20 000இற்கும் அதிகமானோர் பாதிப்பு
20 000இற்கும் அதிகமானோர் பாதிப்பு ,நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் 57 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,300 என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 57 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,300 ஆக பதிவாகியுள்ளது. குடும்பங்களாக கணக்கிடுகையில் 6,785 குடும்பங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒரு மரணம் பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் பதிவானதோடு, ஏனைய மரணம் பதுளை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும், 22 பாதுகாப்பு முகாம்களில் 1,165 பேர் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள்
நிலையம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களின் தலைமையில் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.”
- தேசிய தலைவர் பிரபாகரன் 72 வது பிறந்த நாள் National Leader Prabhakaran’s 72nd Birthday

- மோட்டார் சைக்கிள் திருட்டர்கள் 4பேர் கைது

- டி-56 ரக துப்பாக்கித் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரி துபாயில் கைது

- எரிபொருள் எண்ணெய் இன்றி திணறும் அனுரா அரசு Anura government struggling without fuel oil

- அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fall









