ஈச்சிலம்பற்றில் ஆணின் சடலம் மீட்பு
திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று திங்கட்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் (35வயது) எனவும் தெரியவருகிறது.
சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று பேர் சேர்ந்து மதுபானம் அருந்தியதாகவும், மற்றைய இருவரும் வீடுகளுக்கு சென்றதாகவும் குறித்த நபர் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
ஈச்சிலம்பற்றில் ஆணின் சடலம் மீட்பு
உயிரிழந்தவரின் வலது காதில் இரத்தம் கசிந்து காணப்படுவதாகவும் சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் சென்று
பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் அவருடன் மது அருந்திய நபர்களை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது

- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது

- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது







