மண்சரிவு – இடிந்து வீழ்ந்த வீடுகள்

Spread the love

கொட்டகலை, பத்தனை நகரில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகளும், தொழிற்சங்க அலுவலகமொன்றும் சேதமடைந்துள்ளது.

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலையால் பெய்த கடும் மழையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வீடுகள், தொழிற்சங்க அலுவலகத்துக்கு பின்புறத்திலிருந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் எவருக்கும் காயம்

ஏற்படவில்லை. எனினும், இரு வீடுகளில் இருந்த எட்டு பேர் அங்கிருந்து

வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மேலும், மண்சரிவை அகற்றுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் கொட்டகலை பிரதேச

சபையின் தவிசாளர், உப தவிசாளர் ஆகியோர் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *