பிரிட்டனில் அதிக விலையில் பொருட்களை விற்ற தமிழர் கடைகள் உள்ளிட்டவைக்கு பல்லாயிரம் தண்டம்,

Spread the love

பிரிட்டனில் அதிக விலையில் பொருட்களை விற்ற தமிழர் கடைகள் உள்ளிட்டவைக்கு பல்லாயிரம் தண்டம்

பிரிட்டன் ,லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் வேகமாக பரவி வரும் வைரஸ் பீதியால் மக்கள் அதிக பொருட்களை வாங்கிய வண்ணம் செல்கின்றனர்

இவ்வேளை கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலையில் பொருட்களை விற்பனை புரிந்த தமிழர் கடைகள் உள்ளிட்ட பல

ஆசியா நாட்டவர்கள் கடைகள் உள்ளிட்டவைக்கு பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை தண்டம் அறவிட பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

ஈஸ்டாம் ,இல்பேர்ட்,மற்றும் லண்டனின் பல பகுதிகளில் இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் வசம் இவர்கள் சிக்கியுள்ளனர்

அண்மைய நாட்களில் ஒரு டொயிலட் சிங்கிள் ரோல் ஒன்று 1,69 சத்தத்திற்கு விற்க பட்டது ,இவ்வாறு விற்க பட்ட அந்த கடைகள்

தமிழருடையதாக இருந்தது ,நான்கு ரோல்கள் உள்ள ஒரு பை ஒரு பவுண்டுகளாக விற்பனையாகின

மேற்படி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையயில் ,அதிக விலையில் பொருட்களை விற்ற

கடைகள் தொடர்பாக நுகர்வோர் அதிகார சபைக்கு தெரிவிக்க பட்ட நிலையில் இந்த திடீர் முற்றுகை இடம்பெற்றுள்ளது

தொடர்ந்து பல முறைப் பாடுகள் சென்ற வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது ,பொருட்களை பதுக்கி அதிக விலையில்

விற்பனை செய்யும் நோக்கில் தமிழர் கடைகளும் ஈடுபட்டுள்ளதை நேரடியாக அனுபவிக்க முடிந்தது .

இவ்வாறன கடைகளுக்கு இந்த கொரனோ அவசர கால நிலை முடிவுற்றதும் மக்கள் செல்ல போவதில்லை என பல நூறு மக்கள் பேசிக்கொள்வதை அவதானிக்க முடிந்தது

கண்மூடித் தனமான இவர்கள் தற்கால செயல் பாடுகள், வருங்காலத்தில் இவர்கள் வணிகத்தில் பெரும் வீழ்ச்சியை

ஏற்படுத்த உள்ளதையே அறியாது நம்ம தமிழர்கள் ஈடுபட்டுள்ளமை விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் அதிக விலையில்
பிரிட்டனில் அதிக விலையில்

Leave a Reply