தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள்
தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள் ,அனைவரையும் ஓட ஓட துரத்த வேண்டுமென தற்பொழுது தமிழ் மக்கள் தமது கருத்துக்களை ஆழமாக தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களது வீடுகளை ஏறி வந்து தட்டுகின்ற இவர்கள் தேர்தல் முடிந்தவுடன் டாட்டா காட்டிவிட்டு சென்று விடுகின்றனர்
அரசியல் லஞ்ச ஊழலில் பருத்து கொழுத்துக்கிடக்கும் இந்த வெள்ளை வேட்டிகள் யாவரையும் வேட்டிகளை உருவி ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் என ,கோபத்தோடு அகில உலக தமிழ் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழருடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதை விடுத்து, தனிநபர் குடும்ப வருமான சொத்துக்களை அதிகரித்து ,அதனூடாக தங்கள் குடும்பங்களை வளர்த்து வருவதான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றது.
விடுதலைக்காக எழுந்த ஒரு இனம் தனது விடுதலையை தொலைத்து அடிமைக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் சிக்கி வாழ்கின்ற இந்தக் காலப்பகுதியில்,
இவர்கள் தமது மக்களுடைய இனமான விடுதலை மறந்து தனிநபர் வருமானத்தில் கவனம் செலுத்தி வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
அர்ஜுனா இராமநாதன் என்ற ஒரு மருத்துவன் தன்னந்தனி ஆளாக நின்று மக்களுக்காக போராடுகின்ற பொழுது,
அவனை ஆதரிக்க மறந்து அவனை அழுத்தி அவனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் இந்த வெள்ளை வேட்டிகளை ஓட ஓட விரட்ட வேண்டுமென மக்கள் கொதிக்கின்றனர்.
எங்களது அர்ச்சனாவுக்கு ஆதரவு தர மறுத்ததாக காரணமாகவே இந்த வெள்ளை வேட்டிகள் தற்பொழுது மக்கள் மன்றில் விமர்சனத்திற்கு உள்ளாக நிலையிலும் வெறுத்து ஒதுக்கப்படுகின்றவர்களாலும் காணப்படுகின்றனர்.
ஆதலால் இந்த தேர்தலில் அவர்களை ஒதுக்கி விரட்டி அடிக்குமாறு மக்கள் அன்பு கட்டளை வேண்டி இருக்கின்றனர்.
இதனால் அரசியல்வாதிகள் அச்சத்தில் பதறிக் கொண்டிருக்கின்றனர்.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன

- இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நஷ்டத்தில்

- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன








