தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை

தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை
Spread the love

தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை

தீவு தழுவிய மின்வெட்டு குறித்த விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் தேசிய மின் அமைப்புச் செயலகம் (NSO) தலைவர்

நேற்று (17) ஏற்பட்ட திடீர் தீவு தழுவிய மின்வெட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தேசிய மின் அமைப்புச் செயலகம் அறிவித்துள்ளது.

விசாரணை அறிக்கை ஒரு மாதத்திற்குள் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கும் (PUCSL) மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கும்

சமர்ப்பிக்கப்படும் என்று நிறுவனத்தின் தலைவர் பிரதீப் பிரியதர்ஷன தெரிவித்தார்.

அட தெரனா விடுத்த கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான அவசியமான

நடவடிக்கைகளையும் இந்த அறிக்கை பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.