வவுனியாவில் தம்பதி வெட்டிக்கொலை
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று(30) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
செட்டிகுளம் பிரதானவீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபாரநிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்றயதினம் (29) இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபாரநிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது குறித்த தம்பதிகள் வியாபாரநிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று (30) காலை வியாபாரநிலையத்தை திறப்பதற்காக வருகைதந்த மகன் தனது தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
வவுனியாவில் தம்பதி வெட்டிக்கொலை
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைசேர்ந்த பசுபதிவர்ணகுலசிங்கம் வயது72 என்ற முதியவரும், அவரது மனைவியான 68வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக்கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்கநகை ஒன்றும் காணாமல்போயுள்ளதாக தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் இன்று (30) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என திருட்டில் ஈடுபடும் போது இடம்பெற்றதா என்ற கோணத்திலும் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- கப்பல்கள் மீது ஈரான் கடற்படை தாக்குதல் Iranian Navy attacks on ships
- ரியாத் மீதான ஹூதி தாக்குதலுக்கு லெபனான் பிரதமர் கண்டனம் Lebanese prime minister condemns Houthi
- டிரம்ப்பிற்கு அமெரிக்க நீதிபதி நிரந்தரத் தடை US judge grants permanent ban to Trump
- சனா விமான நிலையம் அருகே வான்வழித் தாக்குதல்கள் air strikes near Sanaa airport
- ஏமன் பேருந்துகள் மற்றும் லாரிகள் மீதான சவுதி தாக்குதலில் 25 பேர் பலி
- சனாவில் சவுதி வான்வழித் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட குதிரைகள் பலி
- இஸ்ரேலியத் தாக்குதலில் ஹமாஸின் உள் பாதுகாப்புத் தலைவர் கொல்லப்பட்டதை காசா உறுதி செய்துள்ளது
- ஹோர்முஸ் ஜலசந்தியில் நான்காவது எண்ணெய்க் கப்பல் கண்ணிவெடியில் சிக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது
- கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும்
- ETA ஒப்புதல் இன்றி இலங்கைக்குள் நுழைய இலங்கை அனுமதிக்கிறது.

















