சவூதி மீது ஹூதிகள் தாக்குதல்
சவூதி மீது ஹூதிகள் தாக்குதல் ஏமனில் உள்ள சாதா, ரசிஹ் நகரங்களை சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் குறிவைத்ததாக ஹூதிகள் கூறுகின்றனர்.
வடக்கு ஏமனில் உள்ள சாதா நகரின் தெற்குப் பகுதிகளை சவூதி தலைமையிலான கூட்டணி வான்வழித் தாக்குதல்கள் குறிவைத்தன,
அதே நேரத்தில் எல்லை மாவட்டமான ரசிஹில் உள்ள மக்கள் வசிக்கும் கிராமங்கள் மீது பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று ஹூதிகளால்
நடத்தப்படும் அல் மசிரா தொலைக்காட்சியை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
‘ஆபரேஷன் டான் ஆஃப் ஏமன்’ என்பதன் ஒரு பகுதியாக, ஹூதி நிலைகள் மீது அரசாங்கப் படைகள் 943 தாக்குதல்களையும் குறிவைத்துத் தாக்கும்
நடவடிக்கைகளையும் நடத்தியதாக ஏமன் அரசாங்க இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் மஜித் அல்-நுசைலி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.







