காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்
காதலியை பலாத்காரம் செய்து விட்டு, 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற காதலனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மன்னிப்பு வழங்கி போர் முனைக்கு அனுப்பி வைத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் விளாடிஸ்லாவ் கன்யூஸ். இவர் தனது முன்னாள் காதலியான வேரா பெக்டெலேவாவை பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்து 111 முறை கத்தியால் குத்தினார்.
மூன்றரை மணி நேரம் அவர் இந்த சித்ரவதையை தனது முன்னாள் காதலி வேராவுக்கு செய்துள்ளார். பின்னர் அவர் காதலி கழுத்தை ஒரு கேபிள் கம்பி மூலம் நெரித்துக்கொன்றார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் 7 முறை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு செய்தும் எந்த பதிலும் இல்லை. அதன்பின் வந்த பொலிஸார் விளாடிஸ்லாவ் கன்யூசை கைது செய்தனர்.
காதலியை கொன்றவரை உக்ரேனுக்கு அனுப்பிய புட்டின்
இந்த வழக்கில் அவருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ஒருவருடம் கூட முடியவில்லை. ஆனால் அவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் பொதுமன்னிப்பு வழங்கி உள்ளார்.
மேலும் அவரை உக்ரேன் போர் முனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். நவ.3ம் திகதிய உத்தரவுப்படி தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவுக்கு கன்யூஸ் மாற்றப்பட்டார்.
இராணுவ சீருடையில் ஆயுதம் ஏந்தியபடி கன்யூஸ் இருக்கும் புகைப்படங்களை பார்த்த வேராவின் தாயார் ஒக்ஸானா, ‘இது எனக்கு ஓர் அடி
. கொடூரமான கொலைகாரனுக்கு எப்படி ஆயுதம் கொடுக்க முடியும்? எந்த நேரத்திலும் நம்மில் யாரையும், பாதிக்கப்பட்டவர்களையும், பழிவாங்கும் நோக்கில் கொல்லலாம்’ என்றார்.
- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN
- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு
- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி
- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்
- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன
- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது
- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது

















