இலஞ்ச ஆணைக்குழுவால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது
இலஞ்ச ஆணைக்குழுவால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது
முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான
விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) முன் வாக்குமூலம் அளிக்க ஆஜரான பின்னர், அவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் பாஸ்பேட் ஏற்றுமதிக்கு வசதி செய்து தருவதாகவும், தேவையான ஏற்றுமதி உரிமங்களைப் பெற
உதவுவதாகவும் கூறி, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நிறுவனங்களிடமிருந்து 8.1 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள்
குறித்த விசாரணையைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாமர சம்பத் முதன்மைத் தொழில்கள் இராஜாங்க அமைச்சராக இருந்தபோது அவரது தனிச் செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சியும் இந்த விசாரணை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.







