ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று
ஜனாதிபதி வேட்பாளர்களின் நேரடி விவாதம் இன்று ,2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம் இன்று (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
‘March 12 Movement’ ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சி இன்று (07) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5 மணிவரை ‘அத தெரண’ மற்றும் ‘அத தெரண 24’ ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலமாக நேரலையாக ஒளிபரப்பப்படும். அத்தோடு, ‘அத தெரண’வின் சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்படும்.
இன்றைய விவாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, ‘சர்வஜன அதிகார’ ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பி. அரியநேத்திரன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
- இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த டிரம்பின் முக்கியக் கருத்து

- யானைக்கு விசாரணை தேவை சஜித் கோரல்

- முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவைக் கைது செய்ய பிடியாணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- அபராதம் செலுத்த இயலாததால் 1400 சிறையில் அடைப்பு

- சிற்றுண்டிகள் மற்றும் பரோட்டா விலைகள் உயர்வு

- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்

- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு

- ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்

- ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.








