வாய்க்காலுக்குள் தடம் புரண்ட வான்
வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான் ,மூதூர் , பாலத்தோப்பூர் பகுதியிலுள்ள வாய்க்காலுக்குள் வேன் ஒன்று தடம் புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் வியாழக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது .
இதன்போது வேன் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
மூதூரிலிருந்து தோப்பூருக்குச் சென்று திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .
வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெற்று வருகிறது
மேலும் , இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
வாய்க்காலுக்குள் கவிழ்ந்த வான்
.இலங்கையில் இவ்விதமான வீதி விபத்துக்கள் அதிகம் இடம்பெற்று வருவதால் ,மக்கள் உயிர்பலி மற்றும் காயமடைந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
வீதி விதிமுறையை முறையாக பின்பற்றாது
வாகன சாரதிகள் வீதி விதிமுறையை முறையாக பின்பற்றாது செல்கின்ற நிலையால் இவ்விதமான வீதி விபத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன ,
வேகத்தின் காரணமாக சாரதியின் கட்டுப்படி இழந்து வான் வாய்களுக்குள் பாய்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது குறிப்பிட தக்கது .
















