தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு
தங்கல்லே கடற்பகுதியில் 19 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமிது தில்ஷான் என அடையாளம்
உயிரிழந்தவர் தங்கல்லே, கொடெல்லவெல பகுதியைச் சேர்ந்த சமிது தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த இளைஞர் கடந்த ஜூலை 9 ஆம் திகதி தங்கல்லே, மவெல்லவில் உள்ள மககலகாவ கடற்கரையில்
மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த அலையில் அடித்துச் செல்லப்பட்டார்.
உயிர் காக்கும் பிரிவு
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள், பொலிஸ் உயிர் காக்கும் பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர்
இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், ஆரம்பத்தில் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இருப்பினும், நேற்று (11) மவெல்ல கடற்பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட மீனவர்கள், அதனைப் படகு மூலம் கரைக்குக் கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கல்லே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்







