ரணிலோடு கூட்டு போராளிகள் கட்சி

ரணிலோடு கூட்டு போராளிகள் கட்சி
Spread the love

ரணிலோடு கூட்டு போராளிகள் கட்சி

ரணிலோடு கூட்டு போராளிகள் கட்சி ,இன்று ரணிலோடு நீங்கள் முன்னெடுத்த சந்திப்பு தொடர்பான செய்தியைப் பார்த்த போது மிகவும் வேதனையாக இருந்தது.

பாம்புக்கும் நோகாமல், தடிக்கும் நோகாமல் அரசியல் செய்யும் வடக்கின் சாணக்கியர் தர்மலிங்கம் சித்தார்தன் மற்றும் மன்னார் இறையிலியலாளர்கள் செல்வம் போன்ற ஒரு அடிமையே தங்கள் மாவட்டத்திற்கு வேண்டும் என்று

ஜேசுபிரானிடம் வேண்டி பெற்ற அடைக்கலநாதன் செல்வத்தோடு இணைந்து இவ்வாறு ஒரு இழிநிலை அரசியல் செய்வதை விட தங்களின் ஊடகப் பேச்சாளர் துளசியை முறுகண்டியில் கச்சான் விற்றுப் பிழைக்கச் சொல்லுங்கள்.

உலகிலே ஆயுதப் போராட்டங்கள் வழிவந்த போராட்ட அமைப்புகள் ஜனநாயக வடிவம் பெறும்போது அவர்களின் வரலாறுகள் குறித்து ஆய்வு செய்யும்போது ரெலோ,புளெட் உள்ளிட்ட கட்சிகளின் துரோகம் நிறைந்த அரசியல் அணுகுமுறைகள் வாந்தி எடுக்கும் அளவுக்கு உள்ளது.

செல்வம் சித்தார்த்தனின் துரோக அரசியலுக்குள் நீங்களும் போய் சிக்குண்டு கிடக்கிறீர்களே உங்களின் அறம் எனக்குத் தெரியும்.

ஆனால் துளசி போராளிகள் கட்சியை சரியான திசைவெழியில் கொண்டு போக உங்களை ஒருபோதும் விடமாட்டார்.

சில வேளைகளில் நீங்களும் அமைதியாக அவரின் துரோகத்துக்கு ஒப்புதல் கொடுத்து கொண்டு பின்னாலே இழுபடுகிறீர்களோ தெரியவில்லை இறைவனுக்குத் தான் அண்ணா வெளிச்சம்.

துளசி நடவடிக்கைகள் தொடர்பில் அதிக விமர்சனம் உள்ளது. உண்மையில் செல்வம், சித்தார்த்தன், துளசி உள்ளிட்டவர்கள் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதைவிட பிச்சை எடுத்து வாழலாம.

அல்லது உடம்பில் அவர்களுக்கு கொஞ்சம் தென்பு இருந்தால் முருகண்டியில் கச்சான் விற்றால் கூட மாதம் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று அங்குள்ள வியாபாரிகள் கூறுகிறார்கள்.

உங்களை நம்பி வந்த சிவில் சமூகத்தையும், பொதுக் கட்டமைப்பு என்ற கருத்தியலிலுக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்கள் தொடக்கம் அனைத்து தமிழ் உணர்வாளர்களையும், தமிழர் அரசியல் சரியான பாதையில் நகரும்

என்று நம்பிக்கையோடு காத்திருந்த எமது மக்களையும் இன்று நீங்கள் ரணிலை சந்தித்தன் மூலம் ரணிலோடு சேர்ந்து, சுமந்திரனும் கைதட்டி சிரிக்கும் அளவுக்கு சிவில் சமூகத்தை ஊடக சந்தையில் சாந்தி சிரிக்கும் அளவிற்கு அம்மணத்தோடு விட்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு உண்மையில் நெஞ்சிலே தில் இருந்தால் 2013 வருட இறுதிக்குள் அரசியல் தீர்வு இல்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் என்று நீ நாடாளுமன்றத்தில் முளங்கினாயே ஏன் இன்னும் 2013 வரவில்லையா?

அல்லது ஏன் நீ இன்னும் உண்ணாவிரதம் இருக்கவில்லை? அல்லது உண்ணாவிரதம் இருந்து நீ செத்துப்போய் ஆவியாகத் தான் இன்று ரணிலை சந்தித்தாயா? என்று செல்வம் அடைக்கலநாதனிடம் கேளுங்கள்.

உண்மையான போராளிகளாக இருப்பவர்கள் இவர்களின் மூச்சுக்காற்றுக் கூடப் படக்கூடாது என்று நினைப்பார்கள் அவ்வளவு தூரம் பொய்யர்கள் உண்மையில் செல்வத்துக்கு ஆங்கிலம் தெரிந்தால் இன்று அமெரிக்க

ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இல்லை செல்வம் அடைக்கலநாதன் தான். அந்த அளவுக்கு உடம்பு முழுவதும் துரோக அரசியல் விசம் போல் படர்ந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதி என்று விழித்துப் பேசிய சம்பந்தனுக்கே போராளிகள் கட்சி துளசி ஒப்பாரி வைத்து அறிக்கை விட்டவர் அல்லவா? அவரிடம் எப்படி தியாகங்களை எதிர்பார்ப்பது?

சம்பந்தர் மாவீரர்களையும் தானே பயங்கரவாதிகள் என்று கூறினார் அப்படி என்றால் சம்பந்தரின் கூற்றுடன் போராளிகள் கட்சி துளசி ஒத்துப் போகிறாரா? நவம்பர் 27 இல் விளக்கு கொளுத்தும் போது துளசிக்கு கொஞ்சம் கூட இதயம் கனக்காதா?

அண்ணா உங்கள் மனசாட்சிக்கு சொல்லுங்கள் பேராசிரியர் கணேசலிங்கம் சேர் ,திரு மாஸ்டர், சோதிலிங்கம் சேர் உள்ளிட்டவர்கள் ரணிலுடன் மேற்கொண்ட சந்திப்பை சரி என்று சொன்னால் நான் எழுதியதை பின் வாங்குகிறேன்.

அரசறிவியலில் நிபுணத்துவம் பெற்ற அவர்கள் இன்று நீங்கள் மேற்கொண்ட சந்திப்பு குறித்து சரி என்று ஒரு வார்த்தை சொல்லட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் அவர்கள் யாரும் உங்களுக்கு முன்னால் சொல்ல மாட்டார்கள். உண்மையில் சிவில் சமூகம் அனைத்து கிராமங்களிலும் கிளை பரப்பி ஒரு பலமான அமைப்பாக இன்று இருந்தால்


இத்தகைய துரோகங்கள் ஒருபோதும் நிகழாது அரசின் அடகு முறைகளுக்கு எதிராக மட்டுமல்ல தமிழ் கட்சிகளின் இத்தகைய துரோகங்களுக்கும் எதிராகவும் மக்கள் போராட்டம் இடம்பெறும் அல்லவா?

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே மீண்டும் கூறுகின்றேன். இவ்வாறு ஒரு வாழ்க்கை வாழ்வதைவிட இன்று தமிழ்ப் பொது வேட்பாளர்


கட்டுப்பணம் செலுத்திய நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளரை திட்டமிட்டு பலவீனப்படுத்தி ரணிலுக்கு வெள்ளையடித்து பெட்டிகளோடு,புதிய சாராய கடைகளுக்கும் அனுமதி பெற வேண்டும் என்ற இலக்கோடு ரணிலின் ஊடகப் பேச்சாளர் போல

தந்திரமாக பேட்டி கொடுத்த ரெலோவின் ஊடகப் பேச்சாளரிடம் சொல்லுங்கள் இவ்வாறு உனது வாயை துரோகத்திற்காக

வாடகைக்கு விடுவதை விட உனக்கு இருக்கும் அழகிற்கும், கணக்கியல் அறிவிற்கும் கொழும்பு கோல்பேஸ் கடற்கரையில் பலூன் விற்றுப் பிழைக்கலாம் தானே என்று கூறுகிறார்கள் என்று.

இவ்வாறு அந்த சமூக ஊடக பதிவு கூறுகிறது.