மருமகனை சுட்டு கொன்ற மாமா
மருமகனை சுட்டு கொன்ற மாமா அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்
அதிகாலை அவரது மாமனாரால் சுட்டுக் கொலை
திங்கட்கிழமை (27) அதிகாலை அவரது மாமனாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இஹலகம , கலென்பிந்துனுவேவ, பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய கரியப்பெரும முதியான்சேலாகே மஹிந்த
நவரத்ண பண்டார என்ற முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கல்கிரியாகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய போது தனது மனைவியையும் அவரது தந்தையையும் தாக்கியதற்காக 2024.11.22 அன்று
பணியில் இருந்து இடைநீக்கம்
பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகளின் கீழ் தனது மனைவியிடம் செல்ல நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று அதிகாலை குறித்த நபர் தனது மனைவியின் தந்தையின் வீட்டிற்குச் சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு
மனைவியை கோடாரியால் தாக்க முயன்ற போது மனைவியின் தந்தை குறித்த நபர் மீது வீட்டில் இருந்த ரைபிள் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஆம்புலன்ஸ் மூலம் கலென்பிந்துனுவெவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.










