யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை
Spread the love

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு தடை ,யாழ்ப்பாணத்தில் 10 வயது மாணவிகளுடன் துர்நடத்தையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் , தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவிகளுடன் தவறாக நடந்து கொண்டதாக

ஆசிரியர் கைது

பாதிக்கபப்ட்ட மாணவி ஒருவரின் பெற்றோர்களால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்க்கமைய, ஆசிரியர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார் .

குறித்த ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கபட்டுள்ள நிலையில் மன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விசாரணை அறிக்கை

மேலும் , சம்பவம் தொடர்பில் திணைக்களம் ஊடான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் , விசாரணை அறிக்கை கல்வி

அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , ஆசிரியருக்கு தனது பணியினை தொடர தடை விதிக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பற்று வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித சலனம் ஏற்பட்டுள்ளது

மாணவ்ர்களை ஆசிரியர்கள் இவ்விதம் நடத்தி கொள்வது போதை பொருள் காலாசாரார்த்தின் சீரழிவு என தெரிவிக்க படுகிறது .