அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: பஞ்சாப் அரசு அறிவிப்பு
அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்துகொள்வதற்கான திட்டத்திற்கு பஞ்சாப் சட்டப்பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் அரசுப் பேருந்துகளில் மாநிலத்திற்குள்ளாகவே பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளும் சட்டத்திற்கு இன்று பஞ்சாப் பேரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக முதல்-மந்திரி அமரீந்தர் சிங் தனது டுவிட்டரில் கூறியதாவது:-
அமைச்சரவையில் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் ஏப்ரல் 1 முதல் மாநிலத்திற்குள்ளாகவே பெண்கள் மற்றும்
மாணவிகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். பஞ்சாப் பெண்களின் முன்னேற்றத்தை நோக்கிய அழுத்தமான முயற்சியாக இது அமையும் என்று பதிவிட்டுள்ளார்
- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
- சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
- அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
- அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்







