வீதி விபத்தால் 115 சிறுவர்கள் பலி
இந்த ஆண்டில் சுமார் 115 சிறுவர்கள் வீதி விபத்துகளில் இறந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வருடம் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.
சாரதிகளின் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.
“2022ஆம் ஆண்டில் 2,539 வீதி விபத்துகள் பதுவாகியுள்ளன. அத்துடன் இந்த வருடம் 10/15/2023 வரை 1,790 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் 18 வயதுக்குட்பட்ட 129 பேர் உயிரிழந்தனர். அதேநேரம் 115 சிறுவர்களையும்
வீதி விபத்தால் 115 சிறுவர்கள் பலி
இழந்துள்ளோம். இது மிகப் கவலைக்குரிய விடயமாகும். வீதி விபத்துக்களில் அதிக தொழிலாளர்களை நாம் இழக்கிறோம். மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகம். குறிப்பாக சிறுவர்களும் வீதி விபத்துக்களில்
இறக்கின்றனர். தாய் மற்றும் தந்தை ஹெல்மெட் அணிந்து தங்கள் மகனையோ மகளையோ நடுவில் வைத்து ஏற்றிச் செல்கிறார்கள்.
நடுவில் செல்லும் அவருக்கு ஹெல்மெட் இல்லை, அன்புள்ளவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள். விபத்து ஏற்பட்டால் அந்த பிள்ளைக்கே அதிக பாதிப்பு என்பதை உணர்ந்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை
- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது
- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்
- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்
- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது
- கூடா கங்கா மற்றும் ஜின் கங்காவிற்கு வெள்ள எச்சரிக்கைகள்
- நிரம்பி வழியும் குளங்கள் ஆபத்தில் மக்கள்
- வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தப் பகுதி
- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்
- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்

















