சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீட்டியாகொட – தெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகங்கத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பாதால உலக குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, விசேட அதிரடி படையினர் குறித்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர் விசேட அதிரடி படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
இதையடுத்து, விசேட அதிரடி படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த சந்தேகநபர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சந்தேகநபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
தெற்கில் இடம்பெற்ற பல குற்றங்களுடன், இவர் தொடர்புடைய சந்தேகநபர்களில் இவரும் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்ளனர்,
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது

- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை

- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்

- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி

- இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்கா

- பிரெஞ்சு தூதருடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சவால்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதித்தார்

- யோஷித ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

- தித்வா புயலால் ஏற்பட்ட இடையூறுக்குப் பிறகு ‘பொடி மெனிக்கே’ இரயில் பேராதெனியாவை வந்தடைந்தது

- ஓராண்டில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்களும் இளைஞர்களும் கைது

- முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில்








