பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைப்பு
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைப்பு ,இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைக்கவுள்ளது.
இதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 283 ரூபாவாகும்.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அதன் புதிய விலை 319 ரூபாவாகும். அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தங்களுக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை

- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது

- ஹொரானாவில் சடலம் மீட்பு

- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது

- நீதிபதிகள் வருமான வரி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது









