வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்
வாக்குச்சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம் ,கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களின் உத்தியோகபூர்வ தபால் வாக்குச் சீட்டுகள் அடங்கிய
பாதுகாக்கப்பட்ட பொதிகள் விநியோகம், இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்ட நடவடிக்கைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொழும்பு மற்றும் வன்னி மாவட்ட பத்திரப் பொதிகள் விநியோகம், நேற்று (25),
குறிப்பிட்ட மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் இடம்பெறும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2024 பொதுதேர்தலுக்கு 738,002 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.

- கல ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

- இலங்கை முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு அபாயம்

- கனமழையால் 14 பெரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன








