யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு தினம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு தினம்
Spread the love

யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு தினம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு தினம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக

திலீபனின் 38 வது நினைவு தினம்

தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து

மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள்

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும்

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்,

ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ்

நிலையங்களை திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து,

தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையிலான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.