கம்பளை பஸ் நிலையம் திருத்தப்படுகிறது

Spread the love

இலங்கை -கம்பளை பஸ் நிலையம்
திருத்தப்படுகிறது

அன்மையில் கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட கம்பளை தேசிய போக்குவரத்து சபையின் பஸ்

பாதிப்படைந்து இருப்பது குறித்து செய்திகளில் சுட்டிக் காட்டப்பட்டது

தற்போது இந்த பஸ் நிலையத்தினை ஜனாதிபதியின் புதிய செயற்திட்டமான நாட்டின் சூழலை சுத்தமாக

வைத்திருப்போம் செயற்திட்டத்தின் கீழ் இளைஞர்கள் சித்திரங்களை வரைந்து வருகின்றனர். இந்த செயற்திட்டம் பாராட்டுக்கு உரியது.

குறிப்பாக இந்த பஸ் நிலையத்தில் இருந்து கண்டி¸ கொழுப்பு¸ பாணதுறை¸ பதுளை¸ நாவலப்பிட்டிய¸

புஸ்ஸல்லாவ¸ பூண்டுலோயா¸ போன்ற பிரதான நகரங்களுக்கும் புப்புரஸ்ஸ¸ குருந்துவத்த¸ வட்டதெனிய¸ துனுக்கேஉல்ல¸ கலஹா¸ தொலுவ போன்ற சிரிய

நகரங்களுக்கும் மேலும் பல கிராமங்களுக்கும் பஸ் சேவை இடம் பெற்று வருகின்றது.

கம்பளை நகரத்திற்கு நாளாந்தம் மேற்படி பிரதேச மக்கள் தங்கள் தேவைகளுக்காவும் மாணவர்கள் தங்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கும் ஆயிரம்

கணக்கில் வந்து செல்கின்றனர்.இந்த நகரத்தில் பிரதேச செயலகம்¸ பொலிஸ் நிலையம்¸ நீதிமன்ற கட்டிடம்¸ தபால் காரியாலயம்¸ கமத்தொழில் காரியாலயம்¸ போன்ற

அனைத்து அரச மற்றும் தனியார் காரியாலயங்களும் அரச மற்றும் தனியார் வங்கிகளும் பலதரப்பட்ட வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றன. இவற்றின்;

தேவைகளுக்காக வருபவர்கள் தங்களின் ஊர்களுக்கு பஸ்சிற்காக இந்த பஸ் நிலையத்திலேயே காத்து

நிக்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் வர்த்தக நிலையங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது

கம்பளை பஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *