நடிகை மீது வழக்கு – அதிர்ச்சியில் அம்மணி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் இரண்டு
ஆண்டுகளுக்கு முன்னர் பேசியது தற்போது சர்ச்சையானதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன் பேசியதற்கு இப்போது வழக்கா? – அதிர்ச்சியில் பிக்பாஸ் பிரபலம்
ஸ்ரீமுகி
தமிழில் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீமுகி.
- சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமை

- அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது டிரம்ப்

தெலுங்கில் நேனு சைலஜா, சாவித்ரி, ஜென்டில்மேன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.
ஸ்ரீமுகி 2 வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது
குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றி சர்ச்சை கருத்தை கூறியதாக தற்போது எதிர்ப்பு
கிளம்பி உள்ளது. ஸ்ரீமுகி மீது வித்யாநகரை சேர்ந்த வெங்கடராமா என்பவர் போலீசில் புகார் அளித்தார்.
குறிப்பிட்ட சமுதாயத்தினரை ஸ்ரீமுகி இழிவுபடுத்தி பேசியதாகவும், எனவே அவர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து ஸ்ரீமுகி மீது பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவர் பேசிய வீடியோவை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீமுகி
இதுகுறித்து ஸ்ரீமுகி கூறும்போது, “2 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான
நிகழ்ச்சிக்கு இப்போது ஏன் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று புரியவில்லை.
நான் யார் மனதையோ அல்லது எந்தவொரு சமுதாயத்தையோ காயப்படுத்துவதுபோல் பேசி இருந்தால் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

- சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமை
- அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது டிரம்ப்
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது
- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை
- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
- சீனாவும் ரஷ்யாவும் ஈரானுக்கு ‘சற்றும்’ உதவுவதாகத் தாம் நம்பவில்லை என டிரம்ப் கூறுகிறார்
- கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் சஜித் பிரேமதாச வருத்தம்
- விசாரணைக்காக ஷிராந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை







