விபத்தில் இளம் பெண் பலி
விபத்தில் இளம் பெண் பலி ,புத்தளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் பெண்கள் பலியாகி உள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
40 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இந்த விபத்தில் பலியாகி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பாலாவி ஊடாக கருப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் பவுசர் ஒன்று ,வீதியில் சென்று கொண்டிருந்த பெண் மீது திடீரென மோதியது .
இந்த வண்டி மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது பெண் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணை அதிகாரிகள் விசாரணை முடிந்ததும் சடலத்தை கையளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
சம்பவம் தொடர்பாக புத்தளம் போலீசார் திடீர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற வீதி விபத்தில் ஏழு பேர் பலியாகி வருகின்றனர் .
இந்த வீதி விபத்தினால் மாதம் ஒன்றுக்கு இருவருக்கு மேற்பட்டவர்கள் பலியாகியம் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்து வருகின்ற னர் .
ஆண்டுதோறும் 36.000க்கு மேற்பட்ட வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
ஆளுகின்ற அரசுகள் இந்த வீதிபத்துக்களை தடுக்க மறந்ததன் காரணமாகவே இவ்வாறான உயிர் பலிகள் இடம்பெற்று வருவதாகவும் ,சாரதிகளுக்கு உரிய முறை பயிற்சி வழங்கும் பீதி விதிமுறைகளை பின்பற்றாமல் இந்த விபத்து இனம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.













