கோட்டா வழியில் செல்கிறார் ரணில்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் வாக்குகளுக்காக இஸ்லாமிய நாடுகளை பகைத்துக் கொண்டதனால் ஜெனிவா கூட்டத்தொடரில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு சார்பாக
வாக்களிக்கவில்லை.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே செயற்படுகிறார்.ஜெனிவாவுக்கு ஒன்றை கூறுகின்றார் ,நாட்டில்
பிறிதொன்று செயற்படுத்தப்படுகிறது. சர்வதேச சமூகம் முட்டாள்கள் அல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான நிரோஷான் பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும்
கோட்டா வழியில் செல்கிறார் ரணில்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சாலிய விக்கிரமசூரிய மீது 3 இலட்சத்து 3227 அமெரிக்க டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டு
முன்வைக்கப்பட்டு அவருக்கு அமெரிக்க வொஷிங்டன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவரை பாதுகாப்பதற்கு முன்னாள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இராஜாதந்திர மட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.
ஆனால் இவருக்கு எதிராக இலங்கையில் முறையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இலங்கையின் அரச தலைவர்கள் மோசடி செய்த நிதி சாலிய விக்கிரமசூரிய ஊடாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள விவகாரம் தொடர்பில்
அமெரிக்காவில் எப்.பி.ஐ.நடவடிக்கை எடுத்த போதும் அதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றார்.
- ஷிராந்தி ராஜபக்ஷவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- உடல்நலக்குறைவால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
- நாவலபிட்டிய நகர சபைத் தலைவர் மற்றும் மூவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்
- முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தம்மாம்–கொழும்பு விமான சேவைகளை அக்டோபர் 18 வரை நிறுத்திவைக்கிறது
- தேசிய மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் ஷிராந்தி ராஜபக்ச அனுமதி
- இலஞ்ச ஆணைக்குழுவால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது
- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது
- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர்
- இலங்கை காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிரிழக்கும் அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர்
- நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை



















