சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது
சஷீந்திர ராஜபக்ச மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்தது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உட்பட மூன்று நபர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல்
செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி பிரதிவாதிகள் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை கொழும்பு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதன்படி, தற்போதுள்ள குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கை தொடர்ந்து நடத்துமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன உத்தரவிட்டார் என அட தெரனா செய்தியாளர் தெரிவித்தார்.