ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்
ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், ஈரான் மீது நடத்த
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை தாம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், “நாளை ஈரான் மீது நடத்தவிருந்த தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம்
என அமெரிக்க இராணுவத்திற்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். எனினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய
உடன்படிக்கையொன்றை எட்ட முடியாவிட்டால், உடனடி அறிவித்தலின் மூலம் ஈரான் மீது முழுமையான, பாரியளவிலான அளவிலான தாக்குதலை
நடத்துவதற்கு தயாராக இருக்குமாறு அவர்களுக்கு மேலும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கையை எட்டுவதற்கு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் ட்ரம்ப்,
இதற்கு முன்னரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையொன்று மிக அருகில் உள்ளதாக நம்பிக்கை
வெளியிட்டிருந்ததுடன், உடன்படிக்கை எட்டப்படாவிட்டால் ஈரான் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என இதே போன்று எச்சரித்திருந்தார்.
அவரது சமூக ஊடகப் பதிவின்படி, கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்தத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துமாறு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பாலுள்ள அனைத்து நாடுகளுக்கும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்படிக்கையை இதன் மூலம் எட்ட முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் உடன்படிக்கையின் விபரங்களை அவர் வெளியிடவில்லை.
- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

- அமெரிக்க ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- இஸ்ரேலுக்கான 2.8 பில்லியன் டாலர் ஆயுதத் தொகுப்பிற்கு அமெரிக்கா ஒப்புதல்

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- சவூதி அரேபியாவின் குடிமைப் பாதுகாப்புப் படை பல நகரங்களில் அவசரகால எச்சரிக்கை

- ஏமன் சண்டையில் தங்களுக்குத் தொடர்பில்லை என ஈரான் மறுப்பு









