தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை களை இஸ்ரேல் விடுத்துள்ளது
ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்
ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னதாக, தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது
கிராமங்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் வெளியேற்ற எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. தயிர் தெப்பா, அப்பாஸியே, புர்ஜ் ரஹால், மாரூப், பாரிஷ்,
அர்ஸூன், ஜன்னதா, ஸ்ராரியே மற்றும் அய்ன் பால் ஆகிய கிராமங்களின் குடியிருப்பாளர்கள், குறிவைக்கப்பட்ட
பகுதிகளிலிருந்து குறைந்தது ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
“ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதால், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) அதற்கு எதிராக
பலவந்தமாக நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது. மேலும், உங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை,” என்று
இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர்
குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை செய்தியில் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அத்ராயீ கூறினார்.
தொடர்ந்து போர்நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும், தெற்கு லெபனான் முழுவதும் துப்பாக்கிச் சண்டைகள் தீவிரமடைந்துள்ள
நிலையில், இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்வதால் இந்த வெளியேற்ற அறிவிப்புகள் வந்துள்ளன.
- ஈரானியக் கப்பல் மீதான தாக்குதலில் ஒருவர் பலி மூவர் காயம்

- பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இரு-அரசுத் தீர்வுக்கு அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ்

- குளியாபிட்டியவில் துப்பாக்கி, கையெறி குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் கைது

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் நாளை தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ பயணம்

- பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டறிக்கைக்கு ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு









