முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்
முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள் முல்லைத்தீவில் இரண்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களை கவலையில் மூழ்கவைத்துள்ளது.
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணி
குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில்
மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.
மாஞ்சோலை வைத்தியசாலை
இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

- பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரான் பயணம்

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது









