உயர் பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை
உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தினை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் கைது செய்ததுடன் குறித்தகேமராவில் பதிவான காட்சிகளை நீக்க பொலிஸ் தொழில்நுட்ப பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயதான அமெரிக்க பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்








