இராணுவ கவச அங்கிகள் மீட்பு
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமளவான இராணுவ அங்கிகள் (Flak jacket) மீட்கப்பட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து , கிணற்றை இறைத்த போது, கிணற்றுக்குள் இருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ கவச அங்கிகள் மீட்பு
அது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்ததை அடுத்து இராணுவத்தினர் , தாம் அதனை அப்புறப்படுத்துவதாக கூறியுள்ளனர்.
மீட்கப்பட்ட பெருமளவு இராணுவ அங்கிகள், அவரது காணிக்குள் குவிக்கப்பட்டுள்ளன.
இவை யுத்தத்தில் ஈடுபடும் இராணுவத்தினர், தமது உயிரை பாதுகாத்து கொள்வதற்காக அணிந்து கொள்ளும் ஒருவகை கவச அங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
- எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் வெடித்தது
- ஒரு வாரத்தில் ஏழு ஹோர்முஸ் டேங்கர் கப்பல் தாக்குதல்கள்
- சவூதி மீது ஹூதிகள் தாக்குதல்
- களுத்துறை உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியின் இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர் கைது
- யானைகளை பாதுகாக்க புதிய திட்டம்
- பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை ஈரான் குறிவைத்து தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடிகளால் தாக்கப்பட்டதாக ஈரான்
- இலங்கையின் உள்நாட்டு எரிவாயு சந்தையில் 90% பங்கை லிட்ரோ கொண்டுள்ளது
- 23 பெரிய மற்றும் 15 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன
- பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 27 பேர் காயம்

















