருவ மழைபொழிவை அடுத்து தற்போது தமிழர் தேசத்தின் வன்னி பகுதிகள் பாதிக்க பட்டுள்ளன ,

      அவ்வகையில் முல்லைதீவு மாவட்டத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன மழை வீழ்ச்சி அதிகரிப்பை அடுத்து குளங்கள் நிரம்பி வழிவதால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது

      ,எனினும் மீட்பு பணிகள் ,மற்றும் உதவிகள் என்பனவற்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொண்டு வருகிறது

      ,இந்த வெள்ள அனர்த்தத்தின் சேத விபரங்கள் பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது

      வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு - வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo
      வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு - வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo
      Posted in இலங்கை செய்திகள்

      பம்பலப்பிட்டி கரையில் – கரை ஒதுங்கிய கடல் சிங்கம்

      பம்பலப்பிட்டி கரையில் – கரை ஒதுங்கிய கடல் சிங்கம்

      இலங்கை – கொழும்புக்கு அண்மையில் உள்ள பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் கடல் சிங்கம் கரை ஒதுக்கியுள்ளது .

      ,சம்பவத்தை கேள்வியுற்று பாதுகாப்பு பிரிவினர் குறித்த கடல் சிங்கத்தை மீளவும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் ,

      அண்மைய நாட்களாக இவ்வாறு கடல் சிங்கம் ,மற்றும் மீன்கள் கரை ஒதுங்கி வருவது சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறியா என மக்கள் அஞ்சுகின்றனர்

      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
      Posted in இலங்கை செய்திகள்

      இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?

      இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு – நடந்தது என்ன ..?

      இலங்கை – திருகோணமலை – தம்பலகாம காவல்துறை பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் ,

      இவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என இதுவரை வெளியாகவிலை ,போலீசார் மற்றும் இராணுவம் இது குறித்த விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

      Posted in இலங்கை செய்திகள்

      அமெரிகாவில் -கோத்தபாயா மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்

      அமெரிகாவில் -கோத்தபாயா மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்

      அமெரிக்காவில் -இரத்த ககாட்டேறியும் தமிழ் இனப்படுகொலையாழியுமான கோட்டபாய மீது தொடரப்பட்ட வழக்குகள் அணைத்ததும் வாபஸ் பெற பட்டுள்ளது ,

      தற்போது அவர் இலங்கையின் ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்துள்ளதால் அவரது ஆட்சி காலம் முடியும் வரை அவரை இராயத்தந்திர முறைகைளின் கீழ் எதுவும் செய்திட இயலா நிலை உள்ளதால் இந்த வழக்குகள் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஜாஸ்மின் சுக்கா தெரிவித்துள்ளார் .

      மேற்படி விடயம் தமிழ்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .

      Posted in இலங்கை செய்திகள்

      காரை நகர் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்து வழங்கிய – குட்டை நாய்

      காரை நகர் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்து வழங்கிய – குட்டை நாய்

      யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபை மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்து சுற்றி கொடுக்கும் பையின் மேல் குட்டை நாய் ஒன்று படுத்துறங்கிய சம்பவம் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,

      இதில் இருந்து இந்த மருத்துவமனையின் சுகாதார வண்டவாளம் தண்டவாளத்தில் செல்கிறது ,குதிரை ஓடி மருத்துவர் ஆனால் இப்படித்தான் நடக்கும் .

      வடக்கு சுகாதார அமைச்சர் கோட்டார் அடித்து குப்புற கிடக்கிறார் , காரைநகர் போன்று ,வரணி மருத்துவமனையில் வைத்தியரும் இது போன்ற சர்ச்சையில் , கெடுபிடிகளில் ஈடுபட்டுள்ளார் ,

      அங்கும் பணியாளர்கள் இடமாற்றம் செய்வதுடன் பணி புரியும் பெண்களுடன் முறுகல் நிலையில் உள்ளதுடன் ,இவர்களின் அசமந்த போக்கின் காரணமாக ஒரு கர்ப்பிணியும் ,மூதாட்டி ஒருவரும் மரணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

      நபர் ஒருவர் காரை நகர் வைத்தியசாலையின் அசிங்கத்தை படம் பிடித்து வெளியிட்ட நிலையில் வடக்கு சுகாதார அமைச்சர் கோவணத்தை கழற்றி தலையில் முக்காடு போட்டு செல்வதாக நெட்டிசன்கள் குசும்பு பதிவுகளை புரிந்து வருகின்றனர் .

      கோத்தபாயவின் ஆட்சியில் நடக்கும் இந்த சீர்கேடுகளை தட்டி கேட்பது யார் ..?

      காரைநகர் புலம் பெயர் வாசிகள் இதனை தட்டி கேட்டு குறித்த மருத்துவமனை வைத்தியர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை மாற்றுவார்களா ..?

      சுத்தம் சுகம் தரும் என்பார்கள் ,அசுத்தம் அசிங்கத்தை தருகிறது எனவே அந்த அசிங்கமான மருத்துவரை உடனடியாக மாற்றி சுத்தம் சுகாதரத்தை நிலை நாட்டி மக்களை காப்பாற்றுங்கள் கரை தீவு படித்த அறிவார்ந்த சமூகமே .

      ஆள் சேர்க்கும் வடக்கு மாகாண ஆளுநர் இதனை கவனத்தில் எடுப்பாரா ..? அல்லது வரப்போகும் புதிய ஆளுநர் தான் புரட்சி நடவடிக்கை மேற்கொள்வாரா ..?

      Posted in சினிமா

      நான் செய்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை – மீனா

      நான் செய்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை – மீனா

      1990களில் கலக்கிய மீனா திருமணத்துக்கு பின்னர் தமிழில் அதிகம் நடிக்காமல் இருந்தார். விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் கரோலின் காமாட்சி என்ற இணைய தொடரில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். சிபிஐ ஆபிசராக நடித்துள்ள மீனா அளித்த பேட்டி:

      கரோலின் காமாட்சி தோற்றம் வித்தியாசமாக இருக்கிறதே?
      சினிமாவில் பிசியாக இருக்கும்போது டிவி பக்கம் செல்லவேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் துணிந்து நடித்தேன். இப்போது இணைய தொடர்கள் பிரபலமானதும் அதற்குள்ளும் வந்து இருக்கிறேன். இந்த கதாபாத்திரம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். இதுவரை பார்க்காத மீனாவாக இருக்கவேண்டும் என்று விவேக் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை எடுத்து பார்த்துக்கொண்டார். கிளைமாக்சில் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. பொதுவாக ஹீரோக்கள் தான் என்னை படங்களில் காப்பாற்றுவார்கள். இதில் என்னை நானே காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலை. எனவே சண்டையிடுகிறேன்.

      உங்கள் மகள் நைனிகா இந்த தோற்றம் பற்றி என்ன சொன்னார்?
      நான் முடியை குறைத்து பாப் கட் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை.

      மீனா

      சினிமாவில் இருக்கும் உங்கள் நண்பர்கள் என்ன சொன்னார்கள்?
      அவர்களுக்கு ஆச்சர்யம். இதை பற்றி நிறைய கேட்டு தெரிந்துகொண்டார்கள். எனக்கு சினிமாவுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

      இணைய தொடருக்கு சென்சார் இல்லை என்பதால் பயம் இருந்ததா?
      இல்லை. அதனால் தான் முன் கூட்டியே கதை, கதாபாத்திரம் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி கேட்டுக்கொண்டேன். இதில் ஆபாசம் துளிகூட இருக்காது.

      தொடர்ந்து படங்களா? இணைய தொடர்களா?
      கதை தான் முக்கியம். நல்ல கதையும் கதாபாத்திரமும் கிடைத்தால் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் நடிப்பேன்.

      Posted in சினிமா

      ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் – காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்

      ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் – காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்

      ஆசிட் வீசி எரித்து விடுவதாக மிரட்டுகிறார் – காதலன் மீது பிக்பாஸ் பிரபலம் பரபரப்பு புகார்

      தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருபவர் அஞ்சலி அமீர். தமிழில் பேரன்பு படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார். திருநங்கையான இவர் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பங்கேற்றார். இந்நிலையில் அவர் தனது முகநூலில் நேரடியாக கண்ணீருடன் பேசியுள்ளார்.

      அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை காதலன் டார்ச்சர் செய்து வந்தார். இதனால் அவருடன் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். அதனால் அவர் என்னை, ஆசிட் ஊற்றி எரிக்க போவதாக மிரட்டுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கண்ணீர்விட்டு கதறி அழுதபடி பேசிய அஞ்சலி அமீர் காதலன் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

      தன்னுடைய சேமிப்பில் இருந்து இரண்டு ஆண்டு களில் சுமார் 4 லட்சம் வரை அவர் பறித்துகொண்ட தாகவும் கூறியிருக்கிறார். அந்த வீடியோ முடிவில் அஞ்சலி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை தாங்க முடியவில்லை என்றும், தற்கொலை செய்யும் மன நிலையில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்த பேஸ்புக் லைவ் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

      அஞ்சலி அமீர்

      தனக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை, பெற்றோரும் உடன் இல்லை என்பதால், இந்த பிரச்சினையை தீர்க்க போலீஸ் அதிகாரிகளை அணுக திட்டமிட்டுள்ளார். நாட்டின் முதல் திருநங்கை நடிகையான அஞ்சலி அமீர் தனது பயோகிராபி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 2020-ம் ஆண்டு மே மாதம் இதற்கான வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளார். தன்னை சித்ரவதை செய்த காதலனின் பெயரை அவர் கடைசி வரை சொல்லவில்லை.

      Posted in சினிமா

      தர்பாரில் திருநங்கைகளை பாடவைத்த அனிருத்

      தர்பாரில் திருநங்கைகளை பாடவைத்த அனிருத்

      ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

      தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

      அனிருத்

      திருநங்கைகளுடன் அனிருத், விவேக்

      இந்நிலையில், தர்பார் படத்தில் இடம்பெற்றும் ஒரு சிறப்பு பாடலை திருநங்கைகள் மூன்று பேர் பாடியுள்ளனர். படத்தில் இந்த பாடலுக்கு திருநங்கைகள் நடனமாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐதராபாத்தை சேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். இவர்கள் ஸ்பைஸ் கேர்ள்ஸ் எனும் இசை குழுவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      சுவிஸ் – கோட்டா முறுகல் உச்சம் – கடத்த பட்டபெண் குடும்பத்தை தமது நாடு அழைக்கும் சுவிஸ்

      சுவிஸ் – கோட்டா முறுகல் உச்சம் – கடத்த பட்ட பெண் குடும்பத்தை தமது நாடு அழைக்கும் சுவிஸ்

      இலங்கை சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள பெண் ஒருவரை வெள்ளை வானில் கடத்தி சென்று ,பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி ,மிரட்டி அனுப்பியது கோட்டாவின் வெள்ளை வான் கும்பல்,

      அவர்களின் இந்த செயல் கோட்டபாய அரசுக்கு பெரும் அவமானத்தை தோற்றுவித்துள்ளது ,மேலும் இலங்கையில் ,மனித உரிமைகள் மீற படுவதாக அந்த நாடு சுட்டி காட்டியுள்ளது ,

      குறித்த பெண் சுவிசுக்கு செல்ல இலங்கை தடை விதித்துள்ள நிலையில் தமது நாட்டிற்கு குறித்த பெண் குடும்பம் செல்ல இலங்கை அனுமதி வழங்க வேண்டும் என சுவிஸ் கோரிக்கை விடுத்துள்ளது ,

      சுவிஸ் மற்றும் இலங்கை வெளியுறவு கொள்கைகள் இந்த நடவடிக்கையால் பாதிக்க படலாம் என அஞ்ச படுகிறது ,விரைவில் இலங்கை செல்ல சுவிஸ் மக்களுக்கு அந்த அரசு அபாய எச்சரிக்கை விடுக்கலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      65 முஸ்லீம் தீவிரவாதிகள் இலங்கையில் கைது – கோட்டா வேட்டை ஆரம்பம்

      65 முஸ்லீம் தீவிரவாதிகள் இலங்கையில் கைது – கோட்டா வேட்டை ஆரம்பம்

      இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்ட அமைப்பு என தடை செய்ய பட்டது ,

      குறித்த National Thowdeed Jamath (NTJ) அமைப்பினைரை சேர்ந்தசுமார் 65 முஸ்லீம் இலங்கை தீவிரவாதிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

      நமது ஆட்சியில் குறித்த குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரணைகள் நடத்தி சம்பந்த பட்டவர்கள் கைது செய்ய படுவார்கள் என கோட்டா முழங்கினார் ,அதன் செயல்முறை விளைவுகளே இந்த கைதுகளாக மாறி நிற்கின்றன

      Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

      இலங்கை இருநாடக பிரியவேண்டும் – பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பு

      இலங்கை இருநாடக பிரியவேண்டும் – பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பு

      இலங்கையில் இரண்டு இராஜியங்களை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய இராஜியத்தின் கொன்சவேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மணிசா குணசேகர தெரிவித்துள்ளார்.

      கொன்சவேடிவ் கட்சிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

      மேலும் இந்த தீர்மானம் இலங்கையின் நல்லிணக்கத்திற்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்தும் என அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

      எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பிரித்தானிய பொதுத் தேர்தலுக்காக ஆளும் கன்சவேட்டிவ் கட்சி கடந்த 25 ஆம் திகதி 64 பக்கங்களை கொண்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்தது.

      ´´உலகம் முழுவதும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நியாயத்தை நிலைநாட்ட தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் அதேவேளை சைப்பிரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் நிலவிய தற்போதைய அல்லது முன்னர் இருந்த முரண்பாடான நிலைமையை தீர்க்க இரண்டு இராஜியங்களை அமைக்க எமது ஒத்துழைப்பு பெறப்பட்டது.

      இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இங்கிலாந்துக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கொன்சவேடிவ் கட்சியின் இணைத் தலைவர் ஜேம்ஸ் கிளெவர்லியிடம் கடந்த 27 ஆம் திகதி வினவியதாக தெரிவித்தார்.

      அதற்கமைய இலங்கைக்கு இரு இராஜியங்கள் அனாவசியனமானது எனவும் ஆகவே முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இங்கிலாந்துக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மனிசா குணசேகர கொன்சர்வேடிவ் கட்சிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

      அவ்வாறான ஒரு தீர்வை இதற்கு முன்னர் ஐக்கிய இராஜியத்தின் எந்தவொரு கட்சியும் தமது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டதில்லை எனவும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.