பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பூ

Spread the love

காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு பெயர்ச்சியாகி பாரதிய ஜனதா கட்சி (பாஜக)யில் இணைய ​போகிறார்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து

பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்

பாஜகவில் இணைய முடிவு எடுக்கும் முன்பு நீண்ட யோசனை செய்திருப்பதாக

தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குஷ்பு தனது கணவர் சுந்தர் சி உடன்

விமான நிலையத்திற்கு வந்த போது அவரை சூழ்ந்த செய்தியாளர்கள்,

நீங்க பாஜகவில் சேரப்போவதாக சொல்கிறார்களே என்று கேட்க அதற்கு நோ கமெண்ட் என்று சொன்னார்.

இப்போதும் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கும்

இப்போதைக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லி விட்டு கணவர் சுந்தர் சி உடன் விமானத்தில் பறந்தார் குஷ்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *