ரசியா பழிவாங்கு தாக்குதல் – உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு

ரசியா பழிவாங்கு தாக்குதல் - உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு
Spread the love

ரசியா பழிவாங்கு தாக்குதல் – உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு

ரசியாவின் கிராமிய பகுதியில் உள்ள மிக பெரும் பாலத்தை , உக்கிரேன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் மூலம் உடைத்து அழித்தது .

அதற்கு பழிவாங்கும் பதிலடியாக, உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள மிக முக்கிய, பாலங்களை இலக்கு வைத்து ரஷியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது .

ரசியா ஜனாதிபதி புட்டீனின் , நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர் பகுதியில் உள்ள, முக்கிய பகுதிகளை முடக்கும் தாக்குதலை ரசியா இராணுவம் ஆரம்பித்துள்ளது .

தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட ஏவுகணைகள் ,இதே பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .

தொடர்ந்து கீவ் பகுதி ரசியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் ,அந்த பகுதி குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .

பல அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் , முக்கிய பகுதிகள் இடிந்து காண படுகின்றன .

எங்கும் மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் .

சும்மா கிடந்த ரசியாவை சொறிந்த, உக்கிரேனுக்கு ரசியா ஜனாதிபதி புட்டீனின் ,நேரடி கட்டளையின் கீழ் தாக்குதல் இடம்பெற்று வருவதால் உக்கிரேன் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

அமெரிக்கா,மற்றும் பிரிட்டன் தோளில் நின்று ஆடிய ,உக்கிரேனை பெரும் ஆபத்தில் சிக்க வைத்து ,தமது ஆயுதங்களை விற்பனை செய்திடும் ஆட்டத்தை அமெரிக்கா பிரிட்டன் ஆரம்பித்துள்ளது .

இவர்களின் இந்த இராணுவ ,உளவு சதியை புரியாது உக்கிரேன் ஜனாதிபதி சிக்கியுளளார் என்பதே களமுனையாக உள்ளது .

Leave a Reply